search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்ட-கரைப்பதற்கு கட்டுப்பாடுகள்
    X

    குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்ட-கரைப்பதற்கு கட்டுப்பாடுகள்

    • போலீசார்-தீயணைப்பு துறையிடம் சான்றுகள் பெறுவது கட்டாயம்
    • சிலையின் உயரம் அதன் பீடம் மற்றும் அடித்தளத்துடன் சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்

    நாகர்கோவில் :

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் கரைப்பதற்கு குமரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    சிலை வைக்க உத்தேசி க்கப்பட்டுள்ள இடம் பொது நிலமாக இருந்தால் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, நெடுஞ்சாலைத் துறையிடமும், தனியார் இடமாக இருந்தால் நில உரிமையாளரிடம் தடை யில்லா சான்று பெறப்பட வேண்டும்.

    விநாயகர் சிலை அமைக்க உத்தேசித்துள்ள அமைப்பாளர், சிலை வைக்கப்படும் இடத்திற்கு தடையில்லா சான்று பெற்று போலீசாரின் உரிய அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும். ஒலிப்பெருக்கி மற்றும் அனுமதிக்காக தடையில்லா சான்று தொடர்புடைய போலீஸ் இன்ஸ்பெக்டரிடமிருந்து பெற வேண்டும். காவல் துறையால் தெரிவிக்கப்படும் விதிமுறைகளுக்குட்பட்டு ஒலி பெருக்கிகள் பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் தடை செய்யப்பட்டுள்ளது.

    தற்காலிகக் கூடாரம் தீ பாதுகாப்பு தர நிலையை கடைபிடிப்பதாக உள்ளன என்பதற்கு தடையில்லா சான்று தீயணைப்பு துறை யிடம் பெற வேண்டும். மின் இணைப்பு வழங்கப்படு வதை குறிக்கும் கடிதம் மின்சார துறையிடமிருந்து பெற வேண்டும்.

    விநாயகர் சிலைகள் ஏற்கனவே வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுவ வேண்டும். அனுமதிக்க ப்பட்ட இடங்களில் மட்டுமே பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

    எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் கூடாரத்திலோ சிலை அமைக்கும் இடத்தி லோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பந்தலு க்குள் எளிதாக செல்லும் வகையில் உள்ளே செல்ல மற்றும் வெளியே வர விசாலமான பாதைகள் அமைக்கப்பட வேண்டும். ஓலைப் பந்தல் அமைப்ப தைத் தவிர்க்க வேண்டும்.

    சிலையின் உயரம் அதன் பீடம் மற்றும் அடித்தளத்துடன் சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். மருத்துவமனை கள் கல்வி நிறுவனங்கள், பிற வழிபாட்டு தலங்கள் அருகில் சிலை வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    சிலை நிறுவப்பட்ட இடத்தில் அரசியல் கட்சி அல்லது ஜாதி தலை வர்களின் தட்டிகள் கண்டிப்பாக வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

    சிலை நிறுவப்பட்ட இடத்தில் 24 மணி நேரமும் யாராவது 2 தன்னார்வலர்கள் பாது காப்புக்காக இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும். 4 சக்கர வாகனங்களான மினிலாரி போன்ற வாகனங்களில் மட்டுமே சிலைகளை கரைப்பதற்கு கொண்டு செல்ல பயன்படுத்த வேண்டும்.

    விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடத்திலோ, கரைப்பதற்கு கொண்டு செல்லும் ஊர்வலத்திலோ, சிலையை கரைக்கும் இடத்திலோ கண்டிப்பாக பட்டாசுகள் வெடிப்பது தடை செய்யப்படுகின்றது.

    விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட பூ மற்றும் மாலைகள், துணிகள் அழகு சாதன பொருட்கள் கரைக்கப்படுவதற்கு முன்பு பிரிக்கப்பட வேண்டும்.

    விநாயகர் சிலை கரைப்பதற்கான ஊர்வலம் குறிப்பிட்ட நேரத்திற்குள் சிலைகள் கரைப்பதற்கு அறிவிக்கப்பட்ட இடத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். சிலை கரைப்புக்கான ஊர்வலம் போலீசார் வரையறுத்துக் கொடுத்த பாதை வழியாக மட்டுமே கொண்டு செல்லப்பட வேண்டும். சூரியன் மறைவதற்குள் அனைத்து சிலைகளும் கரைக்க வேண்டும்.

    பொது அமைதி, பொது மக்கள் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை ஆகியவற்றினை பாதுகாக்கும் நோக்கோடு வருவாய்த் துறை காவல் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரி களால் பிறப்பிக்கப்படும் இதர நிபந்தனை மற்றும் கட்டுப்பாடு விதிகளை ஏற்பாட்டாளர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

    மோட்டார் வாகன சட்டம் 1988-ல் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் நபர்கள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும்.

    கடந்த 2018-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசா ணையின் அடிப்படை யில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கென அரசின் புதிய நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள் வரும் பொழுது மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்படும் அனைத்தையும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

    சிலை கரைப்பு நடைபெற்ற பகுதிகளில் கழிவுகள், குப்பைகள் அனைத்தும் உள்ளாட்சி, பேரூராட்சி அமைப்பால் சுத்தம் செய்யப்பட வேண்டும். சிலை அமைப்பாளர்களால் உரிய இடத்தில் சிலை அமைக்க ப்பட்டுள்ளதையும், விதி மீறல்கள் உள்ளதா? என்பதை உறுதி செய்யவும், ஊர்வலம் புறப்படும் இடத்திலிருந்து விஜர்சனம் செய்யும் இடங்களுக்கான வழித்தடங்களையும் முன்கூட்டியே காவல் துறையினர் தெரிவிக்கவும் வேண்டும்.

    Next Story
    ×