என் மலர்
கரூர்
- அரசு பாலிடெக்னிக் விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவி மாயம்
- மாயனுார் போலீசார் வழக்கு பதிந்து மாணவியை தேடி வருகின்றனர்
கரூர்,
திண்டுக்கல் மாவட்டம், அய்யலுார் அடுத்த, காக்காயன் சேர்ந்தவர் கருப்பையா (வயது 53) டிரைவர். இவரது மகள் நாகஜோதி, அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், இ.சி.இ., இரண்டாமாண்டு, விடுதியில் தங்கி படித்து வந்தார். தனது மகளை பார்ப்பதற்காக கல்லுாரி விடுதியில் சென்று கேட்ட போது, விடுதி காப்பாளர், 'உங்கள் மகள் தங்கை வீட்டிற்கு செல்வதாக, கூறி சென்று விட்டார்' என தெரிவித்துள்ளார். மகள் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சியடைந்த கருப்பையா, மாயனுார் போலீசில் புகாரளித்தார். அதன்படி, மாணவி குறித்து விசாரித்து வருகின்றனர்.
- மாயனூர் அரசுப் பள்ளியில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரிக்கல் பொருட்கள் திருடப்பட்டு உள்ளது
- மாயனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
கரூர்,
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் கட்டிடங்களை புனரமைக்கும் பணியில் தனியார் கட்டுமான நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கரூர் மாவட்டம், எஸ்.வெள்ளாளப்பட்டி அருகே நரி கட்டியூர் பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் ராமசாமி (வயது 30) என்பவர் மேற் பார்வையாளராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்ற ராமசாமி, அங்கிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரிக்கல் பொருட்கள், ஒயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது குறித்து ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
- க.பரமத்தி அருகே மின்வாரிய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
- தென்னிலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கரூர்,
க.பரமத்தி ஒன்றியம்மொஞ்சனூர் அருகே தொட்டம்பட்டியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 58). இவர் ரெட்டிவலசில் வசித்தவாரு, மின்வாரியத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 5 வருடங்களாக தீராத வயிற்று வலியால் மதியழகன் அவதிப்பட்டு வந்தாராம். இதற்காக பல இடங்களில் சிகிச்சை மேற்கொண்டும் நோய் குண மாகவில்லை என கூறப்படுகிறது.இதனால் மனவேதனையில் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதியழகன், வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்த கொண்டதாக அப்பகுதியினர் கிராம நிர்வாக அலுவலருக்கும், தென்னிலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பேலீசார் அங்கு சென்று, சடலத்தை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சாந்தி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தென்னிலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நடையனூர் அருகே மறியலில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
- குடியிருப்பு பகுதிக்குள் தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்
வேலாயுதம் பாளையம்,
கரூர் மாவட்டம் நடையனூர் அருகே இளங்கோ நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து செல்போன் கோபுரம் அமைப்பதை நிறுத்த கோரி அந்த சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் வேலாயுதம்பாளையம் -நொய்யல் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நெப்போலியன் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியதாக இளங்கோ நகர் பகுதியைச் சேர்ந்த சித்ரா, செல்வி, தனம், சாந்தி, தேவி, ராஜேஸ்வரி, ராஜலட்சுமி, பேபி, சோலையம்மாள், சங்கீதா, சத்யா, ராஜேஸ்வரி, யசோதா, பத்மா, ராணி, உள்ளிட்ட சுமார் 20 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- நீடித்த நிலையான கரும்பு சாகுபடி செய்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
- வேளாண்மை துறை மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் கிராமம் குளத்துபாளையத்தில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறை மற்றும் ஈஐடி பாரி சர்க்கரை ஆலை இணைந்து நடத்திய கரும்பு விவசாயிகளுக்கு வேளாண்மை துறை அலுவலர்கள் மூலம் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி செய்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி முகாமில் கரூர் வேளாண்மைத் துறை இணை இயக்குனர் கலைச்செல்வி, துணை இயக்குனர் உமா, உதவி இயக்குனர் சண்முகசுந்தரம், வேளாண்மை அலுவலர்கள் ஜெயபாரதி , ரேணுகாதேவி ஆகியோர் கலந்து கொண்டு வேளாண்மை துறை மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.
ஈஐ டி பாரி சர்க்கரை ஆலையின் கோட்ட மேலாளர் சிதம்பரம் கலந்துகொண்டு கரும்பு நாற்று நடவின் பயன்கள் பற்றியும் ,ஆலையின் கரும்பு நடவு மானியம் பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் வேளாண்மை துறையை சேர்ந்த நடமாடும் மண் பரிசோதனை வாகனத்தை விவசாயிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.பயிற்சி முகாமில் வேட்டமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 60- க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
- காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி பால்குடம் மற்றும் தீர்த்த குடங்களுடன் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
- ஏற்பாடுகளை ஆடி கழுவாடி விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி பகுதி சேர்ந்த குளிர்ந்தமலை முனியப்ப சாமி கோவிலில் ஆடி கழுவாடியை முன்னிட்டு முனியப்பசாமிக்கு 2008 பால்குடம் அபிஷேக விழா நடைபெற்றது. பால்குட அபிஷேகத்தை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளை சேர்த்த ஏராளமான பக்தர்கள் காலை சுமார் 7 மணி அளவில் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி பால்குடம் மற்றும் தீர்த்த குடங்களுடன் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து முனியப்ப சுவாமிக்கு 2008 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன் ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .அதேபோல் குளிர்ந்த மலை முனியப்ப சாமி கோவிலில் உள்ள முருகனுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முனியப்ப சாமி மற்றும் முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். மாலை முனியப்பசாமியின் உற்சவமூர்த்தி திருவீதி உலா நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து தேங்காய், பழம் ,மாவிளக்குகளை கொண்டு வந்து சாமிக்கு படைத்து தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆடி கழுவாடி விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
இதேபோல் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதி கோவில்களில் கழுவாடியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
- நடையனூர் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க பொது மக்கள் எதிர்ப்பு
- வேலாயுதம்பாளையம்- நொய்யல் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்- நொய்யல் செல்லும் சாலையில் உள்ள நடையனூர் அருகே இளங்கோ நகர் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் விவசாயத்தை நம்பி குடும்பம் நடத்தி வருகின்றனர். தற்போது இந்த பகுதியில் மத்தியில் அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான இடத்தில் தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது .இந்த கோபுரம் அமைப்பதனால் இந்த கோபுரத்தில் இருந்து ஏற்படும் கதிர்வீச்சினால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் கதிர்வீச்சினால் விவசாய நிலமும் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று கூறி செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் செல்போன் கோபுரம் அமைப்பதை நிறுத்த வேண்டும் எனக்கூறி வேலாயுதம்பாளையம்- நொய்யல் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் சாலை மறியலை கைவிட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதன் காரணமாக சுமார் 30 நிமிடத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .
- இது குறித்து மஞ்சுளா கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மூக்கணா ங்குறிச்சியை சேர்ந்தவர் சாமிநாதன் மனைவி மஞ்சுளா
கரூர்
கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த, சின்ன மூக்கணா ங்குறிச்சியை சேர்ந்தவர் சாமிநாதன் மனைவி மஞ்சுளா (வயது 37). இவர். சிந்தாமணிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பள்ளி முடித்து விட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார் சிந்தாமணிபட்டி வரவனை பெருமாள் கோவில் அருகே சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த இருவர், மஞ்சுளாவின் கழுத்தில் அணிந்திருந்த, ஆறு பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்து மஞ்சுளா கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாநில கைப்பந்து போட்டி அரவக்குறிச்சி கல்லூரி மாணவர்கள் தேர்வு
- மாணவர்களை கல்லூரி முதல்வர், உடற்கல்வித்துறை இயக்குநர், ஆசிரியர்கள் பாராட்டினர்.
கரூர்
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு, கரூர் மாவட்ட அணியில் விளையாட, அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் மாநில அளவிலான ஆண்கள் கைப்பந்து போட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் நடை பெற உள்ளது. இப்போட்டியில், அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 5 பேர், கரூர் மாவட்ட கைப்பந்து அணியில் விளையாட தேர்வு பெற்றுள்ளனர். இந்த மாணவர்களை கல்லூரி முதல்வர், உடற்கல்வித்துறை இயக்குநர், ஆசிரியர்கள் பாராட்டினர்.
- கரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது
- 19 ல் கரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், செப்.1 ல் குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடைபெறும் என்று கலெக்டர் அறிவிப்பு
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் 19ல் கரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், செப்டம்பர் 1 ல் குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் சிறப்பு மருத் துவ முகாம் நடக்கிறது. மாற்றுத்தி றனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை பதிவு மற்றும் முதல் அமைச் சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு ஆகியவை மேற்கொள்ளப்படும். இந்த உதவிகளை பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக போட்டோ 4, குடும்ப அட்டை நகல் (அல்லது) ஆதார் அட்டை நகல் (அல்லது) இருப்பிடச்சான்று ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொள்ளலாம்.
- கரூரில் வாகன விதிமீறலில் ஈடுபட்ட 1,204 பேர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது
- வாகன விதி மீறலில் ரூ.13.70 லட்சம் அபராதம் வசூல்
கரூர்,
குளித்தலை காவல் உட்கோட்டத்தில் குளித்தலை, தோகைமலை, லாலாப் 'பேட்டை, மாயனூர், சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குளித்தலை போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாத வாகன சோதனையில் லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வந்தது. குடிபோதையில் வாகனம் ஓட்டியது, ஓட் டுநர் உரிமம் இல்லாதது, தலைக்கவசம் அணியாதது, காப்பீடு இல்லாதது. இருசக்கர வாகனத்தில் 3 பேர் சென்றது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது, உரிய நம்பர் பிளேட் பொருத்தாமல் இருந்தது. தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்தியது. சீட் பெல்ட் அணியாதது போன்ற பல்வேறு விதிமீற லில் ஈடுபட்ட 1,204 பேர் மீது வழக்குப்பதிவு செய் யப்பட்டு ரூ.13 லட்சத்து 70 ஆயிரம் அபராதம் விதிக் கப்பட்டுள்ளது. இத்தகவலை குளித் தலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
- க.பரமத்தி பகுதியில் மது விற்ற பெண் உள்ளிட்ட இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்
- ஏராளமான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது
கரூர்,
க.பரமத்தியை அடுத்த சின்னதா ராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் சென்றன. அதன் பேரில் சின்னதாராபுரம் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். இதில் தன்னாசியப்பன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த ரெட்டி மகன் தண்டபாணி (வயது 53) என்பவர் வீட்டின் அருகே முள்காட்டில் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றது கண்டறியப்பட்டது. இதேபோல் சின்னதாராபுரத்தை அடுத்த பனையம்பாளையம் அருகே அம்பேத்கர் காலனி பகுதியில் நடத் திய சோதனையில் அதே பகுதியை சேர்ந்த ராமசாமி மனைவி சக்தி மகேஸ்வரி (38), மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றது கண்டறியப்பட்டது. இரு வரிடமிருந்தும் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, இருவ ரையும் கைது செய்தனர்.






