என் மலர்
புதுச்சேரி

விநாயகா மிஷன் செவிலியர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்த காட்சி.
செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா
- கிருமாம்பாக்கம் விநாயகா மிஷன் செவிலியர் கல்லூரியில் 13-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
- கல்லூரி முதல்வர் சாரதா ரமேஷ் உறுதிமொழி வாசித்தார். மாணவர்கள் கையில் விளக்கேற்றி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் விநாயகா மிஷன் செவிலியர் கல்லூரியில் 13-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேசன் வேந்தர் டாக்டர் கணேசன் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த விழாவிற்கு கல்லூரி இயக்குனர் டாக்டர் அனுராதா கணேசன் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு செவிலியர்கள் சங்க பதிவாளர் அனிகிரேஸ் கலைமதி கலந்து ெகாண்டு, பி.எஸ்சி., நர்சிங் மாணவர்கள் 63 பேருக்கும், முதுநிலை மாணவர்கள் 10 பேருக்கும் பட்டங்களை வழங்கி பேசினார்.
விழாவில் அறுபடை வீடு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவ மனை டீன் டாக்டர் கொட்டூர் கலந்து கொண்டு மருத்துவ துறையில் செவிலியர்கள் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் சாரதா ரமே ஷ் உறுதிமொழி வாசித்தார். மாணவர்கள் கையில் விளக்கேற்றி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ெதாடர்ந்து பாடவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேசன் நிர்வாக குழு உறுப்பினர் சுரேஷ் சாமுவே ல், மருத்துவ கல்வி பிரிவு டீன் டாக்டர் மகாலட்சுமி, இயக்குனர் டாக்டர் விஷ்ணுபட், கண்காணிப்பாளர் டாக்டர் ஜெய்சிங் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.






