என் மலர்
கள்ளக்குறிச்சி
- சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவரிடம் இருந்து 30 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
சங்கராபுரம் அருகே போலீஸ் சப்-இ ன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலா ன போலீசார் மேலப்பட்டு, அரசம்பட்டு ஆகிய பகுதிகளில் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியின் ஒரு வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த மேலப்பட்டு கிராமத்தை சேர்ந்த கோபால்(47) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அரசம்பட்டு கிராமத்தை அஞ்சலை(58) என்பவர் சாராயம் விற்பனை செய்தார். அவரை கைது செய்து அவரிடம் இருந்து 30 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
- வாத்துக்களுக்கு தீவனத்திற்கு ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது.
- உணவு பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே கண்டாச்சிமங்கலம் பஸ் நிறுத்தம் பகுதியில் வரஞ்சரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேகர் மற்றும் போலீஸ் ஏட்டு சிவமுருகன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கூத்தக்குடியி ல் இருந்து அந்த வழியாக வந்த மினி டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது.
விசாரணையில் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (வயது 50), வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சஞ்சீவி ராயர்புரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 60) ஆகியோர் கோழி மற்றும் வாத்துக்களுக்கு தீவனத்திற்கு ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. அதன்படி ஆனந்தன் மற்றும் நாகராஜ் ஆகியோரை உணவு பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
- அந்த இடத்தை சுற்றியிருந்த 11 குடும்பத்தினர், எங்கள் இடத்தை ஏன் அளக்கிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- மேலும், இவ்விடத்தை விட்டால் எங்களிடம் வேறு இடம் இல்லை.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டை அருகே உள்ள புகைப்பட்டி கிராமத்தில் பழம்பெருமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு சொந்தமாக சர்வே எண்.351-ல் 10.5 சென்ட் இடம் உள்ளது. அந்த இடத்தை அளப்பதற்காக இந்து அறநிலைத்துறையிலிருந்து வருவாய் துறை அதிகாரிகள் வந்தனர். அந்த இடத்தை சுற்றியிருந்த 11 குடும்பத்தினர், எங்கள் இடத்தை ஏன் அளக்கிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோவிலுக்கு சொந்தமான இடத்தை அளக்கிறோம். இது தொடர்பாக உங்களிடம் ஏதாவது ஆவணம் இருக்கிறதா என்று வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கிருந்த மக்களிடம் கேட்டனர். அதற்கு அங்குள்ள 11 குடும்பத்தினர் எங்களிடம் வருவாய் துறை மூலம் வழங்கப்பட்ட பட்டா இருக்கிறது என்று கூறினர். அதைப் பொருட்படுத்தாத இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் போலீசாரின் உதவியுடன் அளந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், மேலும், இவ்விடத்தை விட்டால் எங்களிடம் வேறு இடம் இல்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு எங்களுக்கு இவ்விடத்தை வழங்க ஆவண செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை தாலுகாகுணமங்கலம் கிராமத்தில் ஆதம்மாளிக். இவரது வீட்டில் இரவு வீட்டின் கதவு பூட்டாமல் திறந்துவைத்துவிட்டு தூங்கும்போது 1.30 மணிக்கு மேல் பீரோவில் இருந்த நகை பணம் திருடு போனது. இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார் .
- 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை நேரடி வகுப்புகள் நடத்தலாம் என அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
- வேறு பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு பிளஸ்-2 படித்துவந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதற்கு நீதிகேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. பள்ளியில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. அதோடு போலீஸ் ஜீப்களுக்கும், பள்ளி வகுப்பறைகளுக்கும் தீ வைக்கப்பட்டது. இதனால் பள்ளியில் பலகோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கனியாமூர் சக்திமேல்நிலை பள்ளியில் வகுப்புகள் எதுவும் நடத்தப்படவில்லை. வேறு பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கனியாமூர் சக்திமெட்ரிக் மேல்நிலை பள்ளி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதிக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கனியாமூர் பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை நேரடி வகுப்புகள் நடத்தலாம் என அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் வட்டம் மரவனத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் (வயது 57) இவர் கடந்த 26 ஆம் தேதி அன்று தனது வீட்டின் படியில் ஏறும் போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டது பின்னர் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தயாளனுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.
அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.உடனே அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். சின்ன சேலம் போலீசார் வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
- கள்ளக்குறிச்சியில் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- குறைந்தபட்சம் 8 பட்டதாரி ஆசிரியர் பணியி டங்களை உடனடியாக வழங்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி, பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிட கோரி தமிழக அரசை வற்புறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சர்ச்சில் காரல் மார்க்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட சட்ட செயலாளர் முனியன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வில்வபதி வரவேற்றார்.
ஆர்ப்பா ட்டத்தில் ஆசிரியர்க ளுக்கு கற்பித்தல் பணியை தவிர வேறு எந்த பணியும் வழங்காதே. ஜூலை 1-ல் இருந்து முடக்கி வைக்கப்பட்ட அகவி லைப்படி உயர்வை உடனடியாக நிலுவைத் தொகையுடன் வழங்கிடு. ஒவ்வொரு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக்கும் குறைந்தபட்சம் 8 பட்டதாரி ஆசிரியர் பணியி டங்களை உடனடியாக வழங்க வேண்டும். மருத்துவ விடுப்பு சான்றிதழ் பெறுவதற்கு தேவையற்ற புதிய, புதிய சிக்கல்களை சேர்த்து ஆசிரியர்கள், அரசு ஊழியர் உள்ளங்களை புண்ப டுத்துவதை உடனடியா க கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 11 கோரி க்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர் . தொடர்ந்து கோரி க்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
- உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- 56 ஊழி யர்களை பணி நீக்கம் செய்து சுங்கச்சாவடி நிர்வாகம் திடீரென அறிவித்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்குறிச்சி மற்றும் திருமந்துறை பகுதியில் உள்ள சுங்கச்சாவடி கடந்த 2009-ம் ஆண்டு முதல் இயங்கிவருகிறது. இந்த சுங்கச்சா வடியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு நிலைகளில் பணி ரிந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பாஸ்ட் ட்ரேக் என்னும் நவீன முறை அறிமுகப்ப டுத்தப்பட்டு, சுங்க கட்டணம் வசூல் செய்துவருகின்றனர். இதனால் ஆட்களை குறைப்ப தற்காக நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால், 10 ஆண்டு களுக்கு மேலாக பணிபுரிந்து வந்த 56 ஊழி யர்களை பணி நீக்கம் செய்து சுங்கச்சாவடி நிர்வாகம் திடீரென அறிவித்தது. இதை கண்டித்து கடந்த அக்டோபர் மாதம் 01-ந் தேதி முதல் தொடர்ந்து இன்று 60-வது நாளாக பல்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும் வகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் சுங்கச்சாவடி நிர்வாகம் மற்றும் மாநில, மத்திய அரசுகள் இது வரை இவர்களின் போராட்ட த்தைப் பற்றி சிறிதும் கவலை ப்படாமல் செவி சாய்க்கா மல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட செய லாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான குமரகுரு தலைமையில், முன்னாள் அமைச்சர் மோகன், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், உளுந்தூ ர்பேட்டை வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு சுங்க ச்சாவடி ஊழியர்க ளுக்கு ஆதரவாகவும், மீண்டும் அவர்களை பணியில் அமர்த்த வேண்டியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- 6241 மெட்ரிக் டன், உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- சாம்பல், சத்துக்கள் கொண்ட காம்ப்ளக்ஸ் உரங்களையும் பயன்படுத்த அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நடப்பு பருவ சாகுபடிக்கு தேவையான யூரியா உரம் ெரயில் மூலம் சின்னசேலத்திற்கு வந்தடைந்தது. இது குறித்து வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர நிறுவன நிலையங்களில் யூரியா 2688 மெட்ரிக் டன், டிஏபி 1212 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1363 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 838 மெட்ரிக் டன், மற்றும் காம்ப்ளக்ஸ் 6241 மெட்ரிக் டன், உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நடப்பு பருவத்திற்கு தேவையான எம் எஃப் எல் யூரியா 876 மெட்ரிக் டன் யூரியா சென்னையில் இருந்து சின்னசேலம் ெரயில் நிலையத்திற்கு வந்தது. இதனை வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் (தரகட்டுப்பாடு) அன்பழகன் ஆய்வு செய்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரைப்படி பயிர்களுக்கு தேவையான உரங்களை வாங்கி ரசீது பெற்று பயனடையலாம். விவசாயிகள் பயிர்களுக்கு தழைச்சத்து கொண்ட யூரியாவை மட்டும் பயன்படுத்தாமல் தழை, மணி, சாம்பல், சத்துக்கள் கொண்ட காம்ப்ளக்ஸ் உரங்களையும் பயன்படுத்த அறிவுறுத்தினார். மேலும் தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் அரசு நிர்ணயித்த விலையில் மட்டும் விற்பனை முனைய கருவி மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- சின்னசேலம் அருகே வீட்ைட விட்டு சென்ற சிறுமி மாயமானார்.
- 5 .30 மணிக்கு எழுந்து அப்பா செல்லமுத்துவிடம் பாத்ரூம் சென்று விட்டு வருகிறேன் என்று கூறி சென்றார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் மேலூர் கிராமம் அருகே கீழ்பூண்டியை சேர்ந்தவர் செல்லமுத்து. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது இளைய மகள் வழக்கம் போல் இரவு வீட்டில் தூங்கினார். பின்னர் அதிகாலை 5 .30 மணிக்கு எழுந்து அப்பா செல்லமுத்துவிடம் பாத்ரூம் சென்று விட்டு வருகிறேன் என்று கூறி சென்றார்.
அதன் பின்னர் அந்த சிறுமி வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் செல்லமுத்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அருகில் உள்ள இடங்களிலும், உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தேடினார். எங்கு தேடியும் கிடைக்காததால் செல்லமுத்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து மாயமான சிறுமியை சின்னசேலம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த செந்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தார்.
- செந்தில் உடல் திடீரென பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார்.
கள்ளக்குறிச்சி:
பகண்டை கூட்டு ரோடு அருகேகாரனூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்(வயது35). இவரது மனைவி அருள்மணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். செந்தில் குடும்பத்தினருடன் பகண்டை கூட்டுரோடு அடுத்த அரியலூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த செந்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் அவரது உடல் திடீரென பாதிக்கப்பட்டது. இதற்காக தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் மீண்டும் வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதாக செந்தில் தனது மனைவி அருள்மணியிடம் தெரிவித்துள்ளார். இதற்கு அருள்மணி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த செந்தில் வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் பகண்டைகூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- கருப்பன் அதே ஊரில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
- கரும்பு லோடு ஏற்றி கொண்டு வேகமாக வந்த டிராக்டர் கருப்பன் மீது மோதியது.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே தேவபாண்டலத்தை சேர்ந்தவர் கருப்பன் (வயது 68) தொழிலாளி. இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கரும்பு லோடு ஏற்றி கொண்டு வேகமாக வந்த டிராக்டர் கருப்பன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கருப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கருப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் விபத்து தொடர்பாக டிராக்டர் டிரைவரான புதுப்பட்டையை சேர்ந்த வேலு என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






