என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலி
    X

    தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலி

    • பெண்ணை காப்பாற்ற முயன்ற தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலியானார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர்,

    கரூர் மண்மங்கலம் அருகே உள்ள காதப்பாறையை சேர்ந்தவர் சத்தியபாமா. இவர் தனது வீட்டில் துவைத்த துணிகளை மின்கம்பம் அருகே காய போட்டு கொண்டிருந்தார். அப்போது அவர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது.இதனால் அவர் அலறி துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 48) ஓடிவந்து சத்திய பாமாவை காப்பாற்றுவதற்காக அவரை தள்ளி விட்டார். அப்போது சண்முகசுந்தரம் அங்கிருந்த மின்கம்பியை தொட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சண்முகசுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணை காப்பாற்ற முயன்றவர் மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×