சங்கராபுரம் அருகே கஞ்சா கடத்திய 2 பேர் தப்பி ஓட்டம்

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். நெடுமானூர் கிராமத்தை சேர்ந்த நவீன், ரசிகன் என்பது தெரியவந்தது.
சங்கராபுரம் அருகே கஞ்சா கடத்திய 2 பேர் தப்பி ஓட்டம்
Published on

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் அருகே நெடுமானூர் பகுதியில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தினர். அப்போது அவர்கள், தாங்கள் வைத்திருந்த கஞ்சாவை கீழே போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர். இதையடுத்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய மர்மநபர்கள் குறித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் நெடுமானூர் கிராமத்தை சேர்ந்த நவீன், ரசிகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து தப்பி ஓடிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com