என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ.35.50 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள்
    X

    நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ.35.50 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள்

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • 45-வது வார்டுக்குட்பட்ட அம்மன் கோவில் சாலையில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் தார்தளம் அமைக்கும் பணி

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 45-வது வார்டுக்குட்பட்ட அம்மன் கோவில் சாலையில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் தார்தளம் அமைக்கும் பணி, 12-வது வார்டுக்குட்பட்ட ஒழுகினசேரி பழையாறு சாலையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார்தளம் அமைக்கும் பணிகளையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நாகர்கோவில் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி.பள்ளி அருகில் அடைப்பட்டுள்ள மழைநீர் வடிகால் சரி செய்வது மற்றும் தழுவிய மகாதேவர் கோவில் தெப்பகுளம் சுற்று சுவர் கட்டுவது தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன், துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர் ஜவகர், மாமன்ற உறுப்பினர்கள் சதீஸ், சுனில், தி.மு.க. மாநகர துணை செயலாளர் வேல்முருகன், துணை இளைஞரணி சரவணன், வட்ட செயலாளர் சிவகுமார் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×