2024-ம் ஆண்டு ராகுல்காந்தி பிரதமர் ஆவார்

இந்திய ஒற்றுமை பயணம் ஓராண்டு நிறைவு விழாவிஜய் வசந்த் எம்.பி. பேச்சு
2024-ம் ஆண்டு ராகுல்காந்தி பிரதமர் ஆவார்
Published on

குளச்சல் :

குமரி மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை ஓராண்டு நிறைவு பேரணி குளச்சல் பீச் சந்திப்பில் நடந்தது.

மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் வதனா நிஷா தலைமையில் விஜய் வசந்த் எம்.பி. பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியானது பெரிய பள்ளி முக்கு சந்திப்பு, பள்ளிரோடு, பயணியர் விடுதி சந்திப்பு, குளச்சல் அரசு மருத்துமனை வழியாக காமராஜர் பஸ் நிறுத்தம் சென்றடைந்தது. அங்கு விஜய்வசந்த் எம்.பி.பேரணியை முடித்து வைத்து பேசியதாவது:-

ஏழை எளிய உழைக்கும் மக்களின் குரலை நாடாளு மன்றத்தில் ராகுல்காந்தி ஒலிக்க செய்தார். நாட்டு மக்களுக்காக அவர் இன்னும் உழைத்துக்கொண்டு தான் இருக்கிறார். வருகிற 2024-ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் அமோக வெற்றிப்பெற்று பிரதமர் ஆவார். அதற்கு நீங்கள் தொடர்ந்து காங்கிரசை ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பேரணியில் குருந்தன் கோடு ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் எனல்ராஜ், ரீத்தாபுரம் பேரூராட்சி தலைவர் எட்வின் ஜோஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com