என் மலர்
கரூர்
- டூவீலரிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த முதியவர் பரிதாபமாக பலியானார்
- லாலாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கரூர்,
குளித்தலை அடுத்த, கள்ளப்பள்ளி பஞ்சாயத்து, ஆண்டியப்பன் நகரை சேர்ந்தவர் அப்துல் முத்தலிப் (வயது 72) இவர், தனக்கு சொந்தமான, 'டி.வி.எஸ்., ஜூபிடர்' டூவீலரில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை, கம்பன்நல்லுார் பெட்ரோல் பங்க் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் நிலை தடுமாறியோது, அப்துல் முத்தலிப் தவறி கீழே விழுந்தார்.இதில் தலையில் பலத்தகாயமடைந்த அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவம் னையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த அப்துல் முத்தலிப் இறந்து டாக்டர்கள், விட்டதாக தெரிவித்தனர். இவரது மகன் சாதிக்அலி கொடுத்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
- இருசக்கர வாகனத்தில் சென்ற ஓய்வு பெற்ற காகித ஆலை ஊழியர் லாரி மோதி படுகாயம் அடைந்தார்
- தீவிர சிகிச்சைக்காக கோவை மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் காகித ஆலை -புன்னம் சத்திரம் செல்லும் சாலையில் உள்ள மூலிமங்கலம் பிரிவு அருகே குடியிருந்து வருபவர் பழனிச்சாமி (73).இவர் புகளூ காகித ஆலை ஓய்வு பெற்ற ஊழியர். பழனிச்சாமி தனது மோட்டார் சைக்கிளில் புன்னம் சத்திரம் பகுதிக்கு கடைக்கு செல்வதற்காக தார் சாலையை கடந்த போது அதிவேகமாக வந்த லாரி பழனிசாமி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பழனிச்சாமிக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை கரூரில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் புத்தர் நந்தகோபால் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- தளவாபாளையம் பகுதியில் குட்கா விற்றவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
- மளிகை கடையில் இருந்து ஏராளமான குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தளவாபாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ். சப்- இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட மளிகை கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, புகையிலைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.அதன் அடிப்படையில் அவற்றை பறிமுதல் செய்து விற்பனை செய்த தளவாபாளையம் மேற்கு தெருவை சேர்ந்த கரிகாலன் (52) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுங்ககேட் பகுதியில் நின்று கொண்டிருந்த பெண்ணை பைக்கில் அழைத்து சென்று 6 பவுன் செயினை
- செயினை பறித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்,
கரூர்,
திருச்சி மாவட்டம், முசிறி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பெரியார் செல்வம். இவரது மனைவி பிரபா (வயது 42). இவர் சம்பவத்தன்று மருத்துவமனை செல்வதற்காக முசிறியில் இருந்து குளித்தலைக்கு வந்துள்ளார். குளித்தலை சுங்ககேட் பகுதியில் அவர் நின்று கொண்டிருந்தபோது திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள முக்தி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (25) என்பவர் அந்தப்பகுதி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.பிரபா சுங்ககேட் பகுதியில் நின்று கொண்டிருப்பதை பார்த்து மருத்துவமனைக்கு அவரை அழைத்து செல்வதாக கூறி தனது மோட்டார் சைக்கிளில் குளித்தலை அருகே தண்ணீர்பள்ளி பகுதியில் உள்ள சாந்திவனம் காவிரி ஆற்றுபடுகைக்கு கூட்டி சென்றுள்ளார்.அப்போது அங்கு பதுங்கி இருந்த சக்திவேலின் உறவினரான சரவணன் (26), மற்றும் சக்திவேல் ஆகியோர் பிரபாவை மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கசங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.இதுகுறித்து பிரபா கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து, மருதூர் சோதனை சாவடி பகுதியில் வைத்து நேற்று சக்திவேல், சரவணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
- கோயில் அன்னதான நிகழ்ச்சியில் குழம்பில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்
- உடலை கைப்பற்றி தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்
கரூர்,
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள பள்ளக்காடு பகுதி அம்மாசி தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் மகன் பார்த்திபன் (வயது24) இவர் சென்ட்ரிங் கூலி வேலை செய்து வந்து உள்ளார். இவர் கடந்த 13ம் தேதி அன்று கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்.டி.மலை பகுதியில் உள்ள கரையூரான் நீலமேகம் கோயிலில் நடந்த ஆடி 28-ம் நாள் பூஜையில் கலந்து கொண்டார். பின்னர் பார்த்திபன் கோயிலில் நடந்து கொண்டு இருந்த அன்னதான பந்தலுக்கு சென்று அன்னதானம் பரிமாறும் வேலையை செய்து கொண்டு இருந்தார். அப்போது சாதம் எடுப்பதற்காக பார்த்திபன் சென்றார். அங்கு சாதத்தை எடுத்து கொண்டு செல்லும் போது பார்த்திபன் நிலை தடுமாறி அருகில் இருந்த குழம்பு அண்டாவில் விழுந்தார்.உடனடியாக அருகில் இருந்த இளைஞர்கள் பார்த்திபனை தூக்கில் வெளியில் கொண்டு வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து பார்த்திபனின் தந்தை ரவிக்குமார் தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிந்த தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். பார்த்திபனுக்கு திருமணம் ஆகி மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.
- வேலாயுதம்பாளையம் பகுதியில் வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்வு
- பூக்கள் விலை உயர்வு அடைந்துள்ளதால் மலர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம், நொய்யல் மரவாபாளையம், குளத்துப்பாளையம், ஓலப்பாளையம் , ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில் , பேச்சிப்பாறை, நடையனூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லி, முல்லை, ரோஜா, செவ்வந்தி , சம்பங்கி சம்பங்கி, அரளி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை பயிர் செய்துள்ளனர். இங்கு விளையும் பூக்களை உள்ளூர் கோவிலுக்கு வரும் விவசாயிகளுக்கும் அருகாமையில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கும் விற்பனை செய்து வருகின்றனர். வேலாயுதம்பாளையம் ,நொய்யல், புன்னம் சத்திரம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, என். புகளூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ரூ.300- க்கும், சம்பங்கி கிலோ ரூ.150- க்கும், அரளி கிலோ ரூ.120- க்கும், ரோஜா கிலோ ரூ.200- க்கும், முல்லைப் பூ ரூ.300- க்கும், செவ்வந்திப்பூ ரூ.200- க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும் ஏலம் போனது. ஆடி மாதத்தில் திருமண நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை.ஆனி மாத தொடக்கத்திலேயே திருமண நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டதால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.600-க்கும், சம்பங்கி கிலோ ரூ.240- க்கும், அரளி கிலோ ரூ.200- க்கும், ரோஜா கிலோ ரூ.250- முல்லைப் பூ கிலோ ரூ.600-க்கும், செவ்வந்திப்பூ ரூ.280- க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும் ஏலம் போனது. பூக்களின் வரத்து குறைவாலும் பல்வேறு நிகழ்ச்சிகள் இருப்பதாலும் பூக்கள் விலை உயர்வு அடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- புகழூர் நகராட்சி பகுதிகளில் தார்-காங்கிரீட் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கியது
- நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தொடங்கி வைத்தார்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சியில் உள்ள 24- வது வார்டு மூலிமங்கலம் பகுதியில் உள்ள தெருவில் காங்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையும், 14 -வார்டு செம்படபாளையம் பகுதியில் தார் சாலை மற்றும் காங்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையும், 5-வது வார்டு கௌதமபுரம் பகுதியில் காங்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையும் நடைபெற்றது. பூமி பூஜை விழாவிற்கு புகழூர் நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்து சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் புகழூர் நகராட்சி துணைத்தலைவர் பிரதாபன், வார்டு கவுன்சிலர்கள் செல்வக்குமார், மோகன்ராஜ், பூவிழி, புகழூர் நகராட்சி ஓவர்சீயர் ரவி மற்றும் நகராட்சி அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் புகழூர் பேரூர் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- கொல்லிமலைக்கு பைக்கில் சென்ற புங்கோடை குளத்துபாளையம் வாலிபர் மாயம்
- வழக்கு பதிந்து வேலாயும்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே புங்கோடை குளத்துபாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (49), கூலித்தொழிலாளியான இவரது மகன் மோகன்ராஜ் (22). இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இஎம்இ படித்துவிட்டு தற்பொழுது ஒரு தனியார் ஐஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். மோகன்ராஜ் தனது மோட்டார் பைக்கில் கொல்லிமலைக்கு மோட்டார் பைக்கில் சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லிமலைக்கு சென்று பல்வேறு இடங்களில் மோகன் ராஜை தேடிப் பார்த்தும் பலனில்லை. மோகன்ராஜ் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து ராமலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கரூர் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது
- வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு ௩ நாட்கள் சிறப்பு ரயில் கரூர் வழியாக இயக்கப்படுகிறது
கரூர்,
தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை, வாஸ்கோடகாமா- வேளாங்கண்ணி சிறப்பு ரயில் வரும், 27, செப்டம்பர் 1, 6ம் தேதிகளில் வாஸ்கோட காமாவில் இருந்து இரவு, 9:51 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 3:50 வேளாங்கண்ணியை சென்றடையும். இந்த ரயில் வரும், 28, செப்., 2 மற்றும் 7ல் மாலை, 6:58 மணிக்கு கரூர் வந்து இரவு, 7:00 மணிக்கு வேளாங்கண்ணிக்கு புறப் பட்டு செல்லும். மறுமார்க்கத்தில், வேளாங்கண்ணி-வாஸ்கோடகாமா சிறப்பு ரயில், வேளாங்கண்ணியில் இருந்து வரும், 30, செப்டம்பர் 4, 9 மதியம், 1:20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு, 8:00 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும். இந்த ரயில் கரூருக்கு வரும், 30 மற்றும் செப்., 4, 9 ல் இரவு, 7:48 மணிக்கு வந்து, 7:50 மணிக்கு, வாஸ்கோடகாமா புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- அரசு பாலிடெக்னிக் விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவி மாயம்
- மாயனுார் போலீசார் வழக்கு பதிந்து மாணவியை தேடி வருகின்றனர்
கரூர்,
திண்டுக்கல் மாவட்டம், அய்யலுார் அடுத்த, காக்காயன் சேர்ந்தவர் கருப்பையா (வயது 53) டிரைவர். இவரது மகள் நாகஜோதி, அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், இ.சி.இ., இரண்டாமாண்டு, விடுதியில் தங்கி படித்து வந்தார். தனது மகளை பார்ப்பதற்காக கல்லுாரி விடுதியில் சென்று கேட்ட போது, விடுதி காப்பாளர், 'உங்கள் மகள் தங்கை வீட்டிற்கு செல்வதாக, கூறி சென்று விட்டார்' என தெரிவித்துள்ளார். மகள் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சியடைந்த கருப்பையா, மாயனுார் போலீசில் புகாரளித்தார். அதன்படி, மாணவி குறித்து விசாரித்து வருகின்றனர்.
- மாயனூர் அரசுப் பள்ளியில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரிக்கல் பொருட்கள் திருடப்பட்டு உள்ளது
- மாயனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
கரூர்,
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் கட்டிடங்களை புனரமைக்கும் பணியில் தனியார் கட்டுமான நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கரூர் மாவட்டம், எஸ்.வெள்ளாளப்பட்டி அருகே நரி கட்டியூர் பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் ராமசாமி (வயது 30) என்பவர் மேற் பார்வையாளராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்ற ராமசாமி, அங்கிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரிக்கல் பொருட்கள், ஒயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது குறித்து ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
- க.பரமத்தி அருகே மின்வாரிய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
- தென்னிலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கரூர்,
க.பரமத்தி ஒன்றியம்மொஞ்சனூர் அருகே தொட்டம்பட்டியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 58). இவர் ரெட்டிவலசில் வசித்தவாரு, மின்வாரியத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 5 வருடங்களாக தீராத வயிற்று வலியால் மதியழகன் அவதிப்பட்டு வந்தாராம். இதற்காக பல இடங்களில் சிகிச்சை மேற்கொண்டும் நோய் குண மாகவில்லை என கூறப்படுகிறது.இதனால் மனவேதனையில் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதியழகன், வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்த கொண்டதாக அப்பகுதியினர் கிராம நிர்வாக அலுவலருக்கும், தென்னிலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பேலீசார் அங்கு சென்று, சடலத்தை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சாந்தி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தென்னிலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






