என் மலர்
கன்னியாகுமரி
- பொதுமக்கள் குளத்தில் குளிக்க முடியாமலும், விவசாயம் செய்ய முடியாமலும் பாதிக்கட்டனர்.
- கொட்டாரத்தில் பத்திரப் பதிவு அலுவலகம் செல்லும் சாலை முடியும் பகுதியில் அண்ணாவி குளம் உள்ளது.
கன்னியாகுமரி:
கொட்டாரத்தில் பத்திரப் பதிவு அலுவலகம் செல்லும் சாலை முடியும் பகுதியில் அண்ணாவி குளம் உள்ளது. இந்த குளத்தில் உள்ள மறுகால் ஓடை மற்றும் பொதுமக்கள் குளிக்கும் படித்துறை உடைந்து சேதம் அடைந்த நிலையில் பல ஆண்டுகளாக பராமரிக்கப் படாமல் கிடந்தது. இதனால் பொதுமக்கள் குளத்தில் குளிக்க முடியாமலும், விவசாயம் செய்ய முடியாமலும் பாதிக்கட்ட னர். இதைத் தொடர்ந்து குளத்தின் படித்துறை மற்றும் மறுகால் ஓடையை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். விவசாயிகளின் இந்த கோரிக்கையை ஏற்று சமூக ஆர்வலர் வக்கீல் சந்திர சேகரன் ஏற்பாட்டில் மறு கால் சீரமைப்பு பணி தொடங்கியது.
இந்த பணியை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், கொட்டாரம் பேரூராட்சி துணை தலைவி விமலா, நகர காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார், தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி மதி, காங்கிரஸ் வட்டார துணை தலைவர் அரி கிருஷ்ண பெருமாள், தி.மு.க. நிர்வா கிகள் முருகன், சாமிநாதன், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஒர்கிங் சென்டர் கட்டிட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
- உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், பேச்சிப்பாறை ஊராட்சி மற்றும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியம், மாங்கோடு மற்றும் புலியூர் சாலை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணி களை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம் குடியிருப்பில் ரூ.10.40 லட்சம் மதிப்பில் மறு சீரமைக்கப்பட்டு வரும் கட்டிட பணிகளை பார்வை யிட்டேன். பணிகளை விரைந்து முடித்து குடியி ருப்பு பகுதி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மணியங்குழியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-22-ன் கீழ் ரூ.11.97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிட பணியும் ஆய்வு செய்யப்பட் டது.அதனைத்தொடர்ந்து மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுய உதவி குழு கட்டிட பணி களை ஆய்வு மேற்கொண்ட தோடு பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஒர்கிங் சென்டர் கட்டிட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
கட்டுமான பணிகளின் தரத்தினை உறுதி செய்திட வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மேல்புறம் ஊராட்சி ஒன்றி யத்துக்குட்பட்ட மாங்கோடு ஊராட்சி பகுதியில் பிர தான் மந்திரி கிராம சாலை இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.69 கோடி மதிப்பில் வெள்ளாடிச்சிப்பாறை-ஓடவள்ளி முதல் நெட்டா வரை 2,400 மீட்டர் நீளத்தில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள தார் சாலையை பார்வை யிட்டேன். சாலை யின் தரம் ஆய்வு செய்யப் பட்டது. மேலும், புலி யூர்ச்சாலை ஊராட்சி யில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23.57 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப் பட்டு வரும் ஊராட்சி அலுவலக கட்டி டத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள், உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலு வலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சுசீந்திரம், சாமிதோப்பு, கொட்டாரம் பகுதிகளிலும் இன்று காலை சாரல் மழை பெய்தது.
- தக்கலையில் அதிகபட்சமாக 4.2 மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. திடீரென சாரல் மழையும் பெய்தது. சுசீந்திரம், சாமிதோப்பு, கொட்டாரம் பகுதிகளிலும் இன்று காலை சாரல் மழை பெய்தது. தக்கலை, குலசே கரம், தடிக்காரன்கோணம், அருமனை, குழித்துறை பகுதிகளிலும் மழை பெய்தது. தக்கலையில் அதிகபட்சமாக 4.2 மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அங்கு ரம்ய மான சூழல் நிலவு கிறது.
அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.அவர்கள் குடும்பத்தோடு அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டி ருக்கிறது. அணைகளில் இருந்து 783 கன அடி தண்ணீர் சாகுபடிக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.36 அடியாக உள்ளது. அணைக்கு 563 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 583 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.80 அடியாக உள்ளது. அணைக்கு 213 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- மற்றொரு விபத்தில் விவசாயி சாவு
- தனியார் மெடிக்கல் நிறுவனத்தில் மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.
இரணியல்:
நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை கீழத் தெருவை சேர்ந்தவர் ஆபத்துகாத்தபிள்ளை (வயது 52). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் நிறுவனத்தில் மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவருடன் நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த முருகன் (65) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் வேலை விஷயமாக நேற்று தக்கலை பகுதிக்கு வந்து விட்டு இரவு நாகர்கோவில் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். மொபட்டை முருகன் ஓட்டினார். ஆபத்து காத்தபிள்ளை பின்னால் அமர்ந்திருந்தார்.
மொபட் வில்லுக்குறி பாலம் தாண்டி அங்குள்ள பெட்ரோல் பங்க் எதிரே சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பின்னால் வேகமாக வந்த அரசு பஸ் மொபட்டை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சின் பின்பக்கம் மொபட்டில் உரசியது. இதில் மொபட்டில் சென்ற இருவரும் கீழே விழுந்தனர். பின்னால் அமர்ந்திருந்த ஆபத்து காத்தபிள்ளை ரோட்டில் விழுந்தார். அப்போது பஸ்சின் பின் சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கிய ஆபத்துகாத்த பிள்ளை சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து முருகன், இரணியல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் கொல்லங்கோடு ஆறுகோடு பகுதியை சேர்ந்த சிந்து குமார் (52) என்பவர் மீது இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.
இரணியல் அருகே உள்ள மாங்குழி பகுதியை சேர்ந்த வர் வின்சென்ட் (65), விவ சாயி. இவர் நேற்று சொந்த வேலை காரணமாக வெளியே சென்று விட்டு மதியம் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். திங்கள் நகர் ரவுண்டானா தாண்டி ராதாகிருஷ்ணன் கோவில் ஜங்ஷன் அருகே வரும்போது பின்னால் வேகமாக வந்த மினி பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த சம்பவத்தில் தூக்கி வீசப்பட்ட வின்சென்ட் படுகாயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியி லேயே வின்சென்ட் பரிதாப மாக இறந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் தேவ சகாயம், இரணியல் போலீ சில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய மினி பஸ் டிரைவர் கொக்கோடு வலியவிளை வைகுண்ட குமார் (29) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் இன்று குளச்சலில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
- பேரணியில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை ஓராண்டு நிறைவையொட்டி பேரணிகள் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் ஓராண்டு நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் இன்று குளச்சலில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
இதில், குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
- தி.மு.க.மாவட்ட செயலாளர் மகேஷ் அறிக்கை
- 27-ந்தேதி சுசீந்திரம் பேரூர், தென்தாமரைகுளம் 28-ந்தேதி கணபதிபுரம் வாக்குச்சாவடி முகவர் குழு உறுப்பினருக்கான கூட்டம்
நாகர்கோவில் :
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாநகராட்சி மேயருமான மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குமரி கிழக்கு மாவட்டத்தில் 100 வாக்காளர்களுக்கு ஒரு முகவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குளச்சல் நகராட்சி மற்றும் 28 பேரூராட்சி வாக்குச்சாவடி முகவர் குழு உறுப்பினர்களுக்கான ஆய்வு கூட்டம் வருகிற 10-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடக்கிறது.
10-ந்தேதி மாலை 5 மணிக்கு குளச்சல் நகரத்திற்கான கூட்டம் குளச்சல் எஸ்.பி.எம். மஹாலில் நடைபெறுகிறது.
11-ந்தேதி மாலை 5 மணிக்கு புத்தளம் பேரூர் உட்பட்ட வாக்குச்சாவடி முகவர் குழு உறுப்பினர் கூட்டம் புத்தளம் சமுதாய நலக்கூடத்திலும், 12-ந்தேதி பூதப்பாண்டி பேரூருக்கான கூட்டம் மாலை 4 மணிக்கு திட்டவிளை சாலோம் திருமண மண்டபத்திலும், மாலை 6 மணிக்கு அழகியபாண்டியபுரம் பேரூருக்கான கூட்டம் அழகியபாண்டியபுரம் வி.ஆர்.மினி மஹாலிலும் நடக்கிறது.
13-ந்தேதி மாலை 4 மணிக்கு அகஸ்தீஸ்வரம் பேரூர் கூட்டம் அகஸ்தீஸ்வரம் சமுதாய கூடத்திலும், மாலை 6 மணிக்கு கொட்டாரம் பேரூருக்கான கூட்டம் கொட்டாரம் என்.என்.சி.ஆர்.திருமண மண்டபத்திலும் நடக்கிறது.
14-ந்தேதி மாலை 4 மணிக்கு ரீத்தாபுரம் பேரூர் கூட்டம் சாஜன் மஹாலிலும், மாலை 6 மணிக்கு கல்லுக்கூட்டம் பேரூருக்கான கூட்டம் ஜேக்கப்பத் பள்ளி வளாகத்திலும் நடக்கிறது.
இதேபோல் 15-ந்தேதி நெய்யூர், திங்கள்நகர் பேரூர் முகவர் குழு உறுப்பினர் கூட்டமும், 19-ந்தேதி வில்லுக்குறி, வெள்ளிமலை பேரூர் முகவருக்கான கூட்டமும், 20-ந்தேதி மணவாளக்குறிச்சி மண்டைக்காடு வாக்குச்சாவடி முகவர் குழு உறுப்பினருக்கான கூட்டமும், 21-ந்தேதி கப்பியறை, இரணியல் வாக்குச்சாவடி முகவர் குழு கூட்டமும் நடக்கிறது.
22-ந்தேதி வாழ்வச்சகோஷ்டம், முளகுமூடு பேரூர், 23-ந்தேதி அஞ்சுகிராமம் அழகப்பபுரம், 24-ந்தேதி தேரூர், மருங்கூர் மயிலாடி 25-ந்தேதி தாழக்குடி, ஆரல்வாய்மொழி வாக்குச்சாவடி முகவர் குழு உறுப்பினருக்கான கூட்டமும் நடக்கிறது.
26-ந்தேதி கன்னியாகுமரி பேரூர், 27-ந்தேதி சுசீந்திரம் பேரூர், தென்தாமரைகுளம் 28-ந்தேதி கணபதிபுரம் வாக்குச்சாவடி முகவர் குழு உறுப்பினருக்கான கூட்டம் நடைபெறுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
- சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பபெறக் கோரி நடந்தது
- சாலையில் அமர்ந்ததால் பரபரப்பு
நாகர்கோவில் :
நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பபெறக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் தே.மு.தி.க. கட்சி சார்பில் மறியல் போராட்டம் இன்று நடந்தது.
நாகர்கோவில் அருகே திருப்பதிசாரத்தில் உள்ள சுங்கச்சாவடி பகுதியில் குமரி மாவட்ட தே.மு.தி.க.வினர் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் அமுதன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் இந்தியன் சுரேஷ் முன்னிலை வகித்தார்.
போராட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் செல்வகுமார், அவை தலைவர் அய்யாதுரை, மாநில செயற்குழு உறுப்பினர் வைகுண்ட மணி, ஒன்றிய செயலாளர்கள் பரமராஜா, மைக்கேல் ரத்தினம், நாகராஜன், தங்ககிருஷ்ணன், புகாரி, ஜஸ்டின் பிரபு, செந்தில் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பாக்கியவதி, விஜயா, பாப்பா, வக்கீல் பொன் செல்வராஜன், செந்தில் மோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்ககோரி கோஷங்களை எழுப்பினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். மறியல் போராட்டத்தையடுத்து திருப்பதிசாரம் சுங்கச்சாவடி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- 45-வது வார்டுக்குட்பட்ட அம்மன் கோவில் சாலையில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் தார்தளம் அமைக்கும் பணி
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சி 45-வது வார்டுக்குட்பட்ட அம்மன் கோவில் சாலையில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் தார்தளம் அமைக்கும் பணி, 12-வது வார்டுக்குட்பட்ட ஒழுகினசேரி பழையாறு சாலையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார்தளம் அமைக்கும் பணிகளையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நாகர்கோவில் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி.பள்ளி அருகில் அடைப்பட்டுள்ள மழைநீர் வடிகால் சரி செய்வது மற்றும் தழுவிய மகாதேவர் கோவில் தெப்பகுளம் சுற்று சுவர் கட்டுவது தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன், துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர் ஜவகர், மாமன்ற உறுப்பினர்கள் சதீஸ், சுனில், தி.மு.க. மாநகர துணை செயலாளர் வேல்முருகன், துணை இளைஞரணி சரவணன், வட்ட செயலாளர் சிவகுமார் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
- இறைச்சி கழிவுகள், ஓட்டல் கழிவுகள் மற்றும் பல்வேறு விதமான கழிவுகள் இருப்பது தெரியவந்தது.
- சோதனை சாவடிகளில் தடுத்து நிறுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
அருமனை,
அருமனை சுற்றுவட்டார பகுதிகளில் பன்றி பண்ணைகள் இருந்து வருகிறது. இந்நிலையில் பன்றி பண்ணையை அகற்றக்கோரி பொதுமக்கள் பல்வேறு விதமாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தற்போது கேரளாவிலிருந்து கழிவு பொருட்களை வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலையில் களியல் வழியாக படப்பச்சை பகுதிக்கு பல்வேறு கழிவுகளை ஏற்றி கொண்டுவரப்பட்ட லாரியை பொதுமக்கள் விரட்டி குஞ்சாலுவிளை பகுதியில் வைத்து பிடித்துள்ளனர். லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து போலீசாருக்கும், அருமனை பேரூராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, லாரியை பறிமுதல் செய்தனர். போலீசார் லாரியில் சோதனையிட்ட போது அதில் இறைச்சி கழிவுகள், ஓட்டல் கழிவுகள் மற்றும் பல்வேறு விதமான கழிவுகள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் கூறும்போது, கேரளாவில் இருந்து கழிவுகள் அடிக்கடி கொண்டு வருகின்றனர். இதனை சாலையின் ஓரத்தில் கொட்டி விட்டு வாகனங்கள் செல்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் கேரளாவில் இருந்து கழிவு பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை சோதனை சாவடிகளில் தடுத்து நிறுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
- விஜய்வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
- ரூ.12,95,000 மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு
திருவட்டார் :
கண்ணனூர் ஊராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட சியோன்மலை பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விழும் தருவாயில் சேதமடைந்து இருந்தது. அதனை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செலின்மேரியிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று மாவட்ட பஞ்சாயத்து கமிட்டி கூட்டத்தில் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் ரூ.12,95,000 மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. கட்டிடத்தின் பணிகள் முடிந்து அதன் திறப்பு விழா நடைபெற்றது.
மாவட்ட பஞ்சயாத்து கவுன்சிலர் செலின்மேரி தலைமை தாங்கினார். விஜய்வசந்த் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அங்கன்வாடியை திறந்து வைத்தார். அகில இந்திய காங்கிரஸ் பொது க்குழு உறுப்பினர் ரெத்தின குமார், வட்டார தலைவர் வக்கீல் ஜெபா, குமரி மேற்கு மாவட்ட பொருளாளர் ஐஜிபி. லாரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொதுசெய லாளர் ஜான் இக்னேசியஷ், மாவட்ட செயலாளர் பென்னட், முன்னாள் வட்டார தலைவர் ஜெக ன்ராஜ், கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோன், மாவட்ட செயலாளர் ஆற்றூர் குமார், வார்டு உறுப்பினர் யோவான் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 1933 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
- காலை 1 மணி நேரத்தில் 15 வழக்குகள் பேசி தீர்வு காணப்பட்டது
நாகர்கோவில் :
நாடு முழுவதும் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க லோக் அதாலத் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இன்று லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது. நாகர்கோவில் கோர்ட்டில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை நீதிபதி அருள்முருகன் தொடங்கி வைத்தார். முதன்மை குற்றவியல் நீதிபதி கோபாலகிருஷ்ணன் முதன்மை சார்பு நீதிபதி சொர்ண குமார், சார்பு நீதிபதி அசான் முகமது, நீதிபதிகள் விஜயலட்சுமி, தாயுமானவர், மணிமேகலை வழக்கறிஞர் சங்க தலைவர் பால ஜனாதிபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நாகர்கோவிலில் 6 பெஞ்சுகளில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சொத்து தொடர்பான வழக்குகள், விபத்து காப்பீடு தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மோட்டார் காப்பீடு இன்சூரன்ஸ் மற்றும் காசோலை வழக்குகள் பேசி தீர்வு காணப்பட்டது. காலை 1 மணி நேரத்தில் 15 வழக்குகள் பேசி தீர்வு காணப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ரூ.68 லட்சத்து 78 ஆயிரம் வழங்கப்பட்டது.
இதேபோல் தக்கலை, பூதப்பாண்டி, இரணியல், குழித்துறை கோர்ட்டுகளிலும் லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டம் முழுவதும் 5 இடங்களில் இன்று நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியில் 1933 வழக்குகள் விசார ணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டு உள்ளது.
- ரூ.10 கோடி விலை நிர்ணயம் செய்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியார் மீது வழக்கு பதிவு
- கைது செய்ய கேட்டு குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் அருமனை போலீஸ் நிலையத்தில் புகார்
குழித்துறை :
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி விலை நிர்ணயம் செய்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியார் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்ய கேட்டு குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் அருமனை போலீஸ் நிலையத்தில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் லிஜிஸ் ஜூவன் தலைமையில், மேல்புறம் தெற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் ராஜேஷ் குமார் முன்னிலையில் புகார் மனு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெகநாதன், முன்னாள் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வக்கீல் ஜெபா, மாணவரணி துணை அமைப்பாளர் ஜோயல், மேல்புறம் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் தோமசிங் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






