என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபச்சாரத்தில் ஈடுபட்ட கரூர் பெண் கைது
    X

    விபச்சாரத்தில் ஈடுபட்ட கரூர் பெண் கைது

    • கரூர் பெண் மணப்பாறையில் பெண்களை வைத்து விபச்சார தொழில் நடத்தியதால் கைது செய்யப்பட்டு உள்ளார்
    • வீட்டை வாடகைக்கு பிடித்து விபச்சாரம் நடத்தியது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது

    மணப்பாறை,

    மணப்பாறையில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடைபெறுவதாக மணப்பாறை மகளிர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருத்திகா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது கரூர் மாவட்டம், சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த பானுமதி(வயது 50) என்பவர், பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மைலம்பட்டியை சேர்ந்த அமீர்(23), சல்மான்கான்(24) ஆகியோரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×