என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்கள் பற்றி விரிவாக விளக்கினார்கள்.
    • சலேட் கிறிஸ்டோபர் மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர்கள், செயலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    திருவட்டார் :

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கூட்ட அரங்கில் வைத்து ஜல் ஜீவன் மிஷன் 2023-2024-ம் ஆண்டுக்கான ஊராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கான ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசி, யசோதா ஆகியோர் கலந்துகொண்டு ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்கள் பற்றி விரிவாக விளக்கினார்கள். பயிற்சியாளர்கள் செல்வம், ராணி ஆகியோர் ஜல் ஜீவன் மிஷன், நீரின் முக்கியத்துவம், நீர் ஆதாரங்கள் மாசடைதல், கிராம ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம், கூட்டுக்குடிநீர் திட்டம், குடிநீர் நீர்தேக்க தொட்டி பராமரித்தல் ஆகியவை பற்றி எடுத்துரைத்தார்கள். கூட்டத்தில் ஊராட்சிமன்ற தலைவர்கள் பிடி.செல்லப்பன், பால்சன், இசையாஸ், தேவதாஸ், அனுசன் அய்யப்பன், லில்லிபாய் சாந்தப்பன், விமலா சுரேஷ், கெப்சிபாய் றூஸ், ரெஜினிவிஜிலா பாய், சலேட் கிறிஸ்டோபர் மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர்கள், செயலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • 26-வது ஆண்டு ஆராதனை விழா 3 நாட்கள் தொடர்ந்து நடந்தது.
    • மதியம் மகா தீபாராதனையும் மகா அன்னதானமும் நடந்தது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரத்தில் காரிய சித்தி ஸ்ரீராகவேந்திரா மிருத்திகா பிருந்தாவனம் உள்ளது. இங்கு ஸ்ரீராகவேந்திரரின் 352-வது ஆராதனை மற்றும் மகாதானபுரம் ராகவேந்திரா பிருந்தாவனத்தில் 26-வது ஆண்டு ஆராதனை விழா 3 நாட்கள் தொடர்ந்து நடந்தது.

    இதையொட்டி முதல்நாள் காலையில் அபிஷேக மும்அதைத்தொடர்ந்து மதியம் மகா தீபாராதனையும், மகா அன்னதானமும் நடந்தது. மாலையில்தீபாராதனையும், பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், இரவு ஸ்வஸ்தி தீபாராதனையும் நடந்தது.

    2-வதுநாள்அன்று காலை யில் அபிஷேகமும், விளக்கு பூஜையும் குரு ஸ்தோத்திர பாராயணமும் நடந்தது.மதியம் மகா தீபாராதனையும் மகா அன்னதானமும் நடந்தது.

    மாலையில் மகா தீபாராதனையும் வயலின் இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. இரவு ஸ்வஸ்தி தீபாராதனை நடந்தது. 3-வதுநாள்அன்று காலையில் அபிஷேகமும் மதியம்மகாதீபாராதனையும் அதைத்தொடர்ந்து மகா அன்னதானமும் நடந்தது.மாலையில் தீபாராதனையும், இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. இரவு ஸ்வஸ்தி தீபாராதனை நடந்தது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகாதானபுரம் காரியசித்தி ஸ்ரீ ராகவேந்திரா மிருத்திகா பிருந்தாவனத்தின் தலைவர் ராகவேந்திரா மோகன் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் வழங்கினார்
    • 61 மாணவர்களுக்கும் 111 மாணவிகளுக்கும் விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கினார்

    கன்னியாகுமரி,செப்.8-

    கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் 12-ம்வகுப்பில்பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியை பிரசன்னா தலைமை தாங்கினார்.உதவி தலைமை ஆசிரியர் ஜான் சுகிலன் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 61 மாணவர்களுக்கும் 111 மாணவிகளுக்கும் விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் லிங்கேஸ்வரி மணிராஜா, சகாய சர்ஜினாள் பிரைட்டன், இந்திரா, ஆட்லின் சேகர், பூலோக ராஜா, முன்னாள் கவுன்சிலர் தாமஸ், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஆனந்த், புனிதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த ஓடையின் பக்க சுவர் இடிந்தது.
    • பொதுமக்கள் நடந்து செல்வதற்கு கூட லாயக்கற்றதாக இந்த சாலை இருக்கிறது

    மார்த்தாண்டம் :

    மார்த்தாண்டத்தில் இருந்து விரிகோடு, கொல்லஞ்சி வழியாக இனையம் செல்லும் அரசு பஸ் இன்று காலை பயணிகளுடன் புறப்பட்டது. கொல்லஞ்சி செல்லும் பாதையில் பஸ் சென்ற போது எதிரே லாரி வந்துள்ளது. எனவே பஸ்சை டிரைவர் சற்று ஓரமாக ஓதுக்கினார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த ஓடையின் பக்க சுவர் இடிந்தது. இதனால் பஸ் ஓடைக்குள் இறங்கியது. இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக யாரும் காயம் இன்றி தப்பினர்.

    விரிகோடு மீன்கடை முன்பு பழுதடைந்து காணப்படும் சாலையை சீரமைக்காததால் பல்வேறு விபத்துகள் அந்த இடத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதிகாரிகள் யாரும் இதுவரை கண்டு கொள்ளவும் இல்லை. பொதுமக்கள் நடந்து செல்வதற்கு கூட லாயக்கற்றதாக இந்த சாலை இருக்கிறது. மேல விரிகோடிலிருந்து தபால் நிலையம் வரை கொஞ்ச தூரத்திற்கு மட்டும் சாலை போடாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளில் சாலை போடப்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    • இரவு பகலாக பணிகள் தீவிரம்
    • இரட்டை ரெயில் பாதையில் விரைவில் ரெயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில் ரெயில்வே கேட் உள்ளது. நாகர் நகரில் இருந்து இந்த கேட் வழியாக ஊட்டு வாழ்மடம், கருப்புக் கோட்டை, இலுப்பையடி போன்ற கிராமங்களுக்கு மக்கள் சென்று வருகின்ற னர்.

    இந்த கிராமங்களில் வசிக்கும் சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது பல தேவைகளுக்காக ரெயில்வே கேட்டை கடந்து தான் நாகர்கோவில் செல்ல வேண்டும். ஆனால் ரெயில் நிலையத்தின் அருகே கேட் இருப்பதால், ரெயில்கள் வருகை, என்ஜின் சோதனை ஓட்டம் போன்றவற்றுக்காக தினமும் 40 முறைக்கும் மேல் கேட் அடைத்து திறக்கப்படுகிறது. இதனால் 13 மணி நேரம் வரை கேட் மூடப்பட்டே இருக்கும்.

    எனவே இந்த வழியாக செல்லும் வாகனங்கள், கேட் முன்பு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் பள்ளி- கல்லூ ரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்வோர் அவதிக் குள்ளாகி வருகின்ற னர். இதனை கருத்தில் கொண்டு ரெயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. 8 மீட்டர் அகலத்திலும், 80 மீட்டர் நீளத்திலும், 4½ மீட்டர் உயரத்திலும் சுரங் கப்பாதை அமைக்க திட்ட மிடப்பட்டு பணிகள் கடந்த மே மாதம் தொடங்கியது.

    இதற்காக ரெயில்வே கேட் மூடப்பட்டது.4 மா தங்கள் வரை கேட் மூடப்ப டும் என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஊட்டுவாழ்மடம் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனை தொ டர்ந்து தற்காலிக ரெயில்வே கேட் அமைக்கப்பட்டது. தொடர்ந்து சுரங்கப்பாதை பணிகள் தொடங்கின. ரூ.4½ கோடி மதிப்பிலான இந்த பணிகள் இரவு-பகலாக முழு வேகத்தில் நடந்து வருகிறது. முதலில் சுரங்கப்பாதை அமைய உள்ள பகுதியில் ரெயில்வே தண்டவாளங்களின் கீழ் கர்டர் பாலம் அமைக்க ப்பட்டது. தொடர்ந்து தண்டவா ளத்தின் கீழ் பகுதியில் சுரங்கம் அமைப்ப தற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. ராட்சத எந்திரங்கள் கடந்த சில நாட்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மழையின் காரணமாக சில நாட்கள் பணிகள் பாதிக்கப்பட்டன.

    தோண்டப்பட்ட பள்ளத் தில் மழை நீர் தேங்கியது. அதனை ஊழியர்கள் மோட்டார் மூலம் வெளி யேற்றினர். அதன்பிறகு பணிகள் தொடர்ந்து நடை பெற்றன. இதன் காரணமாக சுரங்கத்தின் ஒரு பகுதியில் பணி முடிவு பெற்று சிமெண்ட் காங்கிரீட் பூச்சு பணி தொடங்கப்பட் டுள்ளது. அடுத்த கட்டமாக மற்றொரு பகுதியிலும் முழுமையாக பள்ளம் தோண்டப்பட்டு சிமெண்ட் காங்கிரீட் அமைக்கப்படும். அதன்பிறகு சுரங்கப்பாதை யின் இருபுறமும் சுவர் அமைக்கப்பட்டு, மேல் தளமும் பூசப்படும்.

    இந்தப் பணிகளை விரைந்து முடிக்க தீவிரமாக பணிகள் நடந்து வருவதால் விரைவில் சுரங்கப்பாதை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இரட்டை ரெயில் பாதை பணிகள் நாகர்கோ வில்-ஆரல்வாய்மொழி இடையே முடியும் தருவா யில் உள்ளது. தண்டவாள பணிகள் பெரும்பகுதி முடிவடைந்து விட்ட நிலையில், சிக்னல் கம்பங்கள் உள்ளிட்ட சில பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே இரட்டை ரெயில் பாதையில் விரைவில் ரெயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு இயக்கப்பட்டால் பயண நேரம் வெகுவாக குறையும்.

    • முதல் கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு பணம் வழங்க திட்டம்
    • குமரி மாவட்டத்தில்கள ஆய்வு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் 784 ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்பட்டது. 4 லட்சத்து 19 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் விண்ணப்ப படிவுகளை பூர்த்தி செய்து வழங்கி உள்ளார்கள். ஒரு லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்திசெய்து வழங்கவில்லை.

    பூர்த்தி செய்து வழங்கப்பட்ட 4 லட்சத்து 19 ஆயிரம் விண்ணப்ப படிவங்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் ஒரு சில விண்ணப்ப படிவங்களில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த விண்ணப்ப படிவங்களை நேரில் சென்று ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 70,000 விண்ணப்பங்களும் 2-வது கட்டமாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்கள் என 2 லட்சத்து 10 ஆயிரம் விண்ணப்பங்களை கள ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக் கப்பட்டது. அதிகாரிகள் நேரடியாக வீட்டிற்கு சென்று கள ஆய்வு பணியை மேற்கொண்டனர்.

    தற்பொழுது கள ஆய்வு பணி நிறைவடைந்து உள்ளது. கள ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள் விண்ணப்ப படிவத்தில் தெரிவித்துள்ள தகவல்கள் அனைத்தும் உண்மைதானா என்பது குறித்த விவரங்களை கேட்டு அறிந்தனர்.

    இதன் அடிப்படையில் தற்போது 20,000 விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள ஒரு லட்சத்து 90 ஆயிரம் விண்ணப்ப படிவங்களையும் மீண்டும் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஏற்கனவே சென்னையில் 2 லட்சத்து 10 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் முதற்கட்டமாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த விண்ணப்ப படிவங்களை மின் ஆளுமை மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அதில் 12,000 விண்ணப்ப படிவங்களுக்கு வங்கிக்கணக்கில் சில குறைபாடுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 12,000 விண்ணப்ப படிவங்களையும் சம்மந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பி உடனடியாக அந்த வங்கி கணக்கில் உள்ள குறைபாடு களை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இதன் அடிப்படையில் தபால் நிலையத்தில் 12 ஆயிரம் பேருக்கு வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது. கலைஞர் உரிமை திட்டத்திற்கான பணம் ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் விரைவில் வழங்கப்பட உள்ளது. இதற்கான நிகழ்ச்சி வருகிற 15-ந்தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குமரி மாவட்டத்தில் திருவட்டார் அல்லது கல்குளம் தாலுகாக்களில் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அன்று பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும் என்று தெரிகிறது. முதல் கட்டமாக குமரி மாவட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கு கலைஞர் உரிமை திட்டத்திற்கான பணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ஒரு வார காலத்திற்குள் தகுதியான அனைவருக்கும் கலைஞர் உரிமை திட்டத்திற்கான பணம் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • எவ்வித பிடித்தமும் இன்றி பல ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார்கள்

    நாகர்கோவில் :

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தள வாய்சுந்தரம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் பொது நூலக இயக்ககத்தின் கீழ் சுமார் 1510 ஊர்ப்புற நூலகர்கள் பிளஸ்-2 மற்றும் சி.எல்.ஐ.எஸ்.சி. கல்வித்தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் பெற்று சிறப்பு காலமுறை ஊதியத்தில் (மாதம் ரூ. 10 ஆயிரம்) எவ்வித பிடித்தமும் இன்றி பல ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

    மேலும் தற்போதைய கால சூழ்நிலையில் வருமானம் போதாததால் அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 78 ஊர்ப்புற நூலகர்கள் உள்ளடக்கி தமிழ்நாட்டில் மொத்தம் 1510 ஊர்ப்புற நூலகர்கள் உள்ளனர். இவர்களுக்கு பணி வரன்முறை செய்து ஊதியம் வழங்கிடவும், 10 ஆண்டுகளுக்கு மேலாக தரம் உயர்த்தப்படாமல் உள்ள அனைத்து நூலகங்களையும் தரம் உயர்த்திட வேண்டும். மேலும் நூலகத்துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவனின் தாயார் உள்பட 2 பேர் மீது வழக்கு
    • சம்பந்தப்பட்ட ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த 17 வயது வாலிபர் ஒருவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    பள்ளியில் அவர் சரிவர படிக்காததையடுத்து பள்ளி நிர்வாகம் மாணவனை தனது பெற்றோரை அழைத்து வருமாறு கூறினார். ஆனால் மாணவன் பெற்றோரை அழைத்து செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் மாணவன் பள்ளிக்கு வந்திருந்தார். அப்போது மாணவனிடம் பெற்றோரை ஏன் அழைத்து வரவில்லை என்று ஆசிரியை கேட்டுள்ளார்.

    உடனே மாணவன் அங்கிருந்து வெளியே சென்றதாக தெரிகிறது. பின்னர் மாணவனின் தாயாரும், வாலிபர் ஒருவரும் பள்ளிக்கு வந்தனர். பள்ளியில் உள்ள முதல்வர் அறைக்கு வந்த அவர்கள் ஆசிரியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். திடீரென மாணவரின் தாயார் தான் காலில் கிடந்த செருப்பால் ஆசிரியையை அடிக்க முயன்றார்.

    அவருடன் இருந்த வாலிபர் ஸ்குருடிரை வரை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினார். பின்னர் மாணவனின் தாயார் வாலிபரும் அங்கிருந்து சென்று விட்டனர். இதுகுறித்து பள்ளி ஆசிரியை வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். சம்பந்தப்பட்ட ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மாணவனின் தாயார் மற்றும் வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 448, 294 (பி), 352, 506 (2) ஐ.பி.சி. மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் மாணவரின் தாயாரையும், வாலிபரையும் பிடிக்க நடவடிக்கை மேற் கொண்டுள் ளனர். போலீ சார் தேடுவது அறிந்த இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள வாலிபர் மீது ஏற்கனவே நேசமணிநகர் போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை ஒருவரை மாணவனின் தாயார் தாக்கமுயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்
    • மகன் எடுத்துச்சென்ற செல்போனில் ரிங் சென்றதாகவும், அதன்பிறகு சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது

    ராஜாக்கமங்கலம் :

    வெள்ளிச்சந்தை அருகே உள்ள வெள்ளமோடி பகுதியை சேர்ந்தவர் சுயம்பு லிங்கம், கட்டிட தொழிலாளி. இவரது மகன் சுதன் (வயது 15). இவன் அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரு கிறான்.

    கடந்த 2 நாட்களாக சுதன் பள்ளிக்கு செல்லவில்லையாம். இதனை அறிந்த சுயம்புலிங்கம் கண்டித்துள் ளார். இந்த நிலையில் நேற்று காலை சுதன் திடீரென மாயமாகி விட்டான். அவர் தனது தந்தையின் செல் போனையும் எடுத்துச் சென்றுள்ளான்.

    மகனை பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கா ததால் வெள்ளிச்சந்தை போலீசில் சுயம்புலிங்கம் புகார் செய தார். அதில் மதியம் வரை மகன் எடுத்துச்சென்ற செல்போனில் ரிங் சென்றதாகவும், அதன்பிறகு சுவிட்ச் ஆப் ஆகி உள்ளதாகவும் குறிப் பிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து 783 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
    • பாலமோர், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியில் மழை பெய்து வருகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவி வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது. நாகர்கோ வில், சுருளோடு, தக்கலை, அடையாமடை, முள்ளங்கினாவிளை கன்னிமார் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    பாலமோரில் அதிகபட்ச மாக 9.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணையில் இருந்து பாசனத்திற்காக 783 கன அடி தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் விடப் பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் மழை நீடித்து வரும் நிலையில் விவசாயி கள் கும்பப்பூ சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • குடிநீர் பைப் லைன் அமைக்கப்பட்ட பிறகும் சீரமைக்கப்படாத அவலம்
    • தினமும் வாகன ஓட்டிகள் அவதி

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நகரின் பிரதான சாலைகளில் ஒன்றாக மீனாட்சி புரம் சாலை விளங்கி வருகிறது. இந்த பகுதியில் தான் வணிக நிறுவனங்கள், வர்த்தக நிறு வனங்கள், துணிக்கடைகள் ஏரா ளமாக உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து செல்கிறார்கள். எப்போதும் இந்த சாலை போக்குவரத்து நெருக்கடி மிகுந்ததாக காணப்படும்.

    எனவே கோட்டார் போலீஸ் நிலையம் முதல் கட்டபொம்மன் சந்திப்பு வரை உள்ள சாலையை ஒருவழி பாதையாக போலீசார் செயல்படுத்தி வருகிறார்கள். கட்டபொம்மன் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டு அங்கிருந்து வரும் வாகனங்களை திருப்பி விட்டு வருகிறார்கள். இருப்பினும் கட்டபொம்மன் சந்திப்பிலிருந்து இருசக்கர வாகன ஓட்டிகள் அவ்வப்போது இந்த சாலை வழியாக வருவதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க மீனாட்சிபுரம் சாலையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் பைப் லைனுக்காக தோண்டப்பட்டது.

    சாலையில் போடப்பட்டிருந்த அலங்கார தரை கற்கள் அகற்றப்பட்டு பள்ளங்கள் தோண்டி பைப் லைன்கள் அமைக்கப்பட்டது. பைப் லைன் அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் அந்த பள்ளம் சரி செய்யப்படவில்லை. அலங்கார கற்கள் சாலையில் அங்கும் இங்குமாக சிதறி கிடக்கிறது. சாலையில் சிதறி கிடக்கும் கற்களினால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். குடும்பத்தோடு செல்லும் வாகன ஓட்டிகள் சிலர் கீழே தவறி விழும் சம்பவம் அரங்கேறி வருகிறது.

    எனவே மாநகராட்சி அதிகாரி கள் உடனடியாக போர்க்கால நடவடிக்கையாக அந்த சாலையில் உள்ள அலங்கார தரை கற்களை மீண்டும் அமைத்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    மேலும் வடிவீஸ்வரத்தில் இருந்து கம்பளம் வழியாக நாகர்கோவில் ரெயில்வே ரோட்டிற்கு செல்லும் சாலையி லும் பைப் லைன் அமைப்பதற்காக அலங்கார கற்கள் அகற்றப்பட்டு பைப் லைன்கள் அமைக்கப்பட்டது. பைப் லைன்கள் அமைக்கப்பட்ட பிறகு அந்த இடங்களில் அலங்கார கற்கள் அமைக்கப்படவில்லை. இதனால் சாலை நடுவே ஓடைபோல் காட்சியளிக்கிறது. தற்பொழுது மழை பெய்து வரும் நிலையில் அந்த பள்ளங்களில் மழை நீரும் தேங்கியுள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த சாலையில் கிடக்கும் பள்ளங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி கீழே விழும் நிலைக்கும் தள்ளப் பட்டுள்ளனர்.

    இதேபோல் நாகர்கோவில் மாநகர பகுதியில் ஒரு சில இடங்களில் குடிநீர் பைப் லைனுக்காக தோண்டப்பட்ட சாலைகள் சரிவர சீரமைக்கப் படாமல் மோசமான நிலையில் காணப்படுகிறது. உடனடி நடவடிக்கையாக இந்த சாலை களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • 6.3 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட கூடுதல் மருத்துவ கட்டிடம்
    • நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட பொது காதாரத்துறையின் கீழ் உள்ள விளவங்கோடு தாலுகாவிற்குட்பட்ட, இடைக்கோடு பகுதியில் அமைந்துள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தைகள் நல மகப்பேறு மருத்துவம், கண் சிகிச்சை, பல் மருத்துவம், சித்த மருத்துவம், இயன்முறை மருத்துவம், தொழுநோய் பிரிவு, காசநோய் பிரிவு, முதியோர் பிரிவு, குடும்ப கட்டுப்பாடு, ஆரோக்கியமான இளம்பருவகால ஆலோசனை, மாரடைப்பு, பக்கவாதம், மகப்பேறு, தீக்காயம், நாய்க்கடி, பாம்புக்கடி, தேள் கடி, விஷம் அருந்துதல், தொடுதல், சுவாசித்தல், வலிப்பு நோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் ரூ.6.3 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட கூடுதல் மருத்துவ கட்டிடத்தினை நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டதோடு, உள்நோயாளிகளாக சிசிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்கள் வெளியில் உட்காரும் விதமாக தற்காலிக கூடாரம் அமைத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக கலெக்டர் ஸ்ரீதர், இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை பணியாளர் வருகை பதிவேடு, பணி பதிவேடு, மருந்து இருப்பு பதிவேடு குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது, துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) டாக்டர் மீனாட்சி, உதவி செயற்பொறியாளர், பேரூராட்சி தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×