என் மலர்
உள்ளூர் செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
- மாநகர் மாவட்ட செயலாளர் அரவை எம். முத்து, கரூர் புறநகர் மாவட்ட செயலாளர் எஸ். பி. சிவம் ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார்
- அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும்
கரூர்
கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் மாநகர் மாவட்ட செயலாளர் அரவை எம். முத்து, கரூர் புறநகர் மாவட்ட செயலாளர் எஸ். பி. சிவம் ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தொண்டர் அணி துணைச் செயலாளர் சாகுல் ஹமீது கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர். ஆர்ப்பாட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும், தி.மு.க. தேர்தல் வாக்குறுதியின் படி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்க வேண்டும், கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரை பெற்று தர வேண்டும், கரூர் காவிரி ஆற்றில் மணல் மற்றும் கல்குவாரிகளில் அனுமதி மீறி அதிக அளவு எடுப்பதை தடுத்து கனிம வளத்தை பாதுகாக்க வேண்டும், கரூர் அமராவதி ஆற்றில் சாயக் கழிவு கலப்பது, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. கரூர் மாநகர் மாவட்ட அவைத்தலைவர் முருகன் சுப்பையா, புறநகர் மாவட்ட அவை தலைவர் ரங்கநாதன், மாநகர் மாவட்ட பொருளாளர் அனிதா ஆனந்த், புறநகர் மாவட்ட பொருளாளர் ராஜசேகரன், கரூர் நகர செயலாளர்கள் ஆரியப்பராஜா, சிவகுமார், ரவிக்குமார், அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சின்னசாமி, கடவூர் ஒன்றிய செயலாளர் ஆல்வின், குளித்தலை நகர செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.






