என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மருத்துவ முகாம்
    X

    கரூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மருத்துவ முகாம்

    • கரூர் காந்திகிராமம் கிருஷ்ணா நகர் பகுதியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மருத்துவ முகாம் நடைபெற்றது
    • காந்திகிராமம் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்

    கரூர்,

    கரூர் காந்திகிராமம் கிருஷ்ணா நகர் பகுதியில் அப்பல்லோ மருத்துவமனை மற்றும் காந்திகிராமம் குடியிருப்பு நல பாதுகாப்பு சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

    கரூர் கோவை சாலையில் இயங்கி வரும் கரூர் அப்பல்லோ மருத்துவமனை நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பயன்பெறுவதற்காக இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. இன்று கரூர் தெற்கு காந்திகிராமம் கிருஷ்ணா நகர் பகுதியில், காந்திகிராமம் குடியிருப்பு நல பாதுகாப்பு சங்க செயலாளர் லியோ சதீஷ்குமார் தலைமையில் ஒரு நாள் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. காந்திகிராமம் குடியிருப்பு நல பாதுகாப்பு சங்க தலைவர் மாரிகண்ணு முன்னிலை வகிக்க, இன்று ஒரு நாள் இலவச மருத்துவ முகாமில் கண்பார்வை சர்க்கரை அளவு , ரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு மருத்துவ ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.இந்த முகாமில் கரூர் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் ப்ரீத்தி, டாக்டர் தினேஷ்குமார் உள்ளிட்ட மருத்துவமனை பணியாளர்கள் ஆலோசனைகள் வழங்கினர்.இந்தமுகாமில் , காந்திகிராமம் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெற்றனர்.

    Next Story
    ×