search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் பகுதியில் தொடரும் இரு சக்கர வாகன திருட்டு:  பொதுமக்கள் பீதி
    X

    சின்னசேலம் பகுதியில் தொடரும் இரு சக்கர வாகன திருட்டு: பொதுமக்கள் பீதி

    • வாகனங்களின் உரிமையாளர்கள் பெரும்பாலும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்கள்.
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே இரு சக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடி சென்று வருகிறார்கள். சின்னசேலம் பகுதியில் கடந்த 6 மாதங்களில் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருட்டு போய் உள்ளன. இந்த திருட்டில் ஈடுபட்டவர் ஒரே நபரா? அல்லது வேறு வேறு நபரா? என்பது இதுவரை தெரியாமல் இருந்து வருகிறது. திருட்டு போன இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்கள் பெரும்பாலும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்கள். சின்னசேலம் அருகே உள்ள தெங்கியாநத்தம் கிரா மத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் சிவராமன் கணியா மூரில் உள்ள தனியார் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் கடந்த 3-ந் தேதி மாலை 3 மணி அளவில் தனது இருசக்கர வாக னத்தை கணியாமூரில் நான்கு முனை சந்திப்பில் உள்ள டீ கடை அருகே நிறுத்தி விட்டு சொந்த வேலை காரணமாக வெளி யூருக்கு சென்று விட்டு நேற்று வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் இல்லாத தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் சின்ன சேலம் போலீஸ் நிலை யத்தில் சிவராமன் கொடுத்த புகாரின் அடிப்ப டையில் வழக்கை பதிவு செய்துள்ளனர். இருச க்கர வாகனங்கள் பறி கொடுத்தவர்கள் சின்ன சேலம் போலீஸ் நிலைய த்திற்கு நடையாய் நடக்கி றார்கள். இது குறித்து உயர் அதிகாரி தலையிட்டு நடவ டிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று பாதிக்க ப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தொடர் வாகன திருட்டால் பொது மக்கள் பீதி அடைந்துள்ள னர்.

    Next Story
    ×