search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "College of Nursing"

    • புதுச்சேரி மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • பேராசிரியர்கள் பிரியதர்ஷினி, ஸ்ரீதேவி அறிமுக உரையாற்றினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.

    விழாவில், முதுகலை பட்டதாரி மற்றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் புல முதல்வர் ரவிச்சந்திரன், அன்னை சம்பூரணி அம்மாள் செவிலியர் கல்லுாரியின் புல முதல்வர் ஜெயசீலன் தேவதாசன் தலைமை தாங்கினர்.

    மணக்குள விநாயகர் கல்வி நிறுவனத் தலைவர் தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர். செவிலியர் கல்லுாரி முதல்வர் முத்த மிழ்செல்வி வரவேற்றார். பேராசிரியர்கள் பிரியதர்ஷினி, ஸ்ரீதேவி அறிமுக உரையாற்றினர்.

    விழாவில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. விழாவில், பொருளாளர் ராஜ ராஜன், இயக்குனர் ராஜ கோவிந்தன், துணை இயக்குனர் காக்னே, மருத் துவ கல்லுாரி டீன் கார்த் திகேயன், மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ், ஆராய்ச்சி டீன் கலைச்செல்வன், கல்லூரி முதல்வர் முத்தமிழ்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இளங்கலை பட்டப்பி ரிவில் புதுச்சேரி பல்கலை அளவில் (2016-2020)ம் ஆண்டு பயின்று முதல் மதிப்பெண் பெற்ற அபிநயாவிற்கும், முதுகலை பட்டப்பிரிவில் (2018 -2020)ம் ஆண்டு பயின்று முதல் மதிப்பெண் பெற்ற கிரிஸ்டி ரெபேகாவிற்கும் சிறப்பு சான்றிதழ் வழங் கப்பட்டது.

    இணை பேராசிரியர் மணிமேகலை நன்றி கூறினார்.

    • மயிலம் நர்சிங் கல்லூரியில் மாணவர் செவிலியர் சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் தமிழ்செல்வி வரவேற்றார்.

    புதுச்சேரி:

    மயிலம் நர்சிங் கல்லூரி யில் மாணவர் செவிலியர் சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

    மயிலம் சுப்பிரமணிய சுவாமி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோரின் வழிகாட்டு தலின் படி ரத்ததான முகாம் நடந்தது.

    நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் தமிழ்செல்வி வரவேற்றார். இயக்குநர் செந்தில் வாழ்த்துரை வழங்கினார். இதில் மயிலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் கிரிஜா மற்றும் நகர்ப்புற அரசு சுகாதார நிலையத்தின் ரத்த வங்கி மருத்துவ அலுவலர் பாரதி ஆகியோர் பங்கேற்று பேசினர்.

    நிகழ்ச்சியில் மயிலம் கல்வி குழும மாணவர்கள், பேராசிரியர்கள் ஆசிரி யர்கள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர். முகாமில் கலந்து கொண்ட வர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில் மாணவர் செவிலியர் சங்கத்தின் பேராசிரியர் வைஷ்ணவி நன்றி கூறினார்.

    • ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பொருத்த ரூ.10.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • கல்லூரிகள் கட்டுவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் புதிதாக 11 நர்சிங் கல்லூரி தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்கள், நர்சிங் பயிற்சி பள்ளி முதல்வர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், மாநகராட்சி நல அலுவலர்களுடன் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வு கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்ட முடிவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நமக்கு நாமே திட்டத்தின் மூலம் துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான கூடுதல் கட்டிடங்கள் கட்டவும், தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பொருத்த ரூ.10.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் கட்டும் பணிகளில் 500-க்கும் மேற்பட்ட கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதில், 500 ஆஸ்பத்திரிகள் முதலமைச்சரால் விரைவில் திறந்து வைக்கப்பட இருக்கிறது.

    இந்த ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான டாக்டர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களை மாவட்ட சுகாதார அமைப்பு என்கின்ற அமைப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.

    ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் 8 கிலோ மீட்டர் நீளத்திற்கான சாலைகளை தேர்ந்தெடுத்து இருபுறமும் மரங்களை நட்டு மக்கள் தினந்தோறும் நடை பயிற்சியினை மேற்கொள்வதற்கு ஏதுவாக தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் அரசு சார்பில் 6 நர்சிங் பயிற்சி கல்லூரியும், 25 நர்சிங் பயிற்சி பள்ளியும் உள்ளது. மேலும் தமிழ்நாட்டிற்கு தலா 100 இடங்களுடன் 11 புதிய நர்சிங் பயிற்சி கல்லூரி தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    இந்த கல்லூரிகள் கட்டுவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிருமாம்பாக்கம் விநாயகா மிஷன் செவிலியர் கல்லூரியில் 13-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
    • கல்லூரி முதல்வர் சாரதா ரமேஷ் உறுதிமொழி வாசித்தார். மாணவர்கள் கையில் விளக்கேற்றி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் விநாயகா மிஷன் செவிலியர் கல்லூரியில் 13-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேசன் வேந்தர் டாக்டர் கணேசன் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த விழாவிற்கு கல்லூரி இயக்குனர் டாக்டர் அனுராதா கணேசன் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு செவிலியர்கள் சங்க பதிவாளர் அனிகிரேஸ் கலைமதி கலந்து ெகாண்டு, பி.எஸ்சி., நர்சிங் மாணவர்கள் 63 பேருக்கும், முதுநிலை மாணவர்கள் 10 பேருக்கும் பட்டங்களை வழங்கி பேசினார்.

    விழாவில் அறுபடை வீடு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவ மனை டீன் டாக்டர் கொட்டூர் கலந்து கொண்டு மருத்துவ துறையில் செவிலியர்கள் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் சாரதா ரமே ஷ் உறுதிமொழி வாசித்தார். மாணவர்கள் கையில் விளக்கேற்றி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ெதாடர்ந்து பாடவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

    விழாவில் விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேசன் நிர்வாக குழு உறுப்பினர் சுரேஷ் சாமுவே ல், மருத்துவ கல்வி பிரிவு டீன் டாக்டர் மகாலட்சுமி, இயக்குனர் டாக்டர் விஷ்ணுபட், கண்காணிப்பாளர் டாக்டர் ஜெய்சிங் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×