மாநில அளவில் நடைபெறும் சப்-ஜூனியர் கராத்தே போட்டிக்கு மாணவர்கள் தேர்வு

மாநில அளவில் நடைபெறும் சப்-ஜூனியர் கராத்தே போட்டிக்கு மாணவர்கள் தேர்வு நடைபெற்றதுபோட்டித்தேர்வில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7 வயது முதல் 14 வயது வரை உள்ள ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கராத்தேவில் ஈடுபட்டனர்.
மாநில அளவில் நடைபெறும் சப்-ஜூனியர் கராத்தே போட்டிக்கு மாணவர்கள் தேர்வு
Published on

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்ட கராத்தே சங்கத்தின் சார்பாக மாநில அளவில் நடைபெறும் சப்-ஜூனியர் கராத்தே போட்டியில் கலந்துகொள்வதற்கான போட்டித்தேர்வு வேலாயுதம்பாளையம் மலைநகரில் உள்ள கராத்தே பயிற்சி மையத்தில் நடைபெற்றது. கராத்தே போட்டித்தேர்வில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7 வயது முதல் 14 வயது வரை உள்ள ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கராத்தேவில் ஈடுபட்டனர். இதில் கியோஷி சரவணன் மற்றும் ரென்சி செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு கராத்தே போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளை தேர்வு செய்தனர். மாவட்ட அளவில் தேர்வாகியுள்ள மாணவ, மாணவிகள் சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொள்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளை கராத்தே பயிற்சி சீனியர் மாணவர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com