கன்னியாகுமரியில் 172 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் வழங்கினார் 61 மாணவர்களுக்கும் 111 மாணவிகளுக்கும் விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கினார்
கன்னியாகுமரியில் 172 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
Published on

கன்னியாகுமரி,செப்.8-

கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் 12-ம்வகுப்பில்பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியை பிரசன்னா தலைமை தாங்கினார்.உதவி தலைமை ஆசிரியர் ஜான் சுகிலன் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 61 மாணவர்களுக்கும் 111 மாணவிகளுக்கும் விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் லிங்கேஸ்வரி மணிராஜா, சகாய சர்ஜினாள் பிரைட்டன், இந்திரா, ஆட்லின் சேகர், பூலோக ராஜா, முன்னாள் கவுன்சிலர் தாமஸ், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஆனந்த், புனிதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com