ஆசிரியரிடம் 6 பவுன் செயின் பறிப்பு

இது குறித்து மஞ்சுளா கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மூக்கணா ங்குறிச்சியை சேர்ந்தவர் சாமிநாதன் மனைவி மஞ்சுளா
ஆசிரியரிடம் 6 பவுன் செயின் பறிப்பு
Published on

கரூர்

கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த, சின்ன மூக்கணா ங்குறிச்சியை சேர்ந்தவர் சாமிநாதன் மனைவி மஞ்சுளா (வயது 37). இவர். சிந்தாமணிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பள்ளி முடித்து விட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார் சிந்தாமணிபட்டி வரவனை பெருமாள் கோவில் அருகே சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த இருவர், மஞ்சுளாவின் கழுத்தில் அணிந்திருந்த, ஆறு பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்து மஞ்சுளா கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com