என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் அருகே புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது
    X

    சங்கராபுரம் அருகே புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

    • போலீசார் சங்கராபுரம் அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
    • புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சங்கராபுரம் அருகே கொசப்பாடி கிராமத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பையுடன் நின்று கொண்டிருந்தவரை பிடித்து பையை சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணையில், அவர் செம்பராம்பட்டை சேர்ந்த கோபிநாத் (42) என்பதும் மளிகை கடை விற்பனைக்காக புகையிலை பொருட்கள் வாங்கி வந்தபோது சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து கோபிநாத்தை கைது செய்து, அவரிடம் இருந்து 9 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×