என் மலர்
நீங்கள் தேடியது "நர்சிங் கல்லூரி"
- பெர்ஷியாள் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். நர்சிங் கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்
- நர்சிங் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவி திடீரென காணாமல் போன சம்பவம் பெற்றோர் மற்றும் மாணவிகளிடையே பரபரப்பு
கன்னியாகுமரி :
பூதப்பாண்டி அருகே வடக்கு அரசன்குழியை சேர்ந்தவர் பெனட். இவரது மகள் பெர்ஷியாள் (வயது 18).
பெர்ஷியாள் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். நர்சிங் கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நர்சிங் கல்லூரிக்கு சென்ற மாணவியை திடீரென காணவில்லை.
பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாணவியின் தாயார் ஜாக்குலின்ஷீபா விடுதிக்கு சென்று பார்த்தார். அங்கு மாணவியை காணவில்லை.
இது குறித்து ஜாக்கு லின்ஷீபா இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
நர்சிங் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவி திடீரென காணாமல் போன சம்பவம் பெற்றோர் மற்றும் மாணவிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
- ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பொருத்த ரூ.10.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- கல்லூரிகள் கட்டுவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
சென்னை:
தமிழகத்தில் புதிதாக 11 நர்சிங் கல்லூரி தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்கள், நர்சிங் பயிற்சி பள்ளி முதல்வர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், மாநகராட்சி நல அலுவலர்களுடன் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்ட முடிவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நமக்கு நாமே திட்டத்தின் மூலம் துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான கூடுதல் கட்டிடங்கள் கட்டவும், தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பொருத்த ரூ.10.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் கட்டும் பணிகளில் 500-க்கும் மேற்பட்ட கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதில், 500 ஆஸ்பத்திரிகள் முதலமைச்சரால் விரைவில் திறந்து வைக்கப்பட இருக்கிறது.
இந்த ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான டாக்டர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களை மாவட்ட சுகாதார அமைப்பு என்கின்ற அமைப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.
ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் 8 கிலோ மீட்டர் நீளத்திற்கான சாலைகளை தேர்ந்தெடுத்து இருபுறமும் மரங்களை நட்டு மக்கள் தினந்தோறும் நடை பயிற்சியினை மேற்கொள்வதற்கு ஏதுவாக தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு சார்பில் 6 நர்சிங் பயிற்சி கல்லூரியும், 25 நர்சிங் பயிற்சி பள்ளியும் உள்ளது. மேலும் தமிழ்நாட்டிற்கு தலா 100 இடங்களுடன் 11 புதிய நர்சிங் பயிற்சி கல்லூரி தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இந்த கல்லூரிகள் கட்டுவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
- பட்டமளிப்பு விழா, நர்சிங் பள்ளி சில்வர் ஜூப்லி விழா, கல்லூரி ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா
கன்னியாகுமரி :
தலக்குளம் பி.எஸ்.நர்சிங் கல்லூரி 6-வது பட்டமளிப்பு விழா, நர்சிங் பள்ளி சில்வர் ஜூப்லி விழா, கல்லூரி ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா கல்லூரி கலை அரங்கில் நடந்தது. விழாவுக்கு கல்லூரி சேர்மன் மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அமுது முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஜோஸ் பின் சுதா வரவேற்று பேசினார். தலக்குளம் பஞ்சாயத்து தலைவர் லெஷ்மி குமார் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் மூளை நரம்பியல் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பழனியாண்டி, மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் சரோஜினி, குழந்தைகள் நல நிபுணர் மருத்துவர் சுனிதா, மருத்துவர் ஜீலியா, பி.எஸ்.ஆஸ்பத்திரி நிர்வாக அதிகாரி குற்றாலம்பிள்ளை, மக்கள் தொடர்பு அதிகாரி நாராயண பிள்ளை, எஸ்.பி.யின் தாயார், நர்சிங் கண்காணிப் பாளர், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி ஊழி யர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் பழனியாண்டி நன்றி கூறினார்.
- விழாவில் தலைமை விருந்தினராக ஞானதிரவியம் எம்.பி. கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
- விழாவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நாகர்கோவில் :
நெல்லை மாவட்டம் காவல்கிணறு சந்திப்பில் அமைந்துள்ள சர்தார் ராஜாஸ் நர்சிங் கல்லூரியின் ஆண்டு விழா (Waves 2023) கல்லூரி வெள்ளி விழா கலையரங்கத்தில் வைத்து நடைபெற்றது.
விழாவில் தலைமை விருந்தினராக ஞானதிரவியம் எம்.பி. கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரி தலைவர் டாக்டர் ஜேக்கப் ராஜா தலைமை உரையாற்றினார். கல்லூரி நிர்வாக இயக்குநர் சபீனா ஜேக்கப் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
நாகர்கோவில் பல்கலைக் க ழக பொறியியல் கல்லூரி டீன் டாக்டர் நாகராஜன் கவுரவ விருந்தி னராக கலந்துகொண்டார். கல்லூரி முதல்வர் டாக்டர் விசி மெர்லின் லிஷா கல்லூரி யின் ஆண்டு அறிக்கையை படித்தார். உதவி முதல்வர் பேராசிரியர் தேவ ஜான்சி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவி கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழாவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.
- மாணவர்களின் அந்தரங்க உறுப்பில் எடைதூக்கும் கருவியை தொங்கவிட்டு சித்ரவதை.
- 5 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயம் காந்திநகர் பகுதியில் அரசு நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் அந்த கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த மாணவர்களை, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் கொடூரமான முறையில் சித்ரவதை செய்து ராக்கிங்கில் ஈடுபட்டிருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.
முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் சிலரை, அவர்கள் கல்லுரியில் சேர்ந்ததில் இருந்தே மூன்றாம் ஆண்டு படிக்கும் 5 மாணவர்கள் ராக்கிங் செய்திருக்கின்றனர்.
அவர்கள் முதலாமாண்டு மாணவர்களின் அந்தரங்க உறுப்பில் எடைதூக்கும் கருவியை (டம்பில்ஸ்) தொங்கவிடுதல், விரல் நகங்களுக்கு இடையே ஊசியால் குத்துதல் என பல்வேறு சித்ரவதைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.
சித்ரவதை காரணமாக ஏற்பட்ட காயங்களில் முகப்பொலிவு மற்றும் தோல் சுருக்கங்களுக்கு பயன்படுத்தம் லோசன்களை அதிகளவில் தடவி விட்டிருக்கின்றனர். அந்த லோசனை முகம், தலை மற்றும் வாய் உள்ளிட்ட இடங்களிலும் தேய்த்துவிட்டு ராக்கிங் செய்திருக்கின்றனர்.
மேலும் சில மாணவர்களுக்கு வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்திருக்கின்றனர். மாணவர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட அனைத்தையும் வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியிருக்கின்றனர்.
சீனியர் மாணவர்கள் ராக்கிங் என்ற பெயரில் தொடர்ந்து கொடூரமாக சித்ரவதை செய்தபடி இருந்தால், அதுபற்றி முதலாமாண்டு மாணவர்கள் சிலர், தங்களின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், முதலாமாண்டு மாணவர்கள் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியபிறகே, முதலாமாண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் மிகவும் கொடூரமாக சித்ரவதை செய்து ராக்கிங்கில் ஈடுபட்ட தகவல் வெளியானது.
விசாரணையில் முதலாமாண்டு மாணவர்கள் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டது உறுதியானதால் அது தொடர்பாக வழக்கு பதிந்தனர்.
ராக்கிங்கில் ஈடுபட்ட மூன்றாம் ஆண்டு மாணவர்களான கோட்டயத்தை சேர்ந்த சாமுவேல், விவேக், வயநாட்டை சேர்ந்த ஜீவா, மலப்புரத்தை சேர்ந்த ரிஜில்ஜித், ராகுல்ராஜ் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 5 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது. அரசு நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் கொடூரமாக சித்ரவதை செய்து ராக்கிங்கில் ஈடுபட்ட சம்பவம் கோட்டயத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






