என் மலர்tooltip icon

    கரூர்

    • கரூரில் வீட்டில் வைத்து இருந்த 10 பவுன் நகைகள் மாயமானது
    • கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்

    கரூர்,

    கரூர் செங்குந்தபுரம் 10-வது கிராஸில் வசித்து வருபவர் ஜெகதீபன் (வயது 54). இவர் தனது வீட்டில் இருந்து வெளியே சென்று இருந்த சமயம் அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் யாரோ ஒருவர் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் மதிப்புள்ள தங்க செயினை எடுத்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர். இதன் மதிப்பு ஒன்றரை லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. பின்னர் இது குறித்து ஜெகதீபன் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் அவரது வீட்டிற்கு விரைந்து சென்ற கரூர் நகர சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் வீட்டில் அருகில் இருந்தவர்களிடமும், வீட்டின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தப்பி ஓடிய கொள்ளையனை தேடி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் கரூரில் பெரிதும் பரபரப்பு ஏற்பட்டது.

    • புகலூர் ரயில்வே கேட் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது
    • வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் புகளூர் ரயில்வே நிலையம் அருகே நடுத்தெரு பகுதி சேர்ந்தவர் மூர்த்தி (48). இவர் புகளூர் டிஎன்பிஎல் காகிதாஆலையில் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வளர்மதி(40) அருகாமையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந் நிலையில் வேலைக்கு செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு மூர்த்தியும் ,அவரது மனைவி வளர்மதியும் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் மூர்த்தி வேலை முடித்துவிட்டு வேலாயுதம்பாளையத்தில் உள்ளஅவரின் அக்காவை பார்த்துவிட்டு இரவு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோவில் லாக்க்கர் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மூர்த்தி இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • மயில் குறுக்கே வந்ததால் டூவீலரிலிருந்து விழுந்த பெண் படுகாயம்
    • தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

    கரூர், 

    குளித்தலை அடுத்த, மேட்டுதிருக்காம் புலியூர் தெற்கு தெருவை சேர்ந்த நாகராஜன் மனைவி பிருந்தாதேவி (வயது 30). இவரது உறவினர், சுக்காம்பட்டியை சேர்ந்த பிரதீப் (27), என்பவருடன், 'ஹீரோ ஸ்பிளண்டர்' டூவீலரில், பிருந்தாதேவி அமர்ந்துகொண்டு, இரும்பூதிப்பட்டி-தரகம்பட்டி நெடுஞ்சாலை, பஞ்சப்பட்டி-குமுளி சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, குறுக்கே மயில் பறந்து வந்ததால், திடீரென பிரேக் பிடித்தபோது, டூவீலரில் அமர்ந்திருந்த பிருந்தாதேவி தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அருகிலி ருந்தவர்கள் அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக, கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

    • குளித்தலை அருகேபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்
    • அரசு பணியாளரை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்தாக வாக்கு பதிவு

    கரூர், 

    குளித்தலை அடுத்த, தோகைமலை காவல்நிலைய எஸ்.ஐ., தங்கவேல் பணியில் இருந்த போது, சொத்துக்கு சேதம் விளைவித்ததாக, ஆர்.டி.மலை, மேல புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாய தொழிலாளி ராஜிவ்காந்தி(37) என்பவர் மீது வழக்குப்பதிந்து, பிணையத்தில் விடுவித்து உள்ளார். பிணையத்தில் விடுவிக்கப்பட்ட ராஜீவ்காந்தி, எஸ்ஐயை மிரட்டி உள்ளார். இதையடுத்து, அரசு பணியாளரை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதியப்பட்டு, ராஜீவ் காந்தி கைது செய்யப்பட்டார்.

    • குளத்துப்பாளையம், காளிபாளையம் பகுதிகளில் கால்நடைகளுக்கான பெரியம்மை நோய் தடுப்பூசி முகாம்
    • கால்நடைகளுக்கு புரதம் சத்து நிறைந்த பசுந்தீவன உற்பத்தி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

    வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் நொய்யல் கால்நடை மருத்துவமனை சார்பில் குளத்துப்பாளையம், காளிபாளையம் பகுதிகளில் கால்நடைகளுக்கான பெரியம்மை நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பாஸ்கர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மண்டல உதவி இயக்குனர் அல்லி அருள்குமாரி முன்னிலை வைத்தார். நொய்யல் கால்நடை மருத்துவமனை மருத்துவர் டாக்டர் உஷா தலைமையில் உதவியாளர் மாலதி கொண்ட குழுவினர் முகாமில் கலந்து கொண்ட சுமார் 200க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசி போட்டனர். அதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்தும், கால்நடைகளுக்கு புரதம் சத்து நிறைந்த பசுந்தீவன உற்பத்தி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • வேலாயுதம்பாளையம் பகுதிகளில் கனமழை மின்தடையால் வியாபாரிகள் பொதுமக்கள் அவதி
    • இருப்பினும் சாலையோர வியாபாரிகள், வாகன ஓட்டிகள் பாதிப்படைந்தனர்.

    வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் புகளூர் துணைமின் நிலையத்திலிருந்து வேலாயுதம்பாளையம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, தவிட்டுப்பாளையம், நடையனூர், சேமங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மின் பாதையில் நேற்று மாலை பெய்து கொண்டிருந்த கனமழையின் காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளது. என்னடியில் கனமழையின் காரணமாக வேலாயுதம்பாளையம் மின் பாதையில் புகழி மண்டபம் அருகில் இன்சுலேட்டர் பழுதாகிவிட்டது. இதன் காரணமாக வேலாயுதம்பாளையம், தளவாபாளையம், சேமங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளது. இதனால்

    கடைகாரர்கள், வியாபாரிகள்

    மின்சாரம் இல்லாததால் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

    தொடர்ந்து மின் பாதையில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் மின்வாரிய தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    இது குறித்து மின்வாரிய உதவி பொறியாளர் தெரிவிக்கையில் விரைவில் மின் பாதையில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கி மின் சப்ளை கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

    அதே போல் கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம், நன்செய் புகளூர், கட்டிப்பாளையம், நத்தமேடுப்பாளையம், திருக்காடுதுறை, பாலத்துறை, வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், கடம்பங்குறிச்சி, நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், நடையனூர், கரைப்பாளையம், மூலிமங்கலம், கொங்கு நகர், பழமாபுரம், குட்டக்கடை, புன்னம் சத்திரம், உப்பு பாளையம், குப்பம், அத்திப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலையும், மீண்டும் மாலையும் மழை பெய்தது.

    இந்நிலையில் பொதுமக்களை தொடர்ந்து வாட்டி வரும் வெயிலின் தாக்கம் காரணமாக வெப்ப சீதோசன நிலை இருந்து வந்தது.காலை மற்றும் மாலை நேரத்தில் மழை பெய்து வருவதால் வெப்ப சீதோஷ்ண நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அதிக வெப்பத்தின் தாக்கத்தின் காரணமாக பணபயிர்கள் வாடிய நிலையில் இருந்தது.நேற்று காலை மற்றும் மாலை நேரத்தில் பெய்த மழையால் வாடிய பயிர்கள் துளிர்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் சாலையோர வியாபாரிகள், வாகன ஓட்டிகள் பாதிப்படைந்தனர்.

    • களூர் ரயில்வே கேட் அருகே உள்ள ஒரு பெட்டி கடையில்பான் மசாலா, குட்கா பறிமுதல்
    • விற்பனை ெசய்தவர்கள் மீது வழக்கு பதிவு

    வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் புகளூர் ரயில்வே கேட் அருகே உள்ள ஒரு பெட்டி கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம் பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா போன்ற பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து விற்பனை செய்த செக்குமேடு பகுதியைச் சேர்ந்த ராஜீவ் (வயது60) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலாயுதம்பாளையம் அருகே அண்ணா நகர் பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை வைத்துக்கொண்டு விற்பனை
    • 5 மது பாட்டில்களை பறிமுதல்

    வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே அண்ணா நகர் பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை வைத்துக்கொண்டு விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ஒருவர் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்துக் கொண்டு விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மணி என்கிற மகாமுனி (வயது42) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாநகர் மாவட்ட செயலாளர் அரவை எம். முத்து, கரூர் புறநகர் மாவட்ட செயலாளர் எஸ். பி. சிவம் ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார்
    • அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும்

    கரூர்

    கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் மாநகர் மாவட்ட செயலாளர் அரவை எம். முத்து, கரூர் புறநகர் மாவட்ட செயலாளர் எஸ். பி. சிவம் ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தொண்டர் அணி துணைச் செயலாளர் சாகுல் ஹமீது கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர். ஆர்ப்பாட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும், தி.மு.க. தேர்தல் வாக்குறுதியின் படி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்க வேண்டும், கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரை பெற்று தர வேண்டும், கரூர் காவிரி ஆற்றில் மணல் மற்றும் கல்குவாரிகளில் அனுமதி மீறி அதிக அளவு எடுப்பதை தடுத்து கனிம வளத்தை பாதுகாக்க வேண்டும், கரூர் அமராவதி ஆற்றில் சாயக் கழிவு கலப்பது, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. கரூர் மாநகர் மாவட்ட அவைத்தலைவர் முருகன் சுப்பையா, புறநகர் மாவட்ட அவை தலைவர் ரங்கநாதன், மாநகர் மாவட்ட பொருளாளர் அனிதா ஆனந்த், புறநகர் மாவட்ட பொருளாளர் ராஜசேகரன், கரூர் நகர செயலாளர்கள் ஆரியப்பராஜா, சிவகுமார், ரவிக்குமார், அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சின்னசாமி, கடவூர் ஒன்றிய செயலாளர் ஆல்வின், குளித்தலை நகர செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    • குளித்தலை அருகே டிராக்டர் ஏறி இறங்கியதில் தொழிலாளி பரிதாபமாக பலியானார்
    • தோகைமலை போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரணை

    கரூர், 

    குளித்தலை அடுத்த, நல்லுார் பஞ்சாயத்து, கொன்னாச்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பரிமணம் (வயது 65). இவரது மனைவி வெள்ளையம்மாள் (42) இருவரும் கரும்பு வெட்டும் தொழிலாளிகள். பரிமணம், ராக்கம்பட்டி-வீராச்சாமி தோட்டம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, முதலிகவுண்டனுாரை சேர்ந்த விஜய் என்பவர், டிராக்டரை ஓட்டி வந்தார். அவர் டிராக்டரை பின்னோக்கி ஓட்டிய போது, பரிமணம் மீது டிராக்டர் ஏறி, இறங்கியது. இதில் சம்பவ இடத்தி உடல் நசுங்கி பரிமணம் உயிரிழந்தார். தோகைமலை போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சின்னாண்டாங்கோவில் பகுதியை சேர்ந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
    • வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்

    கரூர், 

    கரூர், சின்னாண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 34). இவர், கடந்த ஓராண்டாக வேலை கிடைக்காமல் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த ஜெயக்குமார், வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலாயுதம்பாளையம் சொட்டையூரில் காகித ஆலை ஊழியர் விபத்தில் சிக்கி படுகாயம்
    • சிமெண்ட் கலவை லாரி மோதியதால் விபத்து

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே புகளூர் திருவள்ளூர் நகர் 2-வது தெருவைபகுதியை சேர்ந்தவர் நாகராஜ்( வயது 53). இவர் புகளூர் டிஎன்பிஎல் காகித ஆலையில் பணியாற்றி வருகிறார். நாகராஜ் தனது மோட்டார் சைக்கிளில் சொட்டையூர் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது, ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி நாகராஜ் மீது மோதியது. படுகாயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நாகராஜனின் மனைவி பழனியம்மாள் (44) கொடுத்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ், லாரி டிரைவரான நாமக்கல், குப்புச்சிபாளையத்தை சேர்ந்த சரவணகுமார் மீது வழக்கு பதிந்து, லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×