என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் திட்ட பணிகளை நிறுத்த வலியுறுத்தல்
    X

    குடிநீர் திட்ட பணிகளை நிறுத்த வலியுறுத்தல்

    • என்.புகளூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தவுட்டுபாளையம் குடிநீர் திட்ட பணிகளை நிறுத்த வலியுறுத்தப்பட்டு உள்ளது
    • அனைத்து கிணறுகளும் வறண்டு விட்டதாக குற்றச்சாட்டு

    நொய்யல்,

    என்.புகளூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் மதிவாணன் தலைமை வைத்தார்.நன்செய் புகழூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தொட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் புதியதாக அமைக்கப்பட்டுவரும் குடிநீர் திட்டத்திற்கு எதிராக நன்செய் புகளூர், தவிட்டுப்பாளையம், கட்டிப்பாளையம், அஹ்ரகாரம், புகழூர் கஸ்பா, மோதுகாடு ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இந்த குடிநீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தீர்மானத்தின் நகல்கள் கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்,( வெண்ணெமலை) மாவட்ட ஆட்சித்தலைவர், வருவாய் கோட்டாட்சியர் ( கரூர்) ,வருவாய் வட்டாட்சியர்( புகழூர்) ஊராட்சி மன்ற தலைவர் (நன்செய் புகளூர்). காவல் ஆய்வாளர்( வேலாயுதம் பாளையம்) அனுப்பி வைக்கப்பட்டது. நன்செய் புகழூர் பகுதியில் அனைத்து கிணறுகளும், ஆழ்துளை கிணறுகளும். சுத்தமாக வறண்டுவிட்டதால் பொதுமக்கள் இந்த முடிவினை எடுத்துள்ளதாக பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.கிராமசபை கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், செவிலியர்கள், வேளாண் துறை அதிகாரிகள், கால்நடைத்துறை மருத்துவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×