என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டூவீலரிலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி
    X

    டூவீலரிலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி

    • டூவீலரிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த முதியவர் பரிதாபமாக பலியானார்
    • லாலாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர்,

    குளித்தலை அடுத்த, கள்ளப்பள்ளி பஞ்சாயத்து, ஆண்டியப்பன் நகரை சேர்ந்தவர் அப்துல் முத்தலிப் (வயது 72) இவர், தனக்கு சொந்தமான, 'டி.வி.எஸ்., ஜூபிடர்' டூவீலரில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை, கம்பன்நல்லுார் பெட்ரோல் பங்க் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் நிலை தடுமாறியோது, அப்துல் முத்தலிப் தவறி கீழே விழுந்தார்.இதில் தலையில் பலத்தகாயமடைந்த அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவம் னையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த அப்துல் முத்தலிப் இறந்து டாக்டர்கள், விட்டதாக தெரிவித்தனர். இவரது மகன் சாதிக்அலி கொடுத்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

    Next Story
    ×