search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் காங்கிரீட்தளம்
    X

    நாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் காங்கிரீட்தளம்

    • இரவு பகலாக பணிகள் தீவிரம்
    • இரட்டை ரெயில் பாதையில் விரைவில் ரெயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில் ரெயில்வே கேட் உள்ளது. நாகர் நகரில் இருந்து இந்த கேட் வழியாக ஊட்டு வாழ்மடம், கருப்புக் கோட்டை, இலுப்பையடி போன்ற கிராமங்களுக்கு மக்கள் சென்று வருகின்ற னர்.

    இந்த கிராமங்களில் வசிக்கும் சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது பல தேவைகளுக்காக ரெயில்வே கேட்டை கடந்து தான் நாகர்கோவில் செல்ல வேண்டும். ஆனால் ரெயில் நிலையத்தின் அருகே கேட் இருப்பதால், ரெயில்கள் வருகை, என்ஜின் சோதனை ஓட்டம் போன்றவற்றுக்காக தினமும் 40 முறைக்கும் மேல் கேட் அடைத்து திறக்கப்படுகிறது. இதனால் 13 மணி நேரம் வரை கேட் மூடப்பட்டே இருக்கும்.

    எனவே இந்த வழியாக செல்லும் வாகனங்கள், கேட் முன்பு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் பள்ளி- கல்லூ ரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்வோர் அவதிக் குள்ளாகி வருகின்ற னர். இதனை கருத்தில் கொண்டு ரெயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. 8 மீட்டர் அகலத்திலும், 80 மீட்டர் நீளத்திலும், 4½ மீட்டர் உயரத்திலும் சுரங் கப்பாதை அமைக்க திட்ட மிடப்பட்டு பணிகள் கடந்த மே மாதம் தொடங்கியது.

    இதற்காக ரெயில்வே கேட் மூடப்பட்டது.4 மா தங்கள் வரை கேட் மூடப்ப டும் என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஊட்டுவாழ்மடம் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனை தொ டர்ந்து தற்காலிக ரெயில்வே கேட் அமைக்கப்பட்டது. தொடர்ந்து சுரங்கப்பாதை பணிகள் தொடங்கின. ரூ.4½ கோடி மதிப்பிலான இந்த பணிகள் இரவு-பகலாக முழு வேகத்தில் நடந்து வருகிறது. முதலில் சுரங்கப்பாதை அமைய உள்ள பகுதியில் ரெயில்வே தண்டவாளங்களின் கீழ் கர்டர் பாலம் அமைக்க ப்பட்டது. தொடர்ந்து தண்டவா ளத்தின் கீழ் பகுதியில் சுரங்கம் அமைப்ப தற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. ராட்சத எந்திரங்கள் கடந்த சில நாட்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மழையின் காரணமாக சில நாட்கள் பணிகள் பாதிக்கப்பட்டன.

    தோண்டப்பட்ட பள்ளத் தில் மழை நீர் தேங்கியது. அதனை ஊழியர்கள் மோட்டார் மூலம் வெளி யேற்றினர். அதன்பிறகு பணிகள் தொடர்ந்து நடை பெற்றன. இதன் காரணமாக சுரங்கத்தின் ஒரு பகுதியில் பணி முடிவு பெற்று சிமெண்ட் காங்கிரீட் பூச்சு பணி தொடங்கப்பட் டுள்ளது. அடுத்த கட்டமாக மற்றொரு பகுதியிலும் முழுமையாக பள்ளம் தோண்டப்பட்டு சிமெண்ட் காங்கிரீட் அமைக்கப்படும். அதன்பிறகு சுரங்கப்பாதை யின் இருபுறமும் சுவர் அமைக்கப்பட்டு, மேல் தளமும் பூசப்படும்.

    இந்தப் பணிகளை விரைந்து முடிக்க தீவிரமாக பணிகள் நடந்து வருவதால் விரைவில் சுரங்கப்பாதை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இரட்டை ரெயில் பாதை பணிகள் நாகர்கோ வில்-ஆரல்வாய்மொழி இடையே முடியும் தருவா யில் உள்ளது. தண்டவாள பணிகள் பெரும்பகுதி முடிவடைந்து விட்ட நிலையில், சிக்னல் கம்பங்கள் உள்ளிட்ட சில பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே இரட்டை ரெயில் பாதையில் விரைவில் ரெயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு இயக்கப்பட்டால் பயண நேரம் வெகுவாக குறையும்.

    Next Story
    ×