என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாரி மோதி ஓய்வு பெற்ற காகித ஆலை ஊழியர் படுகாயம்
- இருசக்கர வாகனத்தில் சென்ற ஓய்வு பெற்ற காகித ஆலை ஊழியர் லாரி மோதி படுகாயம் அடைந்தார்
- தீவிர சிகிச்சைக்காக கோவை மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் காகித ஆலை -புன்னம் சத்திரம் செல்லும் சாலையில் உள்ள மூலிமங்கலம் பிரிவு அருகே குடியிருந்து வருபவர் பழனிச்சாமி (73).இவர் புகளூ காகித ஆலை ஓய்வு பெற்ற ஊழியர். பழனிச்சாமி தனது மோட்டார் சைக்கிளில் புன்னம் சத்திரம் பகுதிக்கு கடைக்கு செல்வதற்காக தார் சாலையை கடந்த போது அதிவேகமாக வந்த லாரி பழனிசாமி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பழனிச்சாமிக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை கரூரில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் புத்தர் நந்தகோபால் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.






