என் மலர்
கரூர்
- வேலாயுதம்பாளையம் பகுதியில் வீடு வாடகைக்கு விடும் முன் போலீஸ் அனுமதி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
- போலீஸ் டிஎஸ்பி அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் ஜெயராமன் அறிவிப்பு
வேலாயுதம்பாளையம்,
வேலாயுதம்பாளையம் போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நொய்யல், குந்தாணிபாளையம், நத்தமேடு, புன்னம்சத்திரம், புன்னம், குட்டக்கடை ,காகித ஆலை,குறுக்கு பாளையம், மூலியமங்கலம், புகழூர், தவுட்டுப்பாளையம், கந்தம்பாளையம், கரப்பாளையம், திருக்காடுதுறை, நன்செய் புகளூர், தோட்டக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், தளவாபாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களாகிய தாங்கள், தங்களுக்கு சொந்தமான வீடுகளுக்கு புதிதாக வாடகைக்கு குடியமர்த்தும் நபர்களை பற்றிய முழு விபரம் தெரிந்தும், அவர்களது ஆதார்கார்டு, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை பெற்று முகவர்களை சரிபார்த்து குடியமர்த்த வேண்டும். முன்னதாக தாங்கள் வாடகைக்கு குடியமர்த்தும் நபர்களின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் நகல்களை கொண்டு வந்து வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.
அவர்கள் தங்களது வீடுகளில் வாடகைக்கு குடியிருக்கும் நபர்களின் முழு விபரத்தை சேகரித்து தங்களுக்கு ஒப்புதல் அளித்த பிறகு அவர்களை வாடகைக்கு குடிஅமர்த்த வேண்டும். மேலும் வாடகைக்கு குடியிருப்பவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பின் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து குற்றவாளிகள் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பகல் மற்றும் இரவு நேரங்களில் வீடுகள், நிதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை ரகசியமாக நோட்டமிட்டு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். தகவல்கள் தெரிவிக்க, 9498100797 என்ற வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலைய செல்போன் எண்ணிற்கு அழைக்கலாம்என்று அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் அந்த அறிவிப்பில் தெரிவித்து உள்ளனர்.
- க.பரமத்தி அருகே வியாபாரி ஒருவர் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளார்
- தவறாக நடக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்
கரூர்,
க.பரமத்தி அருகே, இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற, சோப்பு துாள் வியாபாரியை மகளிர் போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந் தவர் ராமச்சந்திரன் (வயது 37), சோப்புதுாள் வியாபாரி. இவர் கடந்த சில நாட்களாக, க.பரமத்தி அருகே முன்னுார் பகுதியில், சோப்பு துாள் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த, 12ல் முன்னூர் பஸ் ஸ்டாப் பகுதியில், 21 வயது இளம் பெண்ணின் கையை பிடித்து, தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து பெண் அளித்த புகார் படி, கரூர் ரூரல் மகளிர் போலீசார் விசாரித்து, ராமச்சந்திரனை கைது செய்தனர்.
- பெண்ணை காப்பாற்ற முயன்ற தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலியானார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கரூர்,
கரூர் மண்மங்கலம் அருகே உள்ள காதப்பாறையை சேர்ந்தவர் சத்தியபாமா. இவர் தனது வீட்டில் துவைத்த துணிகளை மின்கம்பம் அருகே காய போட்டு கொண்டிருந்தார். அப்போது அவர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது.இதனால் அவர் அலறி துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 48) ஓடிவந்து சத்திய பாமாவை காப்பாற்றுவதற்காக அவரை தள்ளி விட்டார். அப்போது சண்முகசுந்தரம் அங்கிருந்த மின்கம்பியை தொட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சண்முகசுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணை காப்பாற்ற முயன்றவர் மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தளவாபாளையத்திடில் கள்ள சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குட்கா பறிமுதல் செய்யப்பட்டது
- குட்கா விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவு
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தளவாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு குளிர்பான கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்று ஆய்வு செய்தபோது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், விற்பனை செய்த தளவாபாளையம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு கூட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்றது
- சாலைகளை சீரமைக்க கோரிக்கை
வேலாயுதம்பாளையம்,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு கூட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சேகர் தலைமை வகித்தார்.கூட்டத்தில் நகர செயலாளர் லட்சுமி காந்தன், நகர குழு உறுப்பினர்வேலுசாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.கிளை செயலாளர் இராமச்சந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட குழு உறுப்பினர் ராமசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-அரிக்காரம் பாளையம் அனாதீனம் என்னும் வகை நிலத்தை நத்தம் புறம்போக்கு வகை நிலமாக வகைமாற்றி இலவச பட்டா வழங்க வேண்டும். இந்திரா காலனி மற்றும் 1-வது வார்டு பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அதனை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகர குழு உறுப்பினர்கள் வளர்மதி, சுப்பிரமணி மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணைசெயலாளர் பெருமாள் நன்றி கூறினார்.
- பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலியானார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
வேலாயுதம்பாளையம்,
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே கூடலூர் மீனாட்சி பேட்டை வைத்தி முதலிதெரு பகுதியை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் பஞ்சமூர்த்தி (36). விவசாய கூலி தொழிலாளி. இவர் பாஸ்போர்ட் எடுப்பதற்காக, வெளியில் செல்வதாக கூறி விட்டு, வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். மதுரை -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனது பைக்கில், கரூர் மாவட்டம் புகளூர் அருகே மலையம்பாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பஞ்சமூர்த்தி ஓட்டி வந்த பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பைக்குடன் தூக்கி வீசப்பட்ட பஞ்சமூர்த்தி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான வேலாயுதம்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி, வழக்கு பதிந்து அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கந்தம்பாளையத்தில் மளிகை கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது
- உரிமையாளர்கள் பணத்தை கடையில் வைக்காததால் ஏமாந்த திருடர்கள் உணவு பொருட்களை சிதறடித்து சென்றனர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்- நொய்யல் செல்லும் தார் சாலையில் கந்தம்பாளையம் பகுதியில் செந்தூர் ராஜ் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வியாபாரத்தை முடித்துவிட்டு மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். செந்தூர்ராஜ் காலையில் வீட்டில் இருந்து வெளியில் வந்து பார்த்தபோது மளிகை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது தெரியவந்தது. கடைக்குள் சென்று பார்த்தபோது கடைக்குள் பொருட்கள் சிதறி கிடந்தது. ஆனால் கடைக்குள் பணம் இல்லாததால் அவர்களால் பணத்தை எடுக்க முடியவில்லை. மளிகை கடையில் இருந்த பொருட்களும் திருட்டுப் போகவில்லை. அதேபோல் பக்கத்தில் இருந்த கடையின் பூட்டையும் உடைக்கப்பட்டு கடைக்குள் சென்று தீவிரமாக தேடி உள்ளனர். ஆனால் அங்கும் பணம் எதுவும் இல்லாததால் திருடர்கள் அங்கிருந்த பொருட்களை கலைத்துவிட்டு ஏமாந்து சென்று விட்டனர்.இது குறித்து செந்தூர்ராஜ் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் வழக்கு பதிவு செய்து இருகடைகளின் பூட்டி உடைத்து திருட முயற்சி செய்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலாயுதம் பாளையம்,
புகளூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் பானுமதி தலைமையில் குடும்ப அட்டை திருத்த முகாம் நடைபெற்றது. முகாமில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் புகளூர் தாலுகாவிற்கு உட்பட்ட 27 வருவாய் கிராமங்களை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், முகவரி திருத்தம்,புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் கை பேசிஎண் மாற்றம் குறித்தும் மனுக்கள் கொடுத்து தீர்வு கண்டனர். அதேபோல் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகளின் குறைகள் குறித்தும் வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்தனர்.முகாம்காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் நடைபெற்றது.
- தகாத வார்த்தைகளால் பொதுமக்களுக்கு அர்ச்சனை செய்து போக்குவரத்திற்கு இடையூறு செய்தவர் கைது செய்யப்பட்டார்
- போலீசாரின் அறிவுரை ஏற்க மறுத்ததால் கைது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி பகுதியில் தார் சாலையில் நடுவில் நின்று கொண்டு பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்து கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டு ஒருவர் நின்று கொண்டிருப்பதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று சாலையின் நடுவில் நின்று கொண்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்து கொண்டிருந்தவரை, இடையூறு செய்யாமல் அந்த பகுதியில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தினார்கள். ஆனால் போலீசார் சொல்வதை கேட்காமல் நின்று கொண்டிருந்ததால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்த வீரமணி (43) என்பது தெரிய வந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- நொய்யல் ஆற்றில் மிதந்த முதியவர் பிணத்தை கைப்பற்றி விசாரணை
- ஆடு மேய்க்க சென்றவர் ஆற்றுக்குள் விழுந்தது எப்படி என்று போலீசார் விசாரணை
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி ( 67). இவர் தனக்கு சொந்தமான 4 மாடுகள், 10 ஆடுகளை தினசரி மேய்த்து வந்தார். வழக்கம்போல ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காக நொய்யல் பகுதியில் உள்ள வாய்க்கால் மேட்டு ஆற்றங்கரை பகுதிக்கு ஓட்டி சென்றுள்ளார். அங்கு ஆடு ,மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. ஆனால் மாலை 5 மணிக்கு மேல் ஆகியும் துரைசாமி வீட்டிற்கு திரும்பவில்லை. ஆடு, மாடுகளும் திரும்பி வரவில்லை.சந்தேகம் அடைந்த துரைசாமியின் மகன் விக்னேஷ் (23) என்பவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை .இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் துரைசாமி அணிந்திருந்த செருப்பு, அவரதுஉடை நொய்யல் ஆற்று கரையில் கிடந்துள்ளது. இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நொய்யல் ஆற்றின் இடது கரை வழியாக சென்றுள்ளனர். அப்போது அங்கு முதியவர் துரைசாமி இறந்த நிலையில் பிணமாக காவிரி ஆற்று தண்ணீரில் மிதந்து கொண்டிருந்ததை பார்த்து வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வேலாயுதம்பாளையம் போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து துரைசாமியின் பிரேதத்தை தண்ணீரில் இருந்து மீட்டனர். உடலை கைப்பற்றிய போலீசார் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- தவுட்டுபாளையம் ஆற்றில் உயிருக்கு போராடிய மாணவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
- 8 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உடற் கல்வியியல் கல்லூரியில் சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் அஜித் குமார்( 21), விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் கணேஷ்(18), அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் கமலேஷ் (18), சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் தீபன்ராஜ் (20), அதே பகுதியைச் சேர்ந்த ராமன் மகன் பெரியமலை (18 ), மலையன் மகன் அரவிந்த் (18 ),ராமர் மகன் அண்ணாமலை( 20 ),தென்காசி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் விமல்ராஜ் (18) ஆகிய 8 பேரும் பயின்று வருகின்றனர். இவர்கள் புன்னம் சத்திரத்தில் உள்ள தனியார் வாடகை கட்டிடத்தில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இந்நிலையில் 8 பேரும் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக மதியம் சுமார் 1.30 மணி அள தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுக்கு வந்து காவிரி ஆற்று பாலம் அருகே காவிரி ஆற்று தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக விமல்ராஜ் என்பவர் தண்ணீரில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது அவரை தண்ணீர்இழுத்துச் சென்றது. அவரைக் காப்பாற்றுவதற்காக கமலேஷ் மற்றும் அரவிந்த் ஆகியோர் சென்று அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். அப்போது மூன்று பேரும் கரைக்கு வர முடியாமல் ஆழமான தண்ணீரில் தத்தளித்துக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அதை பார்த்த அந்தப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுக்கு விரைந்து சென்று தண்ணீரில் சிக்கிக் கொண்டு வர முடியாமல் தத்தளித்துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விமல்ராஜ், கமலேஷ்,அரவிந்த் ஆகிய மூன்று பேரையும் பத்திரமாக மீட்டு காவிரி ஆற்றின் கரைக்கு கொண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- குளித்தலையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்
- லிப்ட் கேட்டு ஏறி, துணிகர செயலில் ஈடுபட்டவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டார்
கரூர்,
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் கோட்டையன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 29) இவர், தனக்கு சொந்தமான டூவீலரில், தோகைமலையில் இருந்து, திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, கள்ளை பிரிவு சாலை அருகே, டூவீலரை நிறுத்தி ஒருவர், 'லிப்ட்' கேட்டுள்ளார்.டூ வீலரை நிறுத்திய போது, திடீரென கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை பிடித்து, தோகைமலை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், புழுதேரி கிராமத்தை சேர்ந்த பிச்சைமணி, (47) என்பது தெரியவந்தது. இவரை, போலீசார் கைது செய்தனர்.






