என் மலர்
நீங்கள் தேடியது "insect bite"
- பாம்பு கடித்து விவசாயி பலியானார்.
- கார்த்திகை தீபத்தன்று விளக்கேற்றி வழிபடுவது வழக்கம்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகேயுள்ள தோட்டப்பாடி கிராமத்தில் வசிப்பவர் ராமர் (வயது 37). இவருக்கு செல்வி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்்ளனர். இவர் விவசாயம் செய்து வருகிறார். கார்த்திகை தீபத்தன்று விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். அதன்படி ராமர் தனது வீட்டில் விளக்கேற்றிவிட்டு, நிலத்தில் உள்ள பாசன கிணறு அருகே விளக்கேற்றிவிட்டு திரும்பினார். அப்போது அவரது காலில் பூச்சி கடித்தது போல உணர்ந்தார்.
உடனே அங்கு பார்க்கும் போது விஷப்பாம்பு அவரை கடித்துவிட்டு சரசரவென ஒடியது. இவர் கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தினர் ஒடிவந்து ராமரை சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ராமரின் மனைவி செல்வி (வயது 34) அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் அருகேயுள்ள கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- நெட்டப்பாக்கம் அருகே நடந்த சோக சம்பவம்.
- ஜெயராமனுக்கு இன்சூலின் ஊசியை அவரது தம்பி சண்முகம் செலுத்துவது வழக்கம்.
புதுச்சேரி:
புதுவை நெட்டப்பாக்கம் அருகே மடுகரை சேடர் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன்(வயது56). இவரது மனைவி சிவகாமி. இவர் லாஸ்பேட்டை ஜெ.டி.எஸ். அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து மகன்களுடன் லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் வசித்து வருகிறார்.
ஜெயராமன் பிளாஸ்டிக் பை வியாபாரம் செய்து கொண்டு தனது தம்பி சண்முகம் அரவணைப்பில் இருந்து வந்தார்.
ஜெயராமனுக்கு நீரழிவு நோய் இருந்து வந்தது. இதற்காக அவர் தினமும் இன்சூலின் ஊசியை பயன்படுத்தி வந்தார். ஜெயராமனுக்கு இன்சூலின் ஊசியை அவரது தம்பி சண்முகம் செலுத்துவது வழக்கம்.
அதுபோல் சண்முகம் இன்சூலின் ஊசியை செலுத்த ஜெய ராமனின் வீட்டுக்கு சென்றார்.
அப்போது ஜெயராமன் வாயில் நுரை தள்ளியப்படி கையில் ரத்தம் கசிந்தவாறு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஜெயராமனை ஏதோ விஷப்பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மூத்த மகன் சுகந்தன் கொடுத்த புகாரின் பேரில் மடுகரை புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






