தக்கலை கோர்ட்டில் நடந்த லோக் அதாலத்தில் 215 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.2½ கோடி வசூல்

374 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 215 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதுலோக் அதாலத் மூலம் ரூ.2½ கோடி வசூலாகி உள்ளது.
தக்கலை கோர்ட்டில் நடந்த லோக் அதாலத்தில் 215 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.2½ கோடி வசூல்
Published on

தக்கலை :

தமிழகம் முழுவதும் லோக் அதாலத் நடைபெற்றது. இதில் தக்கலை கோர்ட்டில் 374 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 215 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. இதில் வங்கி வாரா கடன் வழக்கு 229-ல் 89 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு பணம் வசூலிக்கப்பட்டது. இதுபோல சிவில் வழக்குகள் 49 எடுத்துக்கொள்ளப்பட்டு 31 வழக்குகள் முடிக்கப்பட்டு பணம் வசூலிக்கப்பட்டது.

மேலும் குற்றவியல் வழக்குகளில் 96 எடுக்கப்பட்டு 95 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. லோக் அதாலத் மூலம் ரூ.2½ கோடி வசூலாகி உள்ளது.

இதில் பத்மனாபபுரம் சார்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் தலைமையில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி மருதுபாண்டி, நீதிபதி பிரவீன் ஜீவா மற்றும் வழக்கறிஞர் ஜாண் இக்னேசியஸ் உள்பட பல வக்கீல்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com