என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வியாபாரி
    X

    பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வியாபாரி

    • க.பரமத்தி அருகே வியாபாரி ஒருவர் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளார்
    • தவறாக நடக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்

    கரூர்,

    க.பரமத்தி அருகே, இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற, சோப்பு துாள் வியாபாரியை மகளிர் போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந் தவர் ராமச்சந்திரன் (வயது 37), சோப்புதுாள் வியாபாரி. இவர் கடந்த சில நாட்களாக, க.பரமத்தி அருகே முன்னுார் பகுதியில், சோப்பு துாள் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த, 12ல் முன்னூர் பஸ் ஸ்டாப் பகுதியில், 21 வயது இளம் பெண்ணின் கையை பிடித்து, தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து பெண் அளித்த புகார் படி, கரூர் ரூரல் மகளிர் போலீசார் விசாரித்து, ராமச்சந்திரனை கைது செய்தனர்.

    Next Story
    ×