என் மலர்
கன்னியாகுமரி
- கைதான சிறுவர்கள் வாக்குமூலம்
- கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றி திரிந்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி சுனாமி காலனியை சேர்ந்தவர் சகாயம் (வயது 45). கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டனர். இதனால் அவர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றி திரிந்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் இவருக்கும், கன்னியா குமரி சர்ச் சன்னதி தெருவை சேர்ந்த சுமார் 15 வயது மதிக்கத்தக்க சிறுவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் முன்வி ரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சகாயம் கன்னியாகுமரி வடக்கு தெரு பகுதியில் உள்ள ஒரு லாட்ஜ் அருகில் நின்று கொண்டிருந்தபோது அவரை அந்த 3 சிறுவர்களும் சேர்ந்து குத்தி கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சகாயத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக கன்னியாகுமரி சர்ச் சன்னதி தெரு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவர் ஒருவரையும், 16 வயது இன்னொரு சிறுவரையும், வடக்கு குண்டல் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர் ஒருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளனர். அதில் அவர்கள் கூறியதா வது:-
சகாயத்துக்கும் எங்க ளுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது சகாயம் பாட்டிலை உடைத்து எங்களை குத்திவிட்டார். இதில் எங்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மீது இருந்து வந்த முன்விரோதம் காரணமாக நாங்கள் அவரை எப்படியா வது கொலை செய்ய வேண்டும் என்று திட்ட மிட்டோம். இந்த நிலையில் சகாயம் கன்னியாகுமரி வடக்கு தெரு பகுதியில் உள்ள ஒரு லாட்ஜ் முன்பு நின்று கொண்டிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நாங்கள் கத்தியுடன் அவரை கொலை செய்வதற்காக அங்கு சென்றோம். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சகாயத்தை எங்களது கையில் மறைத்து வைத்தி ருந்த கத்தியால் அவரது மார்பில் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட அந்த 3 சிறுவர்களையும் போலீசார் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்க ளை சீர்திருத்த பள்ளியில் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தர விட்டார். அதன்படி அந்த 3 சிறுவர்களும் நெல்லையில் உள்ள சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
- சிவன்கோவில் கொடூர்குளம் நல்லதங்காடு சாலை, கல்வெட்டான் குழி குருசடி சாலை பணிகள் நடைபெற உள்ளது.
களியக்காவிளை :
களியக்காவிளை அருகே முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குளப்புறம் கிராம ஊராட்சியில் முதல்-அமைச்சர் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் சிவன்கோவில் கொடூர்குளம் நல்லதங்காடு சாலை, கல்வெட்டான் குழி குருசடி சாலை பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., குளப்பு றம் ஊராட்சி தலைவர் மனோன்மணி, மாவட்ட கவுன்சிலர் லூயிசாள், ஒன்றிய கவுன்சிலர் கலா, ஊராட்சி துணை தலைவர் வினு, முஞ்சிறை மேற்கு ஒன்றிய செயலாளர் றாபி, வார்டு உறுப்பினர்கள் ஞானசுந்தரி, லைலா, ஜெயராணி, றீனா, அல்போன்சா, ஜெபகுமார், அனில் குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- ஓட்டலில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது
- குத்தி கொலை செய்யும் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
குழித்துறை :
மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலை பம்மத்தில் உள்ள ஓட்டலில் தென் தாமரைகுளத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது50) மற்றும் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் நெட்டூரை சேர்ந்த கணேசன் (45) ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
நேற்று மாலை 2 பேரும் பணியில் இருந்தபோது, சப்ளை செய்வதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாக கூறப்ப டுகிறது. இதில் ஆத்திர மடைந்த கணேசன், ஓட்ட லில் இருந்த கத்தியை எடுத்து ராதா கிருஷ்ணனை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். அதற்குள் ராதாகிருஷ்ணன் பரி தாபமாக இறந்துவிட்டார்.
ராதாகிருஷ்ணன் உடலை போலீசார் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஓட்டலில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
தப்பியோடிய கணேசனை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அவரை பல இடங்களில் தேடி வருகின்றனர்.
கணேசனின் சொந்தஊர் ெநல்லை மாவட்டம் ஆலங்குளம் என்பதால், அவர் அங்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று தேடுதல் ேவட்டையில் ஈடுபட்டுள்ள னர்.
இதற்கிடையில் ஓட்டலில் ராதா கிருஷ்ணனை துரத்தி துரத்தி கணேசன் குத்தி கொலை செய்யும் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- மாணவ-மாணவிகள் குடைபிடித்து சென்றனர்
- பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலகம் செல்வோர் பாதிக்கப்பட்டனர்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக காலை நேரங்களில் சாரல் மழை பெய்வதால் ரம்யமான சூழல் நிலவி வருகிறது. பகல் நேரங்களிலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.
இன்று காலையும் மாவட்டத்தின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இந்த நிலையில் நாகர்கோவில், சாமிதோப்பு, சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 7 மணி முதல் விட்டு விட்டு மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை நீடித்தே வந்தது.
அதேநேரம் களியக்காவிளை, நித்திரவிளை, களியல், கடையால் மற்றும் மலையோரப் பகுதிகளில் ஓரளவு மிதமான மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலகம் செல்வோர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மழையின் நனைந்த படியே சென்றனர். சிலர் குடை பிடித்தபடி சென்றனர்.
மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு 471 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 181 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
- அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
- மரக்கிளைகள் அகற்றும் பணி நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
களியக்காவிளை :
குழித்துறை செயற்பொறி யாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-
மார்த்தாண்டம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் (13-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் மார்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக் கடை, காரவிளை, உண்ணா மலைக்கடை, ஆயிரம் தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூர், வெட்டுவெந்நி ஆகிய இடங்களுக்கும், அதனை சார்ந்த துணை கிராமங்களுக்கும் அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
குறிப்பிட்ட நேரத்தில் மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும், மின்பாதைகளுக்கும் இடை யூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணி நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 374 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 215 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது
- லோக் அதாலத் மூலம் ரூ.2½ கோடி வசூலாகி உள்ளது.
தக்கலை :
தமிழகம் முழுவதும் லோக் அதாலத் நடைபெற்றது. இதில் தக்கலை கோர்ட்டில் 374 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 215 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. இதில் வங்கி வாரா கடன் வழக்கு 229-ல் 89 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு பணம் வசூலிக்கப்பட்டது. இதுபோல சிவில் வழக்குகள் 49 எடுத்துக்கொள்ளப்பட்டு 31 வழக்குகள் முடிக்கப்பட்டு பணம் வசூலிக்கப்பட்டது.
மேலும் குற்றவியல் வழக்குகளில் 96 எடுக்கப்பட்டு 95 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. லோக் அதாலத் மூலம் ரூ.2½ கோடி வசூலாகி உள்ளது.
இதில் பத்மனாபபுரம் சார்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் தலைமையில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி மருதுபாண்டி, நீதிபதி பிரவீன் ஜீவா மற்றும் வழக்கறிஞர் ஜாண் இக்னேசியஸ் உள்பட பல வக்கீல்கள் கலந்துகொண்டனர்.
- அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.
- சுசீந்தி ரம் தாணுமாலயசாமி கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்
கன்னியாகுமரி :
கேரள மாநிலம் கோட்ட யம் மாவட்டம் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் வெற்றி பெற்றார்.
இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு சாண்டி உம்மன் முதல் முறையாக நேற்று கன்னியா குமரி வந்தார். அவர் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளுடன் படகில் சென்றார். அங்கு வந்த அவரை விவேகானந்தர் பாறை நினைவாலய மக்கள் தொடர்பு அதிகாரி அவினாஷ் வரவேற்றார். பின்னர் சாண்டி உம்மன் விவேகானந்தர் மண்ட பத்தை சுற்றி பார்வையிட்டார்.
அதன் பிறகு அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு வந்த அவரை நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்க ளின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். பின்னர் சாண்டி உம்மன் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அங்குள்ள அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.
அதன் பிறகு கன்னியா குமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதிக்கு சென் றார். கடற்கரையில் நின்ற படி கடலின் இயற்கை அழகை பார்த்து ரசித்தார். பின்னர் அங்குள்ள சுற்றுலா தலங்களையும் பார்வை யிட்டார்.
ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதா கிருஷ்ணனும் நேற்று மாலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவி லில் உள்ள ஸ்ரீ காலபைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, தியாக சவுந்தரி அம்மன் சன்னதி, மூலஸ் தான கருவறையில் அமைந்துள்ள பகவதி அம்மன் சன்னதி, இந்திர காந்த விநாயகர் சன்னதி, பால சவுந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீதர்ம சாஸ்தா அய்யப்பன் சன்னதி, ஸ்ரீநாக ராஜர் மற்றும் சூரிய பகவான் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக அவர் சுசீந்தி ரம் தாணுமாலயசாமி கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். அங்குள்ள தட்சிணாமூர்த்தி, கொன்றையடி, மூலஸ்தான கருவறையில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே லிங்கவடிவத்தில் காட்சியளிக்கும் தாணுமாலயசாமி சன்னதி மற்றும் ஆஞ்சநேயர் சன்னதி உள்பட அனைத்து சன்னதிகளுக்கும் அவர் சென்று சாமி தரிசனம் செய்தார்.
அவருடன் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. உள்பட பலர் உடனிருந்தனர். சுசீந்திரம் கோவிலுக்கு வந்த ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதா கிருஷ்ணனை கோவில் மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் கோவில் கணக்காளர் கண்ணன் உள்பட பலர் வரவேற்றனர்.
- சில போட்டிகள் பார்ப்போரை மலைக்க வைக்கும் வகையில் அமையும்.
- அண்ணா விளையாட்டு அரங்கில் கண்ணன் இன்று தீவிர பயிற்சி மேற்கொண்டிருந்தார்.
உலக அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் சாதனையாளர்கள் உருவாகி வருகின்றனர். இதில் சில போட்டிகள் பார்ப்போரை மலைக்க வைக்கும் வகையில் அமையும். அப்படி ஒரு போட்டி தான் உலக 'ஸ்டிராங் மேன்' போட்டி.
ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் உலக ஸ்ட்ராங் மேன் போட்டியில் தமிழகத்தில் இருந்து முதல் முறையாக பங்கேற்க தேர்வானவர் இந்திய ஸ்ட்ராங்மேன் குமரி மாவட்டத்தை சேர்ந்த கண்ணன்.
அண்ணா விளையாட்டு அரங்கில் கண்ணன் இன்று தீவிர பயிற்சி மேற்கொண்டிருந்தார். அவரை அங்கு நேரில் சந்தித்து பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வாழ்த்து தெரிவித்தார்.
- ரெயில்வே மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.
- நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
கப்பியறை பேரூராட்சிக்கு உட்பட்ட வட்டவிளையில் ரெயில்வே மேம்பாலம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டது.
இந்த ரெயில்வே மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.
- குலசேகரம் அருகே விலவூர்கோணம் பகுதியை சேர்ந்தவர்
- இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை
நாகர்கோவில் : குலசேகரம் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவுநாகர்கோவில்: குலசேகரம் அருகே விலவூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் குமார் (வயது 39), தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தினமும் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.
சம்பவத்தன்று வீட்டின் அருகில் தோட்டத்தில் உள்ள மரத்தில் பாக்கு பறிப்பதற்காக ஏறினார். அப்போது மரம் முறிந்து கீழே விழுந்தது. இதில் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் குமார் பரிதாபமாக இறந்தார். அவரது அண்ணன் அய்யப்பன் புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது
- ரூ.3 கோடி செலவில் குடிநீர் மற்றும் சாலை திட்டப் பணிகளை நிறைவேற்றுதல்
நாகர்கோவில் :கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது. பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், துணை தலைவி ஜெனஸ் மைக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் லிங்கேஸ் வரி, மகேஷ், சுஜா, இந்திரா,ராயப்பன், சிவசுடலைமணி, இக்பால், வினிற்றா, சகா யசர்ஜினாள், சகாயஜூடு அல்பினோ, பூலோக ராஜா, அட்லின், ஆனிரோஸ் தாமஸ், டெல்பின், பேரூ ராட்சி சுகாதார அதிகாரி முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் பேரூராட்சி பொது நிதியில் இருந்தும், தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்தும் ரூ.3 கோடி செலவில் குடிநீர் மற்றும் சாலை திட்டப் பணிகளை நிறைவேற்றுதல்.
தெருக்களில் உள்ள மின்விளக்குகளை பரா மரித்தல், அலங்கார தரைத்தளம் அமைத்தல், கழிவுநீர் ஓடை சீரமைத்தல் உள்ளிட்ட பல வளர்ச்சி திட்ட பணிகளை நிறை வேற்று வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் பல்வேறு வரவு-செலவு கணக்குகள் வாசித்து அங்கீகரிக்கப்பட்டன.
- பொதுமக்கள் குளத்தில் குளிக்க முடியாமலும், விவசாயம் செய்ய முடியாமலும் பாதிக்கட்டனர்.
- கொட்டாரத்தில் பத்திரப் பதிவு அலுவலகம் செல்லும் சாலை முடியும் பகுதியில் அண்ணாவி குளம் உள்ளது.
கன்னியாகுமரி:
கொட்டாரத்தில் பத்திரப் பதிவு அலுவலகம் செல்லும் சாலை முடியும் பகுதியில் அண்ணாவி குளம் உள்ளது. இந்த குளத்தில் உள்ள மறுகால் ஓடை மற்றும் பொதுமக்கள் குளிக்கும் படித்துறை உடைந்து சேதம் அடைந்த நிலையில் பல ஆண்டுகளாக பராமரிக்கப் படாமல் கிடந்தது. இதனால் பொதுமக்கள் குளத்தில் குளிக்க முடியாமலும், விவசாயம் செய்ய முடியாமலும் பாதிக்கட்ட னர். இதைத் தொடர்ந்து குளத்தின் படித்துறை மற்றும் மறுகால் ஓடையை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். விவசாயிகளின் இந்த கோரிக்கையை ஏற்று சமூக ஆர்வலர் வக்கீல் சந்திர சேகரன் ஏற்பாட்டில் மறு கால் சீரமைப்பு பணி தொடங்கியது.
இந்த பணியை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், கொட்டாரம் பேரூராட்சி துணை தலைவி விமலா, நகர காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார், தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி மதி, காங்கிரஸ் வட்டார துணை தலைவர் அரி கிருஷ்ண பெருமாள், தி.மு.க. நிர்வா கிகள் முருகன், சாமிநாதன், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






