என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறக்கையில் மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; வாலிபர் சாவு
    X

    பறக்கையில் மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; வாலிபர் சாவு

    • 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • காரை ஓட்டி வந்த அகிலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    என்.ஜி.ஓ.காலனி :

    இரணியல்அருகே தலகுளம் பட்டாரிவிளை பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் ஜெரின் (வயது 22). திருநைனார்குறிச்சியை சேர்ந்தவர் வினித் (22). இவர்கள் இருவரும் நண்பர்கள். நேற்று இரவு இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை ஜெரின் ஓட்டினார். வினித் பின்னால் அமர்ந்திருந்தார்.

    நாகர்கோவில் அருகே பறக்கை செட்டி தெரு பகுதியில் இன்று அதிகாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது. இதில் ஜெரின், வினித் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். தலை மற்றும் உடல் பகுதியில் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி வினித் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஜெரினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து பற்றி தகவல் அறிந்ததும் சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    இதுதொடர்பாக காரை ஓட்டி வந்த அகிலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×