என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

    • கரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது
    • 19 ல் கரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், செப்.1 ல் குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடைபெறும் என்று கலெக்டர் அறிவிப்பு

    கரூர்,

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் 19ல் கரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், செப்டம்பர் 1 ல் குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் சிறப்பு மருத் துவ முகாம் நடக்கிறது. மாற்றுத்தி றனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை பதிவு மற்றும் முதல் அமைச் சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு ஆகியவை மேற்கொள்ளப்படும். இந்த உதவிகளை பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக போட்டோ 4, குடும்ப அட்டை நகல் (அல்லது) ஆதார் அட்டை நகல் (அல்லது) இருப்பிடச்சான்று ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொள்ளலாம்.

    Next Story
    ×