search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மளிகை கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி
    X

    மளிகை கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி

    • கந்தம்பாளையத்தில் மளிகை கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது
    • உரிமையாளர்கள் பணத்தை கடையில் வைக்காததால் ஏமாந்த திருடர்கள் உணவு பொருட்களை சிதறடித்து சென்றனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்- நொய்யல் செல்லும் தார் சாலையில் கந்தம்பாளையம் பகுதியில் செந்தூர் ராஜ் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வியாபாரத்தை முடித்துவிட்டு மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். செந்தூர்ராஜ் காலையில் வீட்டில் இருந்து வெளியில் வந்து பார்த்தபோது மளிகை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது தெரியவந்தது. கடைக்குள் சென்று பார்த்தபோது கடைக்குள் பொருட்கள் சிதறி கிடந்தது. ஆனால் கடைக்குள் பணம் இல்லாததால் அவர்களால் பணத்தை எடுக்க முடியவில்லை. மளிகை கடையில் இருந்த பொருட்களும் திருட்டுப் போகவில்லை. அதேபோல் பக்கத்தில் இருந்த கடையின் பூட்டையும் உடைக்கப்பட்டு கடைக்குள் சென்று தீவிரமாக தேடி உள்ளனர். ஆனால் அங்கும் பணம் எதுவும் இல்லாததால் திருடர்கள் அங்கிருந்த பொருட்களை கலைத்துவிட்டு ஏமாந்து சென்று விட்டனர்.இது குறித்து செந்தூர்ராஜ் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் வழக்கு பதிவு செய்து இருகடைகளின் பூட்டி உடைத்து திருட முயற்சி செய்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×