என் மலர்
கள்ளக்குறிச்சி
- உளுந்தூர்பேட்டை அருகே டிராக்டர் மோதி சிறுவன் பலியானார்.
- பொதுமக்கள் எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர் கோட்டை அருகே உள்ள ஏப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் வசந்த் (வயது 4). இவர் வீட்டு ஓரத்தில் விளையாடிக் கொண்டி ருந்த போது அந்த வழியாக வந்த பதிவு எண் இல்லாத டிராக்டர் குழந்தை மீது மோதி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். சம்பவம் குறித்து பொதுமக்கள் எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பெயரில் வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கான டிராக்டரை பறிமுதல் செய்து டிராக்டர் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- சங்கராபுரம் வட்டம் அரியலூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது என சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் அரியலூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அரியலூர், அத்தியூர், சின்னக்கொள்ளியூர், பெரிய கொள்ளியூர், வடகீரனூர், மையனூர், ஜெ.சித்தாமூர், அத்தியந்தல், சவுரியார் பாளையம், வடமாமாந்தூர், கடுவனூர், வடபொன்பரப்பி, இளையனார்குப்பம், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, ஓடியந்தல், வானாபுரம், பகண்டை கூட்டுரோடு, மரூர், கடம்பூர், ரெட்டியார்பாளையம், கரையாம்பாளையம், ஏந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது என சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.
- கல்வராயன் மலை ஓடைகளில் வெள்ளம் பெருக்கெ டுத்து ஓடியது.
- போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மக்கள் வெளியூருக்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கல்வராயன் மலையில் துரூர், தும்பை, பாச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் கல்வ ராயன் மலை ஓடை களில் வெள்ளம் பெருக்கெ டுத்து ஓடியது. இதனால் பெரியார் மேகம் போன்ற நீர்வீழ்ச்சியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இந்நி லையில் நேற்று முன் தினம் கல்வராயன் மலை பகுதியில் பெய்த கனமழை யால் துருவூர் செல்லும் சாலையில் ராட்சத பாறை உருண்டு விழுந்தது. இைத தொடர்ந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது .அருகிலுள்ள தரைபாலமும் மழைநீர் வெள்ளத்தில் அடித்து ெசல்லப்பட்டது.
துரூர் சாலையில செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அன்றாட தேவைகளுக்கு வெளியூருக்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். கல்வராயன் மலை அடிவாரத்தில் பெய்த கன மழையால் முஷ்குந்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் மங்கலம் மற்றும் அருளம் பாடி பகுதியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி செல்கிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொது மக்கள் அவதியடைந்து வருகிறார்கள். அந்த வழி யாக வருபவர்களை மாற்று வழியில் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.
- உளுந்தூர் பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
- உளுந்தூர்பேட்டை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர் பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை ( செவ்வாய்க்கிழமை )காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை உளுந்தூர்பேட்டை நகரப்பகுதி, வெள்ளையூர், எடைக்கல், குமாரமங்கலம் ,குணமங்கலம், அங்கனூர், ஏமம், வண்டிப்பாளையம், சின்னக்குப்பம், பெரியக்குப்பம், நாச்சியார் பேட்டை, உளுந்தண்டார் கோயில், மதியனூர், செங்குறிச்சி, பாதூர், எறையூர் மற்றும் நகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
பிள்ளையார் குப்பம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பிள்ளையார்குப்பம் தாமல் வட மாம்பாக்கம், எம் குன்னத்தூர் கிளியூர் நன்னாரம் அத்திப்பாக்கம் களமருதூர் பெரும்பட்டு டி. ஒரத்தூர் நெமிலி காம்பட்டு ஆதனூர் கிளாப்பாளையம் களவனூர் மற்றும் நத்தமூர் பகுதிகள் எறையூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட புகைப்பட்டி குஞ்சரம் கூத்தனூர் நரிப்பாளையம் பெரிய குறுக்கை வடுகபாளையம் எறையூர் வட குரும்பூர் எஸ்.மலையனூர் எல்லை கிராமம் கூவாடு தேன் குணம் நெய்வனை மற்றும் பில்ராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டு பராமரிப்பு பணி நடைபெறும் இத் தகவலை உளுந்தூர் பேட்டை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- ஆனந்திற்கும் ரமேசிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- ஆத்திரமடைந்த ரமேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஆனந்தை சரமாரியாக குத்தினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராதா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வி என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனை அடுத்து இருவரையும் சமாதானம் செய்ய புதுப்பட்டு பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 37) அங்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஆனந்த் அண்ணன் ரமேஷ், ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டுள்ளார். இதனால் ஆனந்திற்கும் ரமேசிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஆனந்தை சரமாரியாக குத்தினார். அப்போது இதை தடுக்க வந்த தாய் மீனாவிற்கும் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் ஆனந்தையும் மீனாவையும் மீட்டு அதே பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாகனங்களின் உரிமையாளர்கள் பெரும்பாலும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்கள்.
- நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே இரு சக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடி சென்று வருகிறார்கள். சின்னசேலம் பகுதியில் கடந்த 6 மாதங்களில் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருட்டு போய் உள்ளன. இந்த திருட்டில் ஈடுபட்டவர் ஒரே நபரா? அல்லது வேறு வேறு நபரா? என்பது இதுவரை தெரியாமல் இருந்து வருகிறது. திருட்டு போன இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்கள் பெரும்பாலும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்கள். சின்னசேலம் அருகே உள்ள தெங்கியாநத்தம் கிரா மத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் சிவராமன் கணியா மூரில் உள்ள தனியார் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 3-ந் தேதி மாலை 3 மணி அளவில் தனது இருசக்கர வாக னத்தை கணியாமூரில் நான்கு முனை சந்திப்பில் உள்ள டீ கடை அருகே நிறுத்தி விட்டு சொந்த வேலை காரணமாக வெளி யூருக்கு சென்று விட்டு நேற்று வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் இல்லாத தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் சின்ன சேலம் போலீஸ் நிலை யத்தில் சிவராமன் கொடுத்த புகாரின் அடிப்ப டையில் வழக்கை பதிவு செய்துள்ளனர். இருச க்கர வாகனங்கள் பறி கொடுத்தவர்கள் சின்ன சேலம் போலீஸ் நிலைய த்திற்கு நடையாய் நடக்கி றார்கள். இது குறித்து உயர் அதிகாரி தலையிட்டு நடவ டிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று பாதிக்க ப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தொடர் வாகன திருட்டால் பொது மக்கள் பீதி அடைந்துள்ள னர்.
- முருகேசன் தலைவாசல் அருகே உள்ள பெரியேரி கிராமத்தில் வசிக்கும் பெற்றோருடன் சென்றதாக கூறப்படுகிறது.
- குழந்தையை பார்த்துவிட்டு சென்ற முருகேசன் இது வரை வீடு திரும்பவில்லை.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பூசப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 28) இவருடைய மனைவி பிரேமா (வயது 25). இவர்களுக்கு கடந்த 2016 -ம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாக கூறப்படு கிறது. பிரேமா 7 மாத கர்ப்பிணியாக இருந்த போது கணவர் முருகேசன் தலைவாசல் அருகே உள்ள பெரியேரி கிராமத்தில் வசிக்கும் பெற்றோருடன் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் பிரேமாவுக்கு 10 மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்துவிட்டு சென்ற முருகேசன் இது வரை வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இது பற்றி பிரேமா அவரது மாமியார் வீட்டில் பலமுறை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது சரியான தகவல் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து தம்மிடம் ஒப்படைக்குமாறு புகார் அளித்தார். பிரேமா கொடுத்த புகாரின் அடிப்ப டையில் வழக்கு பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப் பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபரை வலைவீசி தேடிவந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இந்திலி கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ் (வயது 36) எலக்ட்ரீசியன். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு நரேஷ் தனது வீட்டை பூட்டிவிட்டு இந்திலி காந்தி நகரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டு பின்னர் மறுநாள் காலை தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப் பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப் பட்டு பீரோவிலிருந்த 9 பவுன் நகை, ரூ.10,000 ரொக்க பணம் மேலும் வீட்டிலிருந்த 40 இன்ச் எல் இ டி டிவி ஆகியவை மர்ம நபரால் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நரேஷ் இதுகுறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் சின்ன சேலம் ேபாலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டனர். மேலும் போலீ சார் வழக்கு பதிவு செய்து வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபரை வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சின்னசேலம் ஏரிக்கரை அருகே உள்ள ஒருவர் வீட்டில் திருட முயன்ற வாலிபரை அப்பகுதியிலுள்ள ெபாதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் சின்னசேலம் போலீ சாரிடம் ஒப்ப டைத்தனர். போலீசார் அந்த வாலிபரை விசாரித்த போது நயினார் பாளையத்தை சேர்ந்த சின்னையன் என்பதும் இந்திலியில் நரேஷ் வீட்டில் திருடியதும் தெரிய வந்தது. உடனே பேலீசார் சின்னையனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
- இவர்கள் 2 பேரும் பெரும்பாக்கத்தில் இருந்து கெடிலம் செல்வதற்காக சென்று கொண்டிருந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் (வயது 17). இவருடைய நண்பர் பிரேம்குமார். இவர்கள் 2 பேரும் பெரும்பாக்கத்தில் இருந்து கெடிலம் செல்வதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆவலம் அய்யனார் கோவில் என்ற இடத்தை கடக்கும்போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அருள் பரிதாபமாக இறந்தார்.
படுகாயம் அடைந்த பிரேம்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- பாம்பு கடித்து விவசாயி பலியானார்.
- கார்த்திகை தீபத்தன்று விளக்கேற்றி வழிபடுவது வழக்கம்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகேயுள்ள தோட்டப்பாடி கிராமத்தில் வசிப்பவர் ராமர் (வயது 37). இவருக்கு செல்வி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்்ளனர். இவர் விவசாயம் செய்து வருகிறார். கார்த்திகை தீபத்தன்று விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். அதன்படி ராமர் தனது வீட்டில் விளக்கேற்றிவிட்டு, நிலத்தில் உள்ள பாசன கிணறு அருகே விளக்கேற்றிவிட்டு திரும்பினார். அப்போது அவரது காலில் பூச்சி கடித்தது போல உணர்ந்தார்.
உடனே அங்கு பார்க்கும் போது விஷப்பாம்பு அவரை கடித்துவிட்டு சரசரவென ஒடியது. இவர் கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தினர் ஒடிவந்து ராமரை சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ராமரின் மனைவி செல்வி (வயது 34) அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் அருகேயுள்ள கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- சங்கீதாவுக்கும் அதே பகுதியில் சேர்ந்தவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
- மணி, கண்ணன் ஆகியோர் சங்கரை ஆபாசமாக திட்டி திட்டி தாக்கினர்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே உள்ள கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவருடைய சகோதரி சங்கீதாவுக்கும் அதே பகுதியில் சேர்ந்தவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த மணி என்பவருக்கும் சங்கீதாவுக்கும் 1.1/2 வருடங்களாக நட்பாக பழகி வந்தனர். . இது பற்றி கணவனுக்கு தெரிய வந்தது. இதனால் சின்னசேலம் அருகே உள்ள வி. கூட்ரோடு கிராமத்தில் தங்கி வசித்து வந்தனர்.
கடந்த 24- ந் தேதி அன்று சங்கீதாவை பார்க்க மணி சென்றுள்ளார். இது பற்றி கணவனுக்கு தெரிந்ததால் சங்கீதா நேற்று எலிபேஸ்ட் சாப்பிட்டார். பின்னர் அவரை சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதனால் கோபமடைந்த சங்கரும் கல்லாநத்தம் சென்று கேட்டார். அப்போது மணி, கண்ணன் ஆகியோர் சங்கரை ஆபாசமாக திட்டி திட்டி தாக்கினர். இதுகுறித்து சங்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சின்ன சேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும்
- நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசியதாவது, கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தீன்தயாள் உபாத்யாய -கிராமின் கௌசல்ய - யோஜனா (DDU-GKY) திட்டத்தின்கீழ் "இளைஞர் திறன் திருவிழா" நடைபெற்றது. இந்த இளைஞர் திறன் திருவிழாவில், 8-ஆம் வகுப்பிற்கு மேல் கல்வி தகுதியுடைய 35 வயதுக்குட்பட்ட அனைத்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் தங்களுக்கு விருப்பமுள்ள திறன் பயிற்சியை தேர்வு செய்து பயிற்சியில் இணைந்து பயன்பெற வழி வகை செய்யப்பட்டது. மேலும், பயிற்சிக்கு பின் வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் வேலைவாய்ப்பினை வழங்கிடும். மேலும், சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு உதவத்தக்க அரசுத் திட்டங்கள் பற்றிய விவரங்களை இம்முகாமில்அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டது. அதன்படி இளைஞர் திறன் திருவிழாவில் 300 க்கும் மேற்ப்பட்ட
இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் 13 தொழில் பயிற்சி நிலையங்கள் வாயிலாக ௯௫ இளைஞர்கள் தொழிற் திறன் பயிற்சிக்கு தேர்வாகியுள்ளார்கள். அவர்களுக்கான தொழிற் திறன் பயிற்சி சோர்க்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி காலங்கள் 3 முதல் அதிகபட்ச 6 மாதங்கள் வரை பயிற்சி அளிக்கப்படும். எனவே இத்திறன் திருவிழாவை இளைஞர்கள் பயன்படுத்திக் கொண்டு தாங்களாகவே புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் தெரிவித்தார். இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கக திட்ட இயக்குநர் சுந்தரராஜன், உதவி திட்ட இயக்குநர்கள் நாராயணசாமி, கார்த்திகேயன், வட்டார இயக்க மேலாளர் சதீஷ்குமார், கள்ளக்குறிச்சி நகர் மன்ற தலைவர் சுப்புராயலு, கள்ளக்குறிச்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் அலமேலு ஆறுமுகம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






