என் மலர்
கன்னியாகுமரி
- சென்னையில் இருந்து ஊருக்கு வந்தவர் தூக்கில் தொங்கினார்
- பூஜை அறைக்குள் சென்று அங்கிருந்த சாமி படங்களையும் அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது.
இரணியல் :
இரணியல் மேலத்தெரு மெயின்ரோடு ஆமத்தன் பொத்தை பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 64). இவர் குளச்சல் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. பொறுப்பாளராக உள்ளார். இவரது மனைவி ஜெயஸ்ரீ (56). இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உண்டு. மகள் திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார். மகன் கணேஷ்ராஜா (28). எம்.இ. பட்டதாரி. சென்னையில் தனியார் கம்பெனியில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவர் இரணியல் கிளையில் உள்ள ஒரு தேசிய வங்கியில் ரூ.2.5 லட்சம் கல்விக்கடன் பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்த கடனை கட்டி முடிக்காததால் கணேஷ்ராஜா பெயருக்கு இலவச சட்ட மையத்தில் இருந்து அழைப்பாணை ஒன்று வந்துள்ளது.
அதில் செப்டம்பர் 8-ந்தேதி (இன்று) காலை 10.30 மணிக்கு கணேஷ்ராஜாவை ஆஜராகும்படி கூறி இருந்தது. இதுகுறித்த தகவலை அவரது தாயார் ஜெயஸ்ரீ சென்னையில் பணிபுரிந்து வந்த கணேஷ்ராஜா வை செல்போனில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். இதனால் மனவருத்தம் அடைந்த கணேஷ்ராஜா நான் உயிரோடு இருக்க மாட்டேன் என செல்போனில் தாயாரிடம் கூறி அழுததாக தெரிகிறது. 8-ந்தேதி ஆஜராக வேண்டியிருப்பதால் வீட்டிற்கு வருமாறு தாயார் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை சென்னையில் இருந்து வீட்டிற்கு வந்தார். கல்வி கடன் தள்ளுபடி ஆகும் என்று காத்திருந்தபோது பணம் செலுத்த வேண்டும் என்று கேட்டு வங்கி கடன் செலுத்த சட்ட உதவி மையம் அழைப்பு விடுத்த விரக்தியில் கணேஷ்ராஜா மிகுந்த மன வேதனையுடன் பெற்றோரிடம் கூறியுள்ளார். அப்போது அவர்கள் கடனை கட்டிவிடலாம் என்றும், இலவச சட்ட மையத்தில் ஆஜராகி விட்டு வரும்படியும் கூறியுள்ளனர். எனினும் மனவேதனையில் இருந்த கணேஷ்ராஜா எதையும் பொருட்படுத்தாமல் பூஜை அறைக்குள் சென்று அங்கிருந்த சாமி படங்களையும் அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் மாடி அறைக்குள் சென்று உள்பக்கமாக கதவை பூட்டிக் கொண்டார்.
பெற்றோர்கள் கதவை தட்டியும் கணேஷ்ராஜா கதவை திறக்கவில்லை. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஏணி மூலம் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது கணேஷ்ராஜா தூக்குபோட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கணேஷ்ராஜா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உதயகுமார் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்ப திவு செய்த போலீசார் கணேஷ்ராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- பாத யாத்திரையானது கோட்டார் சவேரியார் பேராலயம் முன்பு தொடங்கி டெரிக் சந்திப்பு அன்னை இந்திரா காந்தி சிலை முன்பு நிறைவடைந்தது.
- பாத யாத்திரையில் திரளான காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்திய ஒற்றுமை பயணத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற பாதயாத்திரை நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக கோட்டார் சவேரியார் பேராலயம் முன்பு தொடங்கி டெரிக் சந்திப்பு அன்னை இந்திரா காந்தி சிலை முன்பு நிறைவடைந்தது.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியை காங்கிரஸ் கமிட்டி நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமை தாங்கினார். நாகர்கோவில் மாநகர்
மாவட்ட காங்கிரஸ் மண்டல தலைவர்கள் சிவபிரபு, தங்கராஜ், சாந்திரோஸ்லின், ஆதிராம், இளங்கோ, செல்வன், கண்ணன், புகாரி ஆகியோர் முன்னிலையில் பாத யாத்திரை நடைபெற்றது.
பாத யாத்திரையில் திரளான காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- கன்னியாகுமரி அருகே ஒற்றையால் விளையில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி தீவிரம்.
- பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 11.8 லட்சம் ஒதுக்கீடு.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே ஒற்றையால் விளையில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 11.8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், குமரி கிழக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் கே.டி உதயம், வட்டாரத் தலைவர் சாம் சுரேஷ்குமார் மற்றும் காங்கிரஸ், திமுக கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பஸ்சில் வந்த 2 வாலிபர்களும், தனது நண்பர்கள் சிலருக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தனர்.
- பஸ்சுக்குள் புகுந்து டிரைவர், கண்டக்டர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஒரு அரசு பஸ் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடிக்கு சென்றது.
பஸ்சை டிரைவர் சனல்குமார் இயக்கினார். கண்டக்டராக தனசேகரன் இருந்தார். அந்த பஸ் இரவில் தூத்துக்குடியை சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து இரவு 9.30 மணிக்கு பஸ் நாகர்கோவிலுக்கு புறப்பட்டது. பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அப்போது பஸ்சில் 2 வாலிபர்கள் ஏறினார்கள். அவர்கள் இருவரும் பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தனர். இருவரையும் பஸ்சுக்குள் வருமாறு கண்டக்டர் தனசேகரன் கூறினார்.
ஆனால் அவர்கள் இருவரும் பஸ்சுக்குள் வருவதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் அந்த வாலிபர்களுக்கும், கண்டக்டருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது பற்றி பஸ்சில் வந்த 2 வாலிபர்களும், தனது நண்பர்கள் சிலருக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை பகுதியில் அந்த பஸ் வந்தபோது வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் வந்து வழி மறித்தனர். இதையடுத்து பஸ்சை டிரைவர் நிறுத்தினார். பின்னர் அந்த வாலிபர்கள் பஸ்சுக்குள் புகுந்து டிரைவர், கண்டக்டர் இருவரையும் சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் பஸ்சின் கண்ணாடியையும் கல்வீசி உடைத்தனர்.
இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்தபடி கீழே இறங்கினார்கள். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. டிரைவர், கண்டக்டர் தாக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
படுகாயம் அடைந்த டிரைவர் சனல்குமார், கண்டக்டர் தனசேகரன் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் பஸ்சில் இருந்த பயணிகளை போலீசார் மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இது குறித்து டிரைவர் சனல்குமார் தூத்துக்குடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓடும் பஸ்சுக்குள் புகுந்து டிரைவர், கண்டக்டர் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை கைப்பற்றி விசாரணை நடக்கிறது.
டிரைவர், கண்டக்டரை தாக்கிய வாலிபர்கள் முகம் வீடியோவில் தெளிவாக பதிவாகி உள்ளது. இதையடுத்து அந்த வாலிபர்கள் யார்? என்பதை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், வாலிபர்கள் குடிபோதையில் டிரைவர், கண்டக்டரை தாக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. வாலிபர்களை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. பஸ்சுக்குள் புகுந்து டிரைவர், கண்டக்டர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நாளை மறுநாள் (9-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
- காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் மின் விநியோக செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தெங்கம்புதூர், மீனாட்சிபுரம், ராஜாக்கமங்கலம் ஆகிய உபமின் நிலையத்தில் நாளை மறுநாள் (9-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் தெங்கம்புதூர், பறக்கை, மேல மணக்குடி, முகிலன்விளை, மணிகட்டிப் ெபாட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளாளன் விளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், பிள்ளையார்புரம், புத்தளம், அளத்தன்கரை, முருங்கவிளை, புத்தன்துறை, ராஜாக்கமங்கலம், ஆலன்கோட்டை, காரவிளை, பருத்திவிளை, வைராகுடி, கணபதிபுரம், தெக்கூர், தெக்குறிச்சி, காக்காதோப்பு, பழவிளை, வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிக்குளம் சந்திப்பு, சர்குணவீதி, ராமன்புதூர், வெள்ளாளர் காலனி, சவேரியார் கோவில் சந்திப்பு, ராமவர்மபுரம் ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
குறிப்பிட்ட நேரத்தில் அப்பகுதிகளில் மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டி அகற்றப்படுகிறது. இதற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மண் பரிசோதனை முடிந்து புனரமைப்பு பணி தொடங்கியது
- ரெயில் நிலையம் ரூ.49.36 கோடி செலவில் நவீனமயமாக்கப்படுகிறது
கன்னியாகுமரி :
இந்தியா முழுவதும் ரெயில் நிலையங்களை நவீனப்படுத்த ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது. அந்த அடிப்படையில் ரெயில் நிலையங்களை பழமை மாறாமல் புதுப்பித்து பாரம்ப ரியத்தை பறைசாற்றும் விதமாக நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் கட்ட மாக 50 ரெயில் நிலையங்கள் சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தப்பட உள்ளது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னை எழும்பூர், மதுரை, ராமேஸ்வ ரம், காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 ரெயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட உள்ளன. இதற்காக ரூ.2 ஆயிரம் கோடியில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதில் கன்னியாகுமரி ரெயில் நிலையம் ரூ.49.36 கோடி செலவில் நவீன மயமாக்கப்படுகிறது. இந்த ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியானது விவேகானந்தர் நினைவு மண்டபம் போலும், உள்பகுதி விமான நிலையம் போன்றும் வடிவமைக்கப்பட்டு அழகுபடுத்தப்படுகிறது.
மேலும் கூடுதல் பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த ரெயில் நிலையம் விரிவுபடுத்தப்பட உள்ளது. விசாலமான கார் பார்க்கிங் வசதி, நவீன பூங்கா, கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள், பயணிகள் காத்திருக்கும் ஓய்வு அறைகள், தங்கும் விடுதி கள், கழிவறைகள் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. கடந்த ஆண்டு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் மண் ஆய்வு பணி முடிவடைந்து உள்ளது. தற்போது உள்கட்ட மைப்புக்கான புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.கன்னியாகுமரி ரெயில் நிலையத்தை மேம்படுத்து வதற்கான பசுமை தர பதிவு பணிகள், ஆய்வக பணிகள், தற்காலிக கழிவறையை மாற்றும் பணி, சரக்கு அணுகு சாலையை மாற்றும் பணி போன்றவை நடைபெற்று வருகிறது. ரெயில் நிலைய கட்டிடங்கள், துணை கட்டிடங்கள், கட்டிடக்கலை மற்றும் கட்டமைப்பு, வடிவமைப்பு போன்ற பணிகளும் நடந்து கொண்டிருக்கிறது. மாஸ்டர் பிளான் மறு சரிபார்ப்பு பணியும் நடந்து கொண்டிருக்கிறது. மேப்பின் மற்றும் டோபோ கிராபிகல் சர்வே, ட்ரோன் சர்வே மரம் அகற்றுதல் போன்ற ஆரம்ப கட்ட பணிகள் முடிந்துள்ளது.
- விஜய்வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தனர்
- காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மார்த்தாண்டம் :
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்தூர் ஊராட்சியில் உள்ள இரவிபுத்தன்துறை கிராம மக்கள் தங்களது பகுதியிலிருந்து பல்வேறு இடங்களுக்கு செல்ல பாலம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இதனால் இந்த கிராம மக்கள் விஜய் வசந்த் எம்.பி. மற்றும் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஆகியோரிடம் இந்த பகுதியில் ஏ.வி.எம். சானலின் குறுக்கே புதிய பாலம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று ஏ.வி.எம். கால்வாயின் குறுக்கே பாலம் கட்ட விஜய்வசந்த் எம்.பி. தனது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சமும், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.7.50 லட்சமும் ஒதுக்கீடு செய்தனர்.
மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டங்களின் கீழ் ரூ.31 லட்சத்து 9 ஆயிரத்து 500 என மொத்தம் ரூ.48½ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து புதிய பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்ததையடுத்து விஜய்வசந்த் எம்.பி., ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் இணைந்து புதிய பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார், இரவிபுத்தன்துறை பங்கு தந்தை ரதீஷ், மாவட்ட நிர்வாகிகள் அந்தோணிபிச்சை, ராஜூ மற்றும் மகேஷ், காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- டாக்டர்கள் அங்கு பரிசோதித்து விட்டு நாகர்பிள்ளை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
- திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருவட்டார் :
திருவட்டார் அருகே சரல்விளை ஏற்றக்கோடு பகுதியை சேர்ந்தவர் நாகர்பிள்ளை வயது (72).
இவர் ஆற்றூர் சந்திப்பில் இருந்து திருவட்டார் நோக்கி நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த மினி டெம்போ மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த நாகர்பிள்ளையை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு ஆற்றூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவிக்கு பிறகு அவர், மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.டாக்டர்கள் அங்கு பரிசோதித்து விட்டு நாகர்பிள்ளை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மகள் அனுராதா கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து கலியலூர் காட்டாத்துறை பகுதியை சேர்ந்த மினி டெம்போ டிரைவர் ஆல்பின்(50) மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு கொடுத்தார்
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல்
கன்னியாகுமரி :
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்த உத்திரபிரதேச சாமியார் பரம்ஹன்ஸை கைது செய்ய வலியுறுத்தி அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கன்னியாகுமரி போலீஸ் நிலை யத்தில்அகஸ்தீஸ் வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் பாபு தலைமையில் தி.மு.க.வினர் புகார் மனு கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ். பார்த்த சாரதி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், மாவட்ட இளைஞர்அணி துணை அமைப்பாளர் பொன் ஜாண்சன், மாவட்ட பொறியாளர்அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் அன்பழகன், மாவட்ட பிரதிநிதிகள் தமிழ்மாறன், வினோத், மெல்பின், முன்னாள் வார்டு கவுன்சி லர் தாமஸ் உள்பட ஏராள மான தி.மு.க.வினர் திரண்டு வந்து கன்னியாகுமரி போலீஸ் நிலை யத்தில் புகார்மனு அளித்தனர்.
குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பிரிட்டோசேம் உள்ளிட்ட நிர்வாகிகள் திரண்டு வந்து இரணியல் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
சமூக வலைதளங்களில் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா என்பவர் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் வெட்டியும், அவ தூறாகவும் பேசியுள்ளார். மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி என்றும் அறிவித்துள்ளார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி சமூகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா மீது வழக்குப்பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இரட்டை ரெயில் பாதை பணி நடைபெற்று வரும் நிலையில் அந்த பகுதியில் மடை அடைக்கப் பட்டு மணல் நிரப்பப்பட் டுள்ளது.
- வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ெரயில் பாதை பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பார்வதிபுரம் பகுதியிலும் இரட்டை ெரயில் பாதை அமைப்பதற்கு மணல்கள் நிரப்பப்பட்டு தண்ட வாளங்கள் போடப்பட்டு வருகிறது.
பார்வதிபுரம் ெரயில்வே மேம்பாலம் அருகில் தண்டவாளத்தின் அடியில் தண்ணீர் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்திற்கு செல்வதற்கு மடை அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது இரட்டை ரெயில் பாதை பணி நடைபெற்று வரும் நிலையில் அந்த பகுதியில் மடை அடைக்கப் பட்டு மணல் நிரப்பப்பட் டுள்ளது.
இதனால் மழை நேரங்க ளில் ராஜீவ் காந்தி நகர், பார்வதிபுரம் குடியிருப்பு, இலந்தையடி பகுதிகளில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள், மேயர் மகேசிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மேயர் மகேஷ் இன்று காலை அந்த பகுதியை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக ெரயில்வே அதிகாரிகளுடன் பேசினார்.
பின்னர் மேயர் மகேஷ் கூறியதாவது
ராஜீவ் காந்தி நகர், பார்வதிபுரம் குடியிருப்பு, இலந்தையடி பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வரு கிறார்கள். இந்த பகுதியில் உள்ள பொதுப்பணித்து றைக்கு சொந்தமான குளங்களில் இருந்து வெளி யேறும் தண்ணீர் ெரயில்வே தண்டவா ளத்தின் கீழ் உள்ள மடை வழியாக அடுத்த பகுதிக்கு சென்றது. தற்பொழுது இரட்டை ரெயில்வே பாதை பணி நடைபெற்று வரும் நிலை யில் தண்டவாளத்திற்கு கீழ் மடை அமைக்கப்பட வில்லை. எனவே வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதிகாரி கள் இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து ள்ளனர். நாகர்கோவில் நகரில் கழிவு நீர் ஒடைகளை சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு புத்தன்அணை யில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது மழை பெய்து வரும் நிலையில் தண்ணீர் பிரச்ச னைக்கு தீர்வு ஏற்படும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மண்டல தலைவர்கள் செல்வகுமார், ஜவகர், திமுக மாணவரணி அமைப்பாளர் அருண் காந்த் மற்றும் நிர்வாகிகள் வேல்முருகன், ஷேக் மீரான் ஆகியோர் உடன் இருந்தனர்.
- வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஊருக்கு வந்தார்.
- வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன ராதாகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
இரணியல் :
இரணியல் அருகே உள்ள பூசாஸ்தான்விளையை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 46), டிரைவர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஊருக்கு வந்தார்.
இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி கார் வாங்குவதற்காக கோயம்புத்தூர் சென்றார். அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி அஜிதாரராணி இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன ராதாகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
- இன்று மாலை நடக்கிறது
- ராகுல்காந்தி நடைபயண ஓராண்டு நிறைவு
கன்னியாகுமரி :
ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு "ஜோடா யாத்திரை" என்ற தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டார். ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி அதனை நினைவு கூறும் வகையில் கொட்டாரத்திலிருந்து கன்னியாகுமரி வரை இன்று மாலை காங்கிரசாரின் நடைபயணம் நடக்கிறது.
கொட்டாரம் சந்திப்பில் உள்ள காமராஜரின் சிலை முன்பு இருந்து இந்த நடைபயணம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இந்த நடை பயணத்துக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி எம்.பி. விஜய்வசந்த் தலைமை தாங்குகிறார். இந்த நடைபயணத்தில் குமரி மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.
கொட்டாரத்தில் இருந்து புறப்படும் இந்த நடைபயணம் பெருமாள்புரம், மகாதானபுரம் நான்கு வழி சாலை ரவுண்டானா சந்திப்பு, பரமார்த்தலிங்கபுரம் சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, ஒற்றைபுளி சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ரெயில் நிலைய சந்திப்பு, பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு வழியாக கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபத்தில் சென்று நிறைவடைகிறது.






