என் மலர்tooltip icon

    கரூர்

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணிபுரிந்த குளித்தலை நகராட்சி ஓட்டுநருக்கு பதக்கம் வழங்கப்பட்டது
    • பதக்கத்தை நகர்மன்ற தலைவர் வழங்கினார்

    குளித்தலை, 

    கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக 77 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு குளித்தலை நகராட்சி ஓட்டுனராக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய நகராட்சி ஓட்டுநர்கள் வீரக்குமார், கருப்பண்ணன் ஆகியோர்களின் பணியினை பாராட்டி நகராட்சிகளின் ஆணையரின் உத்தரவுப்படி தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை ஓட்டுனர் வீரக்குமாரிடம் குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவிராஜா வழங்கினார்.நிகழ்ச்சியில் முன்னாள் நகர் மன்ற தலைவர் மற்றும் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பல்லவிராஜா, நகராட்சி ஆணையர் பொறுப்பு மனோகரன் மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள், நகர்மன்ற அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தேர்தல் நேரம் வரும் போது மட்டுமே எங்களை உங்களுக்கு ஞாபகம் வருமா என எம்.பி. சரமாரி கேள்விகளால் திணறடித்த கிராமவாசி
    • மூக்கணாங்குறிச்சி கந்தசாரப்பட்டி பகுதி கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு

    கரூர்,

    சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது,இந்த கிராம சபை கூட்டத்தில் அரசியல் பிரமுகர் கலந்து கொள்வது வழக்கம்,இந்நிலையில் கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூக்கணாங்குறிச்சி கந்தசாரப்பட்டி பகுதி கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.எந்த நிலையில் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஜோதிமணி இடம் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தேர்தல் நேரம் வரும் போது மட்டுமே எங்களை உங்களுக்கு ஞாபகம் வருமா,வாக்கு கேட்க மட்டுமே வருகின்றீர்கள், அதன் பின்னர் இந்த பகுதியில் உங்களை பார்க்கவே இல்லை குறிப்பாக நன்றி கூற கூட வரவில்லை என்று காட்டமாக கேள்வி கேட்க,உடனே எம்பி ஜோதிமணி எம்பி தொகுதி உட்பட்ட பல்வேறு பகுதியில் நன்றி தெரிவித்து கொண்டு தான் வந்து கொண்டு உள்ளேன்,கரூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள கிராமங்களில் நன்றி தெரிவித்து கொண்டு வந்து உள்ளேன், நீங்கள் வேணும் என்று என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வந்தது போல் தெரிகிறது என கேள்வி கேட்ட நபரிடம் எம்பி ஜோதிமணி ஆவேசமாக பேசினார்.இந்த நிலையில் எதையும் கண்டு கொள்ளாத அந்த நபர் தொடர்ந்து வாக்கு சேகரிக்க மட்டும் தான் வருகிறீர்கள் ஃபோன் செய்தால் ஒரு முறையாவது எடுத்து உள்ளீர்களா?எம்பி என்கின்ற முறையில் நாங்கள் யாரிடம் முறையிடுவது என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். கிராம சபை கூட்டத்தில் குடியிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் சூழ்ந்ததால் சற்று பரபரப்பு நிலவியது - இந்த நிலையில் அப்பகுதியில் இருந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை ஆசுவாசப்படுத்தி அழைத்துச் சென்றனர்.கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த எம் பி ஜோதி மணியிடம் சரமாரி கேள்வி எழுப்பிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

    • கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஜோதிமணி எம்.பி.யிடம் சரமாரி கேள்வி எழுப்பிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    • போலீசார் ஜோதிமணியிடம் கேள்வி எழுப்பிய வாக்காளரை அழைத்து சென்றனர்.

    குளித்தலை:

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மூக்கணாங்குறிச்சி கந்தசாரப்பட்டி பகுதியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வருகை தந்தார்.

    அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஆண் ஒருவர், ஜோதி மணியை பார்த்து தேர்தல் நேரம் வரும்போது மட்டுமே எங்களை உங்களுக்கு ஞாபகம் வருமா? வாக்கு கேட்க மட்டுமே வந்தீர்கள். அதன் பின்னர் இந்த பகுதியில் உங்களை பார்க்க முடியவில்லை. நன்றி கூற கூட நீங்கள் வரவில்லை என காட்டமாக கூறினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோதிமணி தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளேன். நீங்கள் வேண்டும் என்று என்னிடம் தகராறு செய்கிறீர்கள் என ஆவேசமாக பதிலளித்தார்.

    ஆனால் அந்த நபரோ எதையும் கண்டு கொள்ளாமல் போன் செய்தால் ஒரு முறையாவது எடுத்துப் பேசி உள்ளீர்களா? எம்.பி. என்கிற முறையில் நாங்கள் யாரிடம் சென்று முறையிடுவது? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. கிராம சபை கூட்டத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் அவரை சூழ்ந்தனர்.

    பின்னர் போலீசார் ஜோதிமணியிடம் கேள்வி எழுப்பிய வாக்காளரை அங்கிருந்து அழைத்து சென்றனர். தற்போது கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஜோதிமணி எம்.பி.யிடம் சரமாரி கேள்வி எழுப்பிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • என்.புகளூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தவுட்டுபாளையம் குடிநீர் திட்ட பணிகளை நிறுத்த வலியுறுத்தப்பட்டு உள்ளது
    • அனைத்து கிணறுகளும் வறண்டு விட்டதாக குற்றச்சாட்டு

    நொய்யல்,

    என்.புகளூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் மதிவாணன் தலைமை வைத்தார்.நன்செய் புகழூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தொட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் புதியதாக அமைக்கப்பட்டுவரும் குடிநீர் திட்டத்திற்கு எதிராக நன்செய் புகளூர், தவிட்டுப்பாளையம், கட்டிப்பாளையம், அஹ்ரகாரம், புகழூர் கஸ்பா, மோதுகாடு ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இந்த குடிநீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தீர்மானத்தின் நகல்கள் கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்,( வெண்ணெமலை) மாவட்ட ஆட்சித்தலைவர், வருவாய் கோட்டாட்சியர் ( கரூர்) ,வருவாய் வட்டாட்சியர்( புகழூர்) ஊராட்சி மன்ற தலைவர் (நன்செய் புகளூர்). காவல் ஆய்வாளர்( வேலாயுதம் பாளையம்) அனுப்பி வைக்கப்பட்டது. நன்செய் புகழூர் பகுதியில் அனைத்து கிணறுகளும், ஆழ்துளை கிணறுகளும். சுத்தமாக வறண்டுவிட்டதால் பொதுமக்கள் இந்த முடிவினை எடுத்துள்ளதாக பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.கிராமசபை கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், செவிலியர்கள், வேளாண் துறை அதிகாரிகள், கால்நடைத்துறை மருத்துவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கரூர் தவிட்டுபாளையத்தில் கரூர் பறந்து கொண்டிருந்த தேசிய பறவை மயில்கள் திடீரென மயங்கி செத்தது
    • விஷம் வைத்து கொல்லப்பட்டதா என சந்தேகம்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நஞ்சை புகழூர் தவிட்டுப்பாளையம் -கட்டிப்பாளையம் செல்லும் சாலையில் தேசிய பறவையான ஆண் மயில் இரண்டு பறந்து சென்று கொண்டிருந்தது. அவ்வாறு பறந்து கொண்டிருந்த மயில் திடீரென இறக்கையை அடிக்க முடியாமல் தவித்தது. இறக்கையை அடிக்கமுடியாத நிலையில், மயங்கிய கீழே விழுந்தது. பறந்து கொண்டிருந்த மயில்களில் திடீர் என்று மயங்கி டிரான்ஸ்பார்மர் அருகே விழுந்ததை கண்ட பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். அப்போது மயில்கள் துடிதுடித்து செத்தது. இது குறித்து பொதுமக்கள் உடனே வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

    மயில்கள் விவசாய நிலங்களில் புகுந்து நாசப்படுத்தி வருவதால் சில விவசாயிகள் மயில்களுக்கு மருந்துவைத்து கொல்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு வைத்த மருந்தை தின்ற மயில்கள் பறக்கும்போதே மயங்கி விழுந்து செத்ததா? அல்லது டிரான்ஸ்பார்மர் அருகே பறந்ததால் மின்சாரம் ஏதும் தாக்கி மயில்கள் செத்ததா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய பறவையான மயில்கள் திடீரென செத்து விழுந்தது அப்பகுதி மக்களிடையே கலகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    • வீட்டில் விளக்கமாறு தயாரித்துக்கொண்டிருந்த பெண் திடீர் என மாயமாகி உள்ளார்
    • போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் தளவாபாளையம் வாங்கல் செல்லும் சாலை பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள்(73). இவரது மகன் நல்லுசாமி(47). கூலித் தொழிலாளி. இந்நிலையில் நல்லுசாமியின் தாயார் பழனியம்மாள் வீட்டில் இருந்து கொண்டு விளக்குமாறு தயாரித்து கொண்டிருந்தார். அப்போது நல்லுசாமி கூலி வேலைக்கு சென்று விட்டார் . வேலை முடிந்து மீண்டும் மாலை வந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவரது தாயார் பழனியம்மாளை வீட்டில் காணவில்லை. நல்லுசாமியின் குடும்பத்தினர் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பழனியம்மாளை தேடி பார்த்துள்ளனர். ஆனால் பழனியம்மாளை காணவில்லை. இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் நல்லுசாமி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நந்தகோபால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • கரூர் அரசு கல்வி நிறுவனங்கள் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது
    • பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதக்காரன் புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு கல்வி நிறுவனங்கள் சார்பில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. சுதந்திர தின விழாவிற்கு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினரும், அரசு கல்வி நிறுவனங்களின் தலைவருமான நடேசன் தலைமை வகித்து தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அரசு கல்வி நிறுவனங்களின் தாளாளர் கோதை நடேசன் முன்னிலை வைத்தார். விழாவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.மேலும் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதுகலைத் தமிழ் துறை அறம் தமிழ் மன்றத்தால் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாறுவேடப் போட்டி, பேச்சுப்போட்டி, நீயா? நானா?, பட்டிமன்றம் ஆகியவை நடத்தப்பட்டன. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரசு கல்வி நிறுவனங்களின் செயலாளர் இன்ஜினீயர் கண்ணன், கலந்து கொண்டு பாராட்டி பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார். அதைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக விளையாட்டு மற்றும் உடற்கல்வியியல் துறை சார்பில் பிரமிடு ,மௌன நாடகம் ,சிலம்பம், சிறப்பு அணிவகுப்பு ஆகியவை நிகழ்த்தப்பட்டன. இவ்விழாவில் நிகழ்ச்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் ரதிதேவி, அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஈனோக் ஜெபசிங் பெட்போர்ட் ,

    உடற்கல்வியியல் துறைத் தலைவர் குணா, இயக்குநர் அருள், பேராசிரியர் கௌசல்யா, தமிழ்த் துறை தலைவர் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர்கள் விழாவை ஒருங்கிணைப்பு செய்தனர். மேலும் அனைத்துத் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள் மாணவிகள் ஆகியோர்கள் பங்குபெற்று நிகழ்வை சிறப்பித்தனர்.

    • கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சியில் பெண்களிடம் தகராறு செய்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
    • வேலாயுதம்பாளையம் போலீசார் நடவடிக்கை

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் நிரஞ்சனா சிற்றரசன் (32). அதே பகுதியைச் சேர்ந்த அத்தை மகனான வேலு என்கிற வேல்முருகன் (42) என்பவருக்கும் நிரஞ்சனா சிற்றரசன் என்பவருக்கு சொந்தமான தென்னை மரத்தில் தேங்காய் வெட்டுவது தொடர்பாக இருவருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் வேலு என்கிற வேல்முருகன், நிரஞ்சனா சிற்றரசன் வீட்டிற்கு சென்று அவரையும் அவரது தாயாரையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து நிரஞ்சனா சிற்றரசன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்கு பதிவு செய்து வாய் தகராறில் ஈடுபட்ட வேலு என்கிற வேல்முருகனை கைது செய்த தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • கரூர் தி.மு.க.வினர் 15 பேருக்கும் 28-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது
    • வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள்

    கரூர், 

    கரூரில் கடந்த மே மாதம் 26-ந்தேதி ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது தி.மு.க.வினர் அதிகாரிகளை சோதனை செய்யவிடாமல் தடுத்து அவர்கள் வந்த காரை சேதப்படுத்தினர்.இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் தி.மு.க. கவுன்சிலர்கள் லாரன்ஸ், பூபதி உள்பட 15 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 15 பேர் ஜாமீன் கேட்டு கரூர் கோர்ட்டில் மனு அளித்ததையடுத்து அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.இந்த ஜாமீன் உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வருமான வரித்துறை சார்பில் அளிக்கப்பட்ட மனுவை தொடர்ந்து அவர்களது ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 31-ந்தேதி 15 பேரும் கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில் கரூர் கோர்ட்டில் மீண்டும் ஜாமீன்கோரி மனு அளித்தனர். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. 15 பேரின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து நேற்று கரூர் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் 15 பேருக்கும் வருகிற 28-ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.

    • கரூர் காந்திகிராமம் கிருஷ்ணா நகர் பகுதியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மருத்துவ முகாம் நடைபெற்றது
    • காந்திகிராமம் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்

    கரூர்,

    கரூர் காந்திகிராமம் கிருஷ்ணா நகர் பகுதியில் அப்பல்லோ மருத்துவமனை மற்றும் காந்திகிராமம் குடியிருப்பு நல பாதுகாப்பு சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

    கரூர் கோவை சாலையில் இயங்கி வரும் கரூர் அப்பல்லோ மருத்துவமனை நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பயன்பெறுவதற்காக இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. இன்று கரூர் தெற்கு காந்திகிராமம் கிருஷ்ணா நகர் பகுதியில், காந்திகிராமம் குடியிருப்பு நல பாதுகாப்பு சங்க செயலாளர் லியோ சதீஷ்குமார் தலைமையில் ஒரு நாள் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. காந்திகிராமம் குடியிருப்பு நல பாதுகாப்பு சங்க தலைவர் மாரிகண்ணு முன்னிலை வகிக்க, இன்று ஒரு நாள் இலவச மருத்துவ முகாமில் கண்பார்வை சர்க்கரை அளவு , ரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு மருத்துவ ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.இந்த முகாமில் கரூர் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் ப்ரீத்தி, டாக்டர் தினேஷ்குமார் உள்ளிட்ட மருத்துவமனை பணியாளர்கள் ஆலோசனைகள் வழங்கினர்.இந்தமுகாமில் , காந்திகிராமம் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெற்றனர்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது
    • அனுமதி இல்லை என்ற போலீசார் கூறியதால் வாக்குவாதம்

    கரூர்,

    கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய போது காவல்துறை அனுமதி மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதுகரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட பொருளாளர் சதீஷ் என்கிற நிலவன் தலைமையில் நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி கரூர் மண்டல துணைச்செயலாளர் வழக்கறிஞர் ராஜா என்கிற மன்னன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.ஆர்ப்பாட்டத்தில் விசிக மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பொறியாளர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜெயராமன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் சுடர்வளவன், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர் சுரேந்தர், கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்க மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் ரவிநாத், வடக்கு நகர செயலாளர் அடங்காத்தமிழன் அருள், கரூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் செல்வப்பெருந்தகை, கண்மணி ராமச்சந்திரன், மாவட்ட ஊடக அணி அமைப்பாளர் புலி ஈழம் உதயா, பசுவை மணிமாறன் தரைக்கடை சங்க செயலாளர் சுப்பிரமணி, தமிழ்ச்செல்வன், ஆகாஷ், உப்பிடமங்கலம் மணிமாறன், அரவக்குறிச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஒன்றிய துணைச் செயலாளர் சுரேஷ், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அரசியல் கட்சிகளுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் ஓம் பிரகாஷ் கூறியதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அரசு ஊழியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தும் பொழுது மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    • கரூர் புன்னம் கோவிலில் முன்னுரிமை வழங்குவது தொடர்பாக போலீசார் சமரச கூட்டம் நடத்தினர்
    • போலீசார் நடத்திய சமரச கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படவில்லை

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புன்னம் பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் மதுரை வீரன் சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் முன்னுரிமை வழங்குவது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே பிரச்சினை இருந்து வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் சில சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் கடந்த வாரம் இருதரப்பைச் சேர்ந்தவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை பாதியில் முடிவுற்றது. இந்நிலையில் மீண்டும் நேற்று வேலாயுதம்பாளையம் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சு வார்த்தைநடத்தினர். அரவக்குறிச்சி உட்கோட்ட போலீஸ் டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் உள்ளிட்ட போலீஸ் குழுவினர் இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில், புன்னம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் சண்டியாகும் இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் ஒன்றிணைந்து செய்து கொள்ள வேண்டும். கோவில் சீரமைப்பு பணிக்காக அமைக்கப்படும் திருப்பணி குழுவில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் பங்கு பெற வேண்டும். பின்னர் அந்த குழுவில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து கோவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து கோவில் பராமரிப்பு குழுவில் உள்ள அனைத்து சமூகத்தினரும் அவரவர் பங்குக்கு கொடுக்கும் பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த பணத்தை திருப்பணி குழு சார்பில் வங்கி கணக்கு துவங்கப்பட்டு அந்த வங்கி கணக்கில் போட வேண்டும். அனைத்து பரிவர்த்தனைகளும் காசோலை மூலமாகவே நடைபெற வேண்டும். மேலும் கும்பாபிஷேகத்தை அனைத்து சமூகத்தினரும் சேர்ந்த திருப்பணி குழு மூலம் செய்ய வேண்டும். தன்னிச்சையாக யாரும் செயல்படக் கூடாது என்று போலீஸ் டிஎஸ்பி அண்ணாதுரை தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொரு நபரின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டது. அப்போது ஒரு சமூகத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் எங்களது சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் இது குறித்து எடுத்துக் கூறி அவர்களின் கருத்துக்களை கேட்டு அறிந்த பின்பு நாங்கள் இது குறித்து தெரிவிக்கிறோம். அதற்கு எங்களுக்கு ஒரு மாத காலத்திற்கு மேல் கால அவகாசம் வேண்டும் என்று கூறி அதற்கான கடிதத்தை கொடுத்தனர். இதனால் சமாதான பேச்சு வார்த்தையில் இறுதி முடிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ×