என் மலர்
உள்ளூர் செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி
- பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலியானார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
வேலாயுதம்பாளையம்,
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே கூடலூர் மீனாட்சி பேட்டை வைத்தி முதலிதெரு பகுதியை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் பஞ்சமூர்த்தி (36). விவசாய கூலி தொழிலாளி. இவர் பாஸ்போர்ட் எடுப்பதற்காக, வெளியில் செல்வதாக கூறி விட்டு, வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். மதுரை -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனது பைக்கில், கரூர் மாவட்டம் புகளூர் அருகே மலையம்பாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பஞ்சமூர்த்தி ஓட்டி வந்த பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பைக்குடன் தூக்கி வீசப்பட்ட பஞ்சமூர்த்தி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான வேலாயுதம்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி, வழக்கு பதிந்து அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






