என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • இந்திய ஒற்றுமை பயணம் ஓராண்டு நிறைவு விழா
    • விஜய் வசந்த் எம்.பி. பேச்சு

    குளச்சல் :

    குமரி மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை ஓராண்டு நிறைவு பேரணி குளச்சல் பீச் சந்திப்பில் நடந்தது.

    மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் வதனா நிஷா தலைமையில் விஜய் வசந்த் எம்.பி. பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியானது பெரிய பள்ளி முக்கு சந்திப்பு, பள்ளிரோடு, பயணியர் விடுதி சந்திப்பு, குளச்சல் அரசு மருத்துமனை வழியாக காமராஜர் பஸ் நிறுத்தம் சென்றடைந்தது. அங்கு விஜய்வசந்த் எம்.பி.பேரணியை முடித்து வைத்து பேசியதாவது:-

    ஏழை எளிய உழைக்கும் மக்களின் குரலை நாடாளு மன்றத்தில் ராகுல்காந்தி ஒலிக்க செய்தார். நாட்டு மக்களுக்காக அவர் இன்னும் உழைத்துக்கொண்டு தான் இருக்கிறார். வருகிற 2024-ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் அமோக வெற்றிப்பெற்று பிரதமர் ஆவார். அதற்கு நீங்கள் தொடர்ந்து காங்கிரசை ஆதரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பேரணியில் குருந்தன் கோடு ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் எனல்ராஜ், ரீத்தாபுரம் பேரூராட்சி தலைவர் எட்வின் ஜோஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • காரை ஓட்டி வந்த அகிலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    என்.ஜி.ஓ.காலனி :

    இரணியல்அருகே தலகுளம் பட்டாரிவிளை பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் ஜெரின் (வயது 22). திருநைனார்குறிச்சியை சேர்ந்தவர் வினித் (22). இவர்கள் இருவரும் நண்பர்கள். நேற்று இரவு இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை ஜெரின் ஓட்டினார். வினித் பின்னால் அமர்ந்திருந்தார்.

    நாகர்கோவில் அருகே பறக்கை செட்டி தெரு பகுதியில் இன்று அதிகாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது. இதில் ஜெரின், வினித் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். தலை மற்றும் உடல் பகுதியில் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி வினித் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஜெரினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து பற்றி தகவல் அறிந்ததும் சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    இதுதொடர்பாக காரை ஓட்டி வந்த அகிலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நகரில் சமீப நாட்களாக மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வடசேரி, கோட்டார், நேசமணிநகர் போலீஸ் சரகத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் வீடுகள் முன்பு நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் கடைவீதிகளில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி செல்லும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    கொள்ளையர்களை பிடிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க திருடப்படும் மோட்டார் சைக்கிள் ரோட்டோரங்களில் மீட்கப்படும் சம்பவங்களும் நடந்து வருகிறது. போக்குவரத்து பிரிவு போலீசார் நாகர்கோவில் நகரில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஒழுகினசேரி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரோட்டோரத்தில் அனாதையாக நின்றது. இதை மீட்ட போலீசார் அந்த வண்டிக்கு அபராதத்தை விதித்தனார். இதுதொடர்பாக விசாரித்தபோது மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த 2-ந்தேதி வடசேரி பகுதியில் நிறுத்தியிருந்தபோது திருடி சென்று விட்டதாகவும் இது தொடர்பாக வடசேரி போலீசில் புகார் அளித்து இருப்பதாகவும் கூறினார்.

    இதையடுத்து போலீசார் அந்த உரிமையாளரை வரவழைத்து அந்த வாகனத்தை ஒப்படைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பும் வேப்பமூடு, கோட்டார் பகுதிகளில் இதேபோல் போக்குவரத்து போலீசார் திருடிய மோட்டார் சைக்கிள் சாலை ஓரத்தில் விட்டு சென்றதை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

    மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடும் கொள்ளையர்கள் திருடிய மோட்டார் சைக்கிளை சாலை ஓரங்களில் நிறுத்தி செல்வதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருட்டு மோட்டார் சைக்கிளில் சென்று நகை திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு விட்டு மோட்டார் சைக்கிள்களை சாலை ஓரங்களில் ஆங்காங்கே நிறுத்திவிட்டு அவர்கள் தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • குழந்தைகளை பார்க்க வர கூடாது என்றும் கூறியதை தொடர்ந்து மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது
    • இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    இரணியல் :

    இரணியல் அருகே ஆளூர் தோப்புவிளை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 43). பீரோ கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணுக்கும் கடந்த 11 வருடங்கள் முன்பு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்வதாக தெரிகிறது.

    இந்த நிலையில் மணி கண்டன் அடிக்கடி குடித்து விட்டு மனைவி வீட்டிற்கு சென்று தகராறு செய்து வருவதாக ராஜாக்கமங்க லம் புகார் அளித்த தையும், குழந்தைகளை பார்க்க வர கூடாது என்றும் கூறியதை தொடர்ந்து மணிகண்டன் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்ப டுகிறது.

    நேற்று இரவு தனது தாயா ரிடம் வாழ பிடிக்க வில்லை என்று போனில் கூறிய மணிகண்டன் வீட்டிற்கு போகவில்லை. இதனை அடுத்து அவர்கள் அக்கம் பக்கம் தேடியபோது அருகே உள்ள தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி மணி கண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது தாயார் செல்லத்தாய் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்
    • இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

    இரணியல் :

    இரணியல் அருகே குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் மரிய ஞானபிரகாசம். இவரது மகன் பிரவீன் ரெஞ்சித் (வயது 27). இவர் மார்பிள் வேலை செய்து வருகிறார். பிரவீன் ரெஞ்சித்தும், இரணியல் பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த பி.இ.பட்டதாரி இளம்பெண் ஒருவரும் கடந்த 2½ ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பிரவீன் ரெஞ்சித் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியதால் இளம்பெண் அவரிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டார். இதனால் பிரவீன் ரெஞ்சித் அடிக்கடி இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினருடனும் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மாலை இளம்பெண் வேலை முடிந்து குருந்தன்கோட்டில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். குருந்தன்கோடுகுளம் அருகே சென்றபோது பின்னால் வந்த பிரவீன் ரஞ்சித் அவரை கையால் தாக்கி அவதூறாக பேசியுள்ளார்.

    பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளம்பெண்ணின் வயிற்றில் குத்தி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டார். இதில் பலத்த காயமடைந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பிரவீன் ரெஞ்சித்தை கைது செய்தனர். குடிப்பழக்கம் காரணமாக காதலி பேசாத ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்தியதாக இரணியல் போலீசாரிடம் பிரவீன் ரெஞ்சித் வாக்குமூலம் அளித்தார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விழாவில் தலைமை விருந்தினராக ஞானதிரவியம் எம்.பி. கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
    • விழாவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நாகர்கோவில் :

    நெல்லை மாவட்டம் காவல்கிணறு சந்திப்பில் அமைந்துள்ள சர்தார் ராஜாஸ் நர்சிங் கல்லூரியின் ஆண்டு விழா (Waves 2023) கல்லூரி வெள்ளி விழா கலையரங்கத்தில் வைத்து நடைபெற்றது.

    விழாவில் தலைமை விருந்தினராக ஞானதிரவியம் எம்.பி. கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரி தலைவர் டாக்டர் ஜேக்கப் ராஜா தலைமை உரையாற்றினார். கல்லூரி நிர்வாக இயக்குநர் சபீனா ஜேக்கப் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    நாகர்கோவில் பல்கலைக் க ழக பொறியியல் கல்லூரி டீன் டாக்டர் நாகராஜன் கவுரவ விருந்தி னராக கலந்துகொண்டார். கல்லூரி முதல்வர் டாக்டர் விசி மெர்லின் லிஷா கல்லூரி யின் ஆண்டு அறிக்கையை படித்தார். உதவி முதல்வர் பேராசிரியர் தேவ ஜான்சி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவி கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழாவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • நாணல் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டு பூஜைகள் நடத்தி தீபாராதனை காட்டப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் ஏகாட் சர மகா கணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 19-ந்தேதி வரை 11 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. இதையொட்டி இதற்கான பூர்வாங்க பூஜைகள் நேற்று இரவு நடந்தது.

    1-ம் திருவிழாவான இன்று காலையில் கொடியேற்றம் நடந்தது. முன்னதாக கொடிமரத்துக்கு விசேஷ அபிஷேகங்கள் சிறப்பு வழிபாடுகள் விசேஷ பூஜைகள் நடந்தது. அதன்பிறகு மேளதாளங்கள், பஞ்ச வாத்தியங்கள், மங்கள இசை முழங்க காலை 8.42 மணிக்கு கொடியேற்றப் பட்டது. சங்கர் பட்டர் தலைமையில் அர்ச்சகர்கள் கலந்துகொண்டு கொடி ஏற்றி வைத்தனர். கொடி ஏற்றப்பட்ட பிறகு கொடி மரத்துக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு நாணல் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டு பூஜைகள் நடத்தி தீபாராதனை காட்டப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., கன்னியாகுமரி விவே கானந்தர் கேந்திர துணை தலைவர் அனுமந்தராவ், கேந்திர நிர்வாக அதிகாரி அனந்த ஸ்ரீபத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருவிழாவையொட்டி தினமும் காலையில் யாகசாலை பூஜை, அபிஷேகம், தீபாராதனை போன்றவைகளும் நடக்கிறது. 6-ம் திருவிழாவான 14-ந்தேதி இரவு 7 மணிக்கு 108 கும்ப கலச முதல் கால பூஜைகள் தொடங்குகிறது. 7-ம் திருவிழாவான 15-ந்தேதி காலை 9 மணிக்கு 108 கலச அபிஷேகமும், அதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.

    10-ம் திருவிழாவான 18-ந்தேதி காலை 9.20 மணிக்கு விநாயகருக்கு 18-ம் காலயாக கலச அபிஷேகமும், அஷ்ட கலச அபிஷேகமும் நடக்கிறது. 10.30 மணிக்கு 21 வகையான அபிஷேகங்களும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு மங்கள இசையும், சாயராட்சை தீபாராதனை யும் நடக்கிறது. பின்னர் உற்சவ மூர்த்திக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. 6.30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    11-ம் திருவிழாவான 19-ந்தேதி காலை 7.35 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரையில் விநாயகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கன்னியா குமரி விவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன், துணை தலைவர்கள் அனுமந்தராவ், நிவேதிதா, பொதுச்செயலா ளர் பானு தாஸ், இணை பொதுச்செயலாளர்கள் ரேகாதவே, கிஷோர் பொருளாளர் பிரவீன் தபோல்கர், கேந்திர நிர்வாக அதிகாரி அனந்த ஸ்ரீபத்மநா பன் மற்றும் விவேகானந்த கேந்திர நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • கணவன்- மனைவி மீது வழக்கு
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழித்துறை :

    மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியை சேர்ந்தவர் வென்ஸ்லாஸ் (வயது 48). இவர் தனியார் உணவு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜோசப் (48), அவரது மனைவி விக்னேஸ்வரி (45) ஆகியோ ருக்கும் வழி பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்ப டுகிறது. இதையடுத்து வென்ஸ்லாஸ் பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது ஜோசப் மற்றும் விக்னேஸ்வரி ஆகியோர் சேர்ந்து அவரை தடுத்து நிறுத்தி தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த வென்ஸ்லாசை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத் துள்ளனர்.

    இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • இரணியலில் 26 மில்லி மீட்டர் பதிவு
    • மழையின் காரணமாக விவசாயிகள் கும்பபூ சாகுபடி பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் தினமும் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசுகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது.

    இரணியலில் அதிகபட்ச மாக 26 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாகர்கோவிலில் நேற்று இரவு விட்டு விட்டு மழை பெய்தது. இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப் பட்டது.

    அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மயிலாடி, கொட்டாரம், பூதப்பாண்டி, குளச்சல், தக்கலை, கோழிபோர்விளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. அருவி யில் வெள்ளம் கொட்டி வருகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பாசன குளங்களிலும் தண்ணீர் பெருகி வருகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைப்பகுதியிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.40 அடியாக உள்ளது. அணைக்கு 538 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 583 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.80 அடியாக உள்ளது. அணைக்கு 213 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 12.8, பெருஞ்சாணி 6, சிற்றாறு 1-9.2, சிற்றாறு 2-4, பூதப்பாண்டி 3.2, களியல் 9.2, கன்னிமார் 2.4, கொட்டாரம் 5.2, குழித்துறை 11.5, மயிலாடி 10.4, நாகர்கோவில் 9.2, புத்தன் அணை 7.4, சுருளோடு 8.6, தக்கலை 12, குளச்சல் 12.4, இரணியல் 26, பாலமோர் 21.6, மாம்பழத்துறையாறு 6.2, திற்பரப்பு 8.7, கோழிப்போர்விளை 8.5, அடையாமடை 4.1, குருந்தன்கோடு 13.2, முள்ளங்கினாவிளை 8.2, ஆணைக்கிடங்கு 8.2, முக்கடல் 2.3.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் கும்பபூ சாகுபடி பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். சுசீந்திரம், பூதப்பாண்டி பகுதிகளில் நாற்று பாவும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் உழவு பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பரு மழை தொடர்ந்து கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் சாகுபடி பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • பேச மறுத்ததால் ஆத்திரம்
    • முகநூல் மூலம் பழக்கம்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரவின் ரஞ்சித் (வயது 27), கட்டிட தொழிலாளி. இவருக்கும் ஆலங்கோடு பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் பட்ட தாரியான 27-வயது பெண்ணுக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    அந்தப் பெண் நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணியாற்றி வருகிறார். பழக்கத்தின் அடிப்படையில் அவர் அடிக்கடி ரஞ்சித்தை சந்தித்தார். நாளடைவில் அவர்களது நட்பு காதலாக மாறியது.

    இந்த நிலையில் பிரவின் ரஞ்சித்துக்கு குடிபழக்கம் இருப்பது, இளம்பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதால் இளம்பெண் அவருடனான தொடர்பை குறைத்துள்ளார். மேலும் முகநூல் பக்கத்தையும் பிளாக் செய்து தொடர்பை முற்றிலும் தவிர்த்துள்ளார்.

    இது பிரவின் ரஞ்சித்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர், இளம்பெண்ணை சந்தித்து காதலை தொடரும் படி வற்புறுத்தி உள்ளார். ஆனால் இளம்பெண் அதற்கு சம்மதிக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பிரவின் ரஞ்சித், நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிய இளம்பெண்ணை மீண்டும் சந்தித்து தன்னுடன் பேச வலியுறுத்தினார். ஆனால் அவர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். இதில் இளம்பெண்ணுக்கு வயிற்றில் பலகத்த காயம் ஏற்பட்டது.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் திரண்டதால், பிரவின் ரஞ்சித் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கத்தி குத்தில் படுகாயமடைந்த இளம்பெண் மீட்கப்பட்டு சிகிட்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிட்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் தலைமறைவாக இருந்த பிரவின் ரஞ்சித்தை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3-வது வார்டுக்குட்பட்ட பிளசன்ட் நகரில் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் செலவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி
    • அவ்வை சண்முகம் சாலை முதல் குறுக்கு தெரு வரை ரூ.4 லட்சத்து 50ஆயிரம் செலவில் காங்கிரீட்தளம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 48-வது வார்டுக்குட்பட்ட இடலாக்குடி பாவலர் அரசு பள்ளி பகுதியில் மேயர் மகேஷ் இன்று காலை ஆய்வு செய்தார். அந்த பகுதியில் கழிவு நீர் ஓடையின் மூடி பழுதடைந்து காணப்பட்டது. அதை உடனடியாக சரி செய்ய மேயர் மகேஷ் உத்தரவிட்டார்.பின்னர் அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடைகளை சுத்தம் செய்யவும் அறிவுறுத்தினார். 48-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள ஓடை ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து அதை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது மாநகர் நல அதிகாரி ராம்குமார் சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள், மண்டல தலைவர் ஜவகர், கவுன்சிலர் பியாசாஹஜிபாபு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து 1-வது வார்டுக்குட்பட்ட கடை தெரு பகுதியில் ரூ.2 லட்சம் செலவில் மழைநீர் வடிகால் ஓடை கான்கிரீட் அமைக்கும் பணியையும் விராணி பூங்காவில்ரூ. 5 லட்சத்து 75 ஆயிரம் செலவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    3-வது வார்டுக்குட்பட்ட பிளசன்ட் நகரில் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் செலவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியையும், 51-வது வார்டுக்குட்பட்ட கீழக்காட்டுவிளை, வடக்கு அஞ்சு குடியிருப்பு,கோவில் விளை பகுதிகளில் ரூ.25 லட்சம் செலவில் காங்கீரிட் தளம் அமைக்கும் பணியையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    25-வது வார்டுக்குட்பட்ட அவ்வை சண்முகம் சாலை முதல் குறுக்கு தெரு வரை ரூ.4 லட்சத்து 50ஆயிரம் செலவில் காங்கிரீட்தளம் அமைக்கும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மண்டல தலைவர் முத்துராமன், கவுன்சிலர்கள் தங்க ராஜா, அக்சயா கண்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • போலீசார்-தீயணைப்பு துறையிடம் சான்றுகள் பெறுவது கட்டாயம்
    • சிலையின் உயரம் அதன் பீடம் மற்றும் அடித்தளத்துடன் சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்

    நாகர்கோவில் :

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் கரைப்பதற்கு குமரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    சிலை வைக்க உத்தேசி க்கப்பட்டுள்ள இடம் பொது நிலமாக இருந்தால் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, நெடுஞ்சாலைத் துறையிடமும், தனியார் இடமாக இருந்தால் நில உரிமையாளரிடம் தடை யில்லா சான்று பெறப்பட வேண்டும்.

    விநாயகர் சிலை அமைக்க உத்தேசித்துள்ள அமைப்பாளர், சிலை வைக்கப்படும் இடத்திற்கு தடையில்லா சான்று பெற்று போலீசாரின் உரிய அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும். ஒலிப்பெருக்கி மற்றும் அனுமதிக்காக தடையில்லா சான்று தொடர்புடைய போலீஸ் இன்ஸ்பெக்டரிடமிருந்து பெற வேண்டும். காவல் துறையால் தெரிவிக்கப்படும் விதிமுறைகளுக்குட்பட்டு ஒலி பெருக்கிகள் பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் தடை செய்யப்பட்டுள்ளது.

    தற்காலிகக் கூடாரம் தீ பாதுகாப்பு தர நிலையை கடைபிடிப்பதாக உள்ளன என்பதற்கு தடையில்லா சான்று தீயணைப்பு துறை யிடம் பெற வேண்டும். மின் இணைப்பு வழங்கப்படு வதை குறிக்கும் கடிதம் மின்சார துறையிடமிருந்து பெற வேண்டும்.

    விநாயகர் சிலைகள் ஏற்கனவே வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுவ வேண்டும். அனுமதிக்க ப்பட்ட இடங்களில் மட்டுமே பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

    எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் கூடாரத்திலோ சிலை அமைக்கும் இடத்தி லோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பந்தலு க்குள் எளிதாக செல்லும் வகையில் உள்ளே செல்ல மற்றும் வெளியே வர விசாலமான பாதைகள் அமைக்கப்பட வேண்டும். ஓலைப் பந்தல் அமைப்ப தைத் தவிர்க்க வேண்டும்.

    சிலையின் உயரம் அதன் பீடம் மற்றும் அடித்தளத்துடன் சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். மருத்துவமனை கள் கல்வி நிறுவனங்கள், பிற வழிபாட்டு தலங்கள் அருகில் சிலை வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    சிலை நிறுவப்பட்ட இடத்தில் அரசியல் கட்சி அல்லது ஜாதி தலை வர்களின் தட்டிகள் கண்டிப்பாக வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

    சிலை நிறுவப்பட்ட இடத்தில் 24 மணி நேரமும் யாராவது 2 தன்னார்வலர்கள் பாது காப்புக்காக இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும். 4 சக்கர வாகனங்களான மினிலாரி போன்ற வாகனங்களில் மட்டுமே சிலைகளை கரைப்பதற்கு கொண்டு செல்ல பயன்படுத்த வேண்டும்.

    விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடத்திலோ, கரைப்பதற்கு கொண்டு செல்லும் ஊர்வலத்திலோ, சிலையை கரைக்கும் இடத்திலோ கண்டிப்பாக பட்டாசுகள் வெடிப்பது தடை செய்யப்படுகின்றது.

    விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட பூ மற்றும் மாலைகள், துணிகள் அழகு சாதன பொருட்கள் கரைக்கப்படுவதற்கு முன்பு பிரிக்கப்பட வேண்டும்.

    விநாயகர் சிலை கரைப்பதற்கான ஊர்வலம் குறிப்பிட்ட நேரத்திற்குள் சிலைகள் கரைப்பதற்கு அறிவிக்கப்பட்ட இடத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். சிலை கரைப்புக்கான ஊர்வலம் போலீசார் வரையறுத்துக் கொடுத்த பாதை வழியாக மட்டுமே கொண்டு செல்லப்பட வேண்டும். சூரியன் மறைவதற்குள் அனைத்து சிலைகளும் கரைக்க வேண்டும்.

    பொது அமைதி, பொது மக்கள் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை ஆகியவற்றினை பாதுகாக்கும் நோக்கோடு வருவாய்த் துறை காவல் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரி களால் பிறப்பிக்கப்படும் இதர நிபந்தனை மற்றும் கட்டுப்பாடு விதிகளை ஏற்பாட்டாளர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

    மோட்டார் வாகன சட்டம் 1988-ல் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் நபர்கள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும்.

    கடந்த 2018-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசா ணையின் அடிப்படை யில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கென அரசின் புதிய நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள் வரும் பொழுது மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்படும் அனைத்தையும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

    சிலை கரைப்பு நடைபெற்ற பகுதிகளில் கழிவுகள், குப்பைகள் அனைத்தும் உள்ளாட்சி, பேரூராட்சி அமைப்பால் சுத்தம் செய்யப்பட வேண்டும். சிலை அமைப்பாளர்களால் உரிய இடத்தில் சிலை அமைக்க ப்பட்டுள்ளதையும், விதி மீறல்கள் உள்ளதா? என்பதை உறுதி செய்யவும், ஊர்வலம் புறப்படும் இடத்திலிருந்து விஜர்சனம் செய்யும் இடங்களுக்கான வழித்தடங்களையும் முன்கூட்டியே காவல் துறையினர் தெரிவிக்கவும் வேண்டும்.

    ×