என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்பளம்"

    • குடிநீர் பைப் லைன் அமைக்கப்பட்ட பிறகும் சீரமைக்கப்படாத அவலம்
    • தினமும் வாகன ஓட்டிகள் அவதி

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நகரின் பிரதான சாலைகளில் ஒன்றாக மீனாட்சி புரம் சாலை விளங்கி வருகிறது. இந்த பகுதியில் தான் வணிக நிறுவனங்கள், வர்த்தக நிறு வனங்கள், துணிக்கடைகள் ஏரா ளமாக உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து செல்கிறார்கள். எப்போதும் இந்த சாலை போக்குவரத்து நெருக்கடி மிகுந்ததாக காணப்படும்.

    எனவே கோட்டார் போலீஸ் நிலையம் முதல் கட்டபொம்மன் சந்திப்பு வரை உள்ள சாலையை ஒருவழி பாதையாக போலீசார் செயல்படுத்தி வருகிறார்கள். கட்டபொம்மன் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டு அங்கிருந்து வரும் வாகனங்களை திருப்பி விட்டு வருகிறார்கள். இருப்பினும் கட்டபொம்மன் சந்திப்பிலிருந்து இருசக்கர வாகன ஓட்டிகள் அவ்வப்போது இந்த சாலை வழியாக வருவதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க மீனாட்சிபுரம் சாலையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் பைப் லைனுக்காக தோண்டப்பட்டது.

    சாலையில் போடப்பட்டிருந்த அலங்கார தரை கற்கள் அகற்றப்பட்டு பள்ளங்கள் தோண்டி பைப் லைன்கள் அமைக்கப்பட்டது. பைப் லைன் அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் அந்த பள்ளம் சரி செய்யப்படவில்லை. அலங்கார கற்கள் சாலையில் அங்கும் இங்குமாக சிதறி கிடக்கிறது. சாலையில் சிதறி கிடக்கும் கற்களினால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். குடும்பத்தோடு செல்லும் வாகன ஓட்டிகள் சிலர் கீழே தவறி விழும் சம்பவம் அரங்கேறி வருகிறது.

    எனவே மாநகராட்சி அதிகாரி கள் உடனடியாக போர்க்கால நடவடிக்கையாக அந்த சாலையில் உள்ள அலங்கார தரை கற்களை மீண்டும் அமைத்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    மேலும் வடிவீஸ்வரத்தில் இருந்து கம்பளம் வழியாக நாகர்கோவில் ரெயில்வே ரோட்டிற்கு செல்லும் சாலையி லும் பைப் லைன் அமைப்பதற்காக அலங்கார கற்கள் அகற்றப்பட்டு பைப் லைன்கள் அமைக்கப்பட்டது. பைப் லைன்கள் அமைக்கப்பட்ட பிறகு அந்த இடங்களில் அலங்கார கற்கள் அமைக்கப்படவில்லை. இதனால் சாலை நடுவே ஓடைபோல் காட்சியளிக்கிறது. தற்பொழுது மழை பெய்து வரும் நிலையில் அந்த பள்ளங்களில் மழை நீரும் தேங்கியுள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த சாலையில் கிடக்கும் பள்ளங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி கீழே விழும் நிலைக்கும் தள்ளப் பட்டுள்ளனர்.

    இதேபோல் நாகர்கோவில் மாநகர பகுதியில் ஒரு சில இடங்களில் குடிநீர் பைப் லைனுக்காக தோண்டப்பட்ட சாலைகள் சரிவர சீரமைக்கப் படாமல் மோசமான நிலையில் காணப்படுகிறது. உடனடி நடவடிக்கையாக இந்த சாலை களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    ×