search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளிர்ந்த மலை முனியப்பசாமி கோவிலில் 2008 பால்குட அபிஷேகம்
    X

    குளிர்ந்த மலை முனியப்பசாமி கோவிலில் 2008 பால்குட அபிஷேகம்

    • காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி பால்குடம் மற்றும் தீர்த்த குடங்களுடன் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
    • ஏற்பாடுகளை ஆடி கழுவாடி விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி பகுதி சேர்ந்த குளிர்ந்தமலை முனியப்ப சாமி கோவிலில் ஆடி கழுவாடியை முன்னிட்டு முனியப்பசாமிக்கு 2008 பால்குடம் அபிஷேக விழா நடைபெற்றது. பால்குட அபிஷேகத்தை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளை சேர்த்த ஏராளமான பக்தர்கள் காலை சுமார் 7 மணி அளவில் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி பால்குடம் மற்றும் தீர்த்த குடங்களுடன் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து முனியப்ப சுவாமிக்கு 2008 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன் ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .அதேபோல் குளிர்ந்த மலை முனியப்ப சாமி கோவிலில் உள்ள முருகனுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முனியப்ப சாமி மற்றும் முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். மாலை முனியப்பசாமியின் உற்சவமூர்த்தி திருவீதி உலா நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து தேங்காய், பழம் ,மாவிளக்குகளை கொண்டு வந்து சாமிக்கு படைத்து தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆடி கழுவாடி விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    இதேபோல் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதி கோவில்களில் கழுவாடியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

    Next Story
    ×