search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரவிபுத்தன்துறையில் ஏ.வி.எம். கால்வாயின் குறுக்கே ரூ.48½ லட்சத்தில் புதிய பாலம்
    X

    இரவிபுத்தன்துறையில் ஏ.வி.எம். கால்வாயின் குறுக்கே ரூ.48½ லட்சத்தில் புதிய பாலம்

    • விஜய்வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தனர்
    • காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    மார்த்தாண்டம் :

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்தூர் ஊராட்சியில் உள்ள இரவிபுத்தன்துறை கிராம மக்கள் தங்களது பகுதியிலிருந்து பல்வேறு இடங்களுக்கு செல்ல பாலம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    இதனால் இந்த கிராம மக்கள் விஜய் வசந்த் எம்.பி. மற்றும் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஆகியோரிடம் இந்த பகுதியில் ஏ.வி.எம். சானலின் குறுக்கே புதிய பாலம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று ஏ.வி.எம். கால்வாயின் குறுக்கே பாலம் கட்ட விஜய்வசந்த் எம்.பி. தனது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சமும், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.7.50 லட்சமும் ஒதுக்கீடு செய்தனர்.

    மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டங்களின் கீழ் ரூ.31 லட்சத்து 9 ஆயிரத்து 500 என மொத்தம் ரூ.48½ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து புதிய பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்ததையடுத்து விஜய்வசந்த் எம்.பி., ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் இணைந்து புதிய பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார், இரவிபுத்தன்துறை பங்கு தந்தை ரதீஷ், மாவட்ட நிர்வாகிகள் அந்தோணிபிச்சை, ராஜூ மற்றும் மகேஷ், காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×