என் மலர்
கள்ளக்குறிச்சி
- பிள்ளையார்குப்பம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
- பஸ்நிறுத்தம் பகுதியில், திருவெண்ணைநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவ ட்டம் உளுந்தூ ர்பேட்டை தாலுகா திருநாவ லூர் ஒன்றியத்தில் பிள்ளை யார்குப்பம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு ஏராளமான ஏரி, குளங்கள் உள்ளன. கடந்த சில தினங்களாக பெய்த கனமழையிலும் இந்த ஏரி, குளங்கள் நிரம்பவில்லை. ஆகவே இந்த ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்க ளை தூர்வாரி, ஏரி, குளங்க ளையும் தூர்வார வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தி டம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
இந்தபோதும் ஏரி, குளங்கள் தூர்வாரப்படா ததால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன் தலைமையில் 70-க்கும் மேற்பட்டோர் பிள்ளையார்குப்பம் பஸ்நிறுத்தம் பகுதியில், திருவெண்ணைநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஏரி, குளங்களை தூர்வா ரக்கோரி கோஷமிட்டனர். இதனைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினரை திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் கைது செய்து அப்புற ப்படுத்தினர். மேலும் தங்களது கோரிக்கை யை மாவட்ட நிர்வாகத்திடம் கூறுவதாக இன்ஸ்பெக்டர் அசோகன் உறுதியளித்தார்.
- சேகர் அவரது மனைவி அலமேலுவுடன் தனியார் பஸ்சில் நேற்று சென்னை புறப்பாட்டார்.
- திருச்சியில் இருந்து சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
கடலூர்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவாரூர் தாலுகா மேல்சார் கண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 70). இவரது மகன் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக சேகர் அவரது மனைவி அலமேலுவுடன் தனியார் பஸ்சில் நேற்று சென்னை புறப்பாட்டார். அப்போது உளுந்தூர்பேட்டை பாதூர் காந்திநகர் அருகே டீ குடிப்பதற்காக பஸ்சை டிரைவர் நிறுத்தினார். பயணிகளும் டீ குடிக்க இறங்கினர். அந்த நேரத்தில் சிறுநீர் கழிக்க சாலையோரம் சென்ற சேகர் மீது திருச்சியில் இருந்து சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சேகரின் உடலை கைப்பற்றி பிரதபரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நள்ளிரவில் மனைவி கண் எதிரே கணவன் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
- போலீசார் சங்கராபுரம் அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
- புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சங்கராபுரம் அருகே கொசப்பாடி கிராமத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பையுடன் நின்று கொண்டிருந்தவரை பிடித்து பையை சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணையில், அவர் செம்பராம்பட்டை சேர்ந்த கோபிநாத் (42) என்பதும் மளிகை கடை விற்பனைக்காக புகையிலை பொருட்கள் வாங்கி வந்தபோது சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து கோபிநாத்தை கைது செய்து, அவரிடம் இருந்து 9 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
- சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தலா 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் போலீஸ் உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் கொசப்பாடி, பொய்க்குணம், செம்பராம்பட்டு, நெடுமானூர் ஆகிய கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர் . அப்போது அங்குள்ள வீடுகள், வயல்வெளிகளில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த கொசப்பாடியை சேர்ந்த ராஜேந்திரன் (58), சேஷசமுத்திரத்தை சேர்ந்த முத்து (71), பூட்டை கிராமத்தை சேர்ந்த மார்க்ஸ் லெனின் (39), நெடுமானூரை சேர்ந்த முத்தம்மாள் (58) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து தலா 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
- அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் செல்வராஜை தேடி விவசாய நிலத்திற்கு சென்றனர்.
- இது குறித்து பகண்டை கூட்ரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்ரோடு அருகே மரூர்மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 54) விவசாயி. இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள இவரது விவசாய நிலத்திற்கு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் செல்வராஜ் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் செல்வராஜை தேடி விவசாய நிலத்திற்கு சென்றனர். அப்போது மின்சாரம் தாக்கி செல்வராஜ் இறந்து கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வராஜின் குடும்ப த்தினர் இது குறித்து பகண்டை கூட்ரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சூர்யா, சோலை ஜெயராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செ ல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறி த்து போ லீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உளுந்தூர்பேட்டை அருகே டிராக்டர் மோதி சிறுவன் பலியானார்.
- பொதுமக்கள் எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர் கோட்டை அருகே உள்ள ஏப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் வசந்த் (வயது 4). இவர் வீட்டு ஓரத்தில் விளையாடிக் கொண்டி ருந்த போது அந்த வழியாக வந்த பதிவு எண் இல்லாத டிராக்டர் குழந்தை மீது மோதி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். சம்பவம் குறித்து பொதுமக்கள் எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பெயரில் வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கான டிராக்டரை பறிமுதல் செய்து டிராக்டர் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- சங்கராபுரம் வட்டம் அரியலூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது என சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் அரியலூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அரியலூர், அத்தியூர், சின்னக்கொள்ளியூர், பெரிய கொள்ளியூர், வடகீரனூர், மையனூர், ஜெ.சித்தாமூர், அத்தியந்தல், சவுரியார் பாளையம், வடமாமாந்தூர், கடுவனூர், வடபொன்பரப்பி, இளையனார்குப்பம், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, ஓடியந்தல், வானாபுரம், பகண்டை கூட்டுரோடு, மரூர், கடம்பூர், ரெட்டியார்பாளையம், கரையாம்பாளையம், ஏந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது என சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.
- கல்வராயன் மலை ஓடைகளில் வெள்ளம் பெருக்கெ டுத்து ஓடியது.
- போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மக்கள் வெளியூருக்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கல்வராயன் மலையில் துரூர், தும்பை, பாச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் கல்வ ராயன் மலை ஓடை களில் வெள்ளம் பெருக்கெ டுத்து ஓடியது. இதனால் பெரியார் மேகம் போன்ற நீர்வீழ்ச்சியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இந்நி லையில் நேற்று முன் தினம் கல்வராயன் மலை பகுதியில் பெய்த கனமழை யால் துருவூர் செல்லும் சாலையில் ராட்சத பாறை உருண்டு விழுந்தது. இைத தொடர்ந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது .அருகிலுள்ள தரைபாலமும் மழைநீர் வெள்ளத்தில் அடித்து ெசல்லப்பட்டது.
துரூர் சாலையில செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அன்றாட தேவைகளுக்கு வெளியூருக்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். கல்வராயன் மலை அடிவாரத்தில் பெய்த கன மழையால் முஷ்குந்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் மங்கலம் மற்றும் அருளம் பாடி பகுதியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி செல்கிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொது மக்கள் அவதியடைந்து வருகிறார்கள். அந்த வழி யாக வருபவர்களை மாற்று வழியில் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.
- உளுந்தூர் பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
- உளுந்தூர்பேட்டை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர் பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை ( செவ்வாய்க்கிழமை )காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை உளுந்தூர்பேட்டை நகரப்பகுதி, வெள்ளையூர், எடைக்கல், குமாரமங்கலம் ,குணமங்கலம், அங்கனூர், ஏமம், வண்டிப்பாளையம், சின்னக்குப்பம், பெரியக்குப்பம், நாச்சியார் பேட்டை, உளுந்தண்டார் கோயில், மதியனூர், செங்குறிச்சி, பாதூர், எறையூர் மற்றும் நகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
பிள்ளையார் குப்பம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பிள்ளையார்குப்பம் தாமல் வட மாம்பாக்கம், எம் குன்னத்தூர் கிளியூர் நன்னாரம் அத்திப்பாக்கம் களமருதூர் பெரும்பட்டு டி. ஒரத்தூர் நெமிலி காம்பட்டு ஆதனூர் கிளாப்பாளையம் களவனூர் மற்றும் நத்தமூர் பகுதிகள் எறையூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட புகைப்பட்டி குஞ்சரம் கூத்தனூர் நரிப்பாளையம் பெரிய குறுக்கை வடுகபாளையம் எறையூர் வட குரும்பூர் எஸ்.மலையனூர் எல்லை கிராமம் கூவாடு தேன் குணம் நெய்வனை மற்றும் பில்ராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டு பராமரிப்பு பணி நடைபெறும் இத் தகவலை உளுந்தூர் பேட்டை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- ஆனந்திற்கும் ரமேசிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- ஆத்திரமடைந்த ரமேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஆனந்தை சரமாரியாக குத்தினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராதா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வி என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனை அடுத்து இருவரையும் சமாதானம் செய்ய புதுப்பட்டு பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 37) அங்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஆனந்த் அண்ணன் ரமேஷ், ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டுள்ளார். இதனால் ஆனந்திற்கும் ரமேசிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஆனந்தை சரமாரியாக குத்தினார். அப்போது இதை தடுக்க வந்த தாய் மீனாவிற்கும் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் ஆனந்தையும் மீனாவையும் மீட்டு அதே பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாகனங்களின் உரிமையாளர்கள் பெரும்பாலும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்கள்.
- நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே இரு சக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடி சென்று வருகிறார்கள். சின்னசேலம் பகுதியில் கடந்த 6 மாதங்களில் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருட்டு போய் உள்ளன. இந்த திருட்டில் ஈடுபட்டவர் ஒரே நபரா? அல்லது வேறு வேறு நபரா? என்பது இதுவரை தெரியாமல் இருந்து வருகிறது. திருட்டு போன இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்கள் பெரும்பாலும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்கள். சின்னசேலம் அருகே உள்ள தெங்கியாநத்தம் கிரா மத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் சிவராமன் கணியா மூரில் உள்ள தனியார் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 3-ந் தேதி மாலை 3 மணி அளவில் தனது இருசக்கர வாக னத்தை கணியாமூரில் நான்கு முனை சந்திப்பில் உள்ள டீ கடை அருகே நிறுத்தி விட்டு சொந்த வேலை காரணமாக வெளி யூருக்கு சென்று விட்டு நேற்று வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் இல்லாத தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் சின்ன சேலம் போலீஸ் நிலை யத்தில் சிவராமன் கொடுத்த புகாரின் அடிப்ப டையில் வழக்கை பதிவு செய்துள்ளனர். இருச க்கர வாகனங்கள் பறி கொடுத்தவர்கள் சின்ன சேலம் போலீஸ் நிலைய த்திற்கு நடையாய் நடக்கி றார்கள். இது குறித்து உயர் அதிகாரி தலையிட்டு நடவ டிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று பாதிக்க ப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தொடர் வாகன திருட்டால் பொது மக்கள் பீதி அடைந்துள்ள னர்.
- முருகேசன் தலைவாசல் அருகே உள்ள பெரியேரி கிராமத்தில் வசிக்கும் பெற்றோருடன் சென்றதாக கூறப்படுகிறது.
- குழந்தையை பார்த்துவிட்டு சென்ற முருகேசன் இது வரை வீடு திரும்பவில்லை.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பூசப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 28) இவருடைய மனைவி பிரேமா (வயது 25). இவர்களுக்கு கடந்த 2016 -ம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாக கூறப்படு கிறது. பிரேமா 7 மாத கர்ப்பிணியாக இருந்த போது கணவர் முருகேசன் தலைவாசல் அருகே உள்ள பெரியேரி கிராமத்தில் வசிக்கும் பெற்றோருடன் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் பிரேமாவுக்கு 10 மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்துவிட்டு சென்ற முருகேசன் இது வரை வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இது பற்றி பிரேமா அவரது மாமியார் வீட்டில் பலமுறை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது சரியான தகவல் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து தம்மிடம் ஒப்படைக்குமாறு புகார் அளித்தார். பிரேமா கொடுத்த புகாரின் அடிப்ப டையில் வழக்கு பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






