உளுந்தூர்பேட்டை அருகே டிராக்டர் மோதி சிறுவன் பலி

உளுந்தூர்பேட்டை அருகே டிராக்டர் மோதி சிறுவன் பலியானார்.பொதுமக்கள் எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டரை படத்தில் காணலாம்.
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டரை படத்தில் காணலாம்.
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர் கோட்டை அருகே உள்ள ஏப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் வசந்த் (வயது 4). இவர் வீட்டு ஓரத்தில் விளையாடிக் கொண்டி ருந்த போது அந்த வழியாக வந்த பதிவு எண் இல்லாத டிராக்டர் குழந்தை மீது மோதி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். சம்பவம் குறித்து பொதுமக்கள் எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பெயரில் வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கான டிராக்டரை பறிமுதல் செய்து டிராக்டர் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com