என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெல்லம் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    வெல்லம் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

    • வெல்லம் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
    • வெல்லம் உற்பத்தி குறைவால் விலை உயர்ந்துள்ளது.

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர். கரும்புகள் மூலம் அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டு சக்கரை தயாரித்து 30 கிலோ சிப்பம் ஆக்குகின்றனர். தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் வியாபாரிகளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏலம் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

    வெல்லம் சிப்பங்களை வாங்கி தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,280-க்கும், அச்சுவெல்லம் ரூ.170-க்கும் விற்பனையானது. நேற்று ஒரு சிப்பம் ரூ.1,250-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,220-க்கும் விற்பனையானது. வெல்லம் உற்பத்தி குறைவால் விலை உயர்ந்துள்ளது. இதனால் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×