என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • மோட்டார் சைக்கிளில் சங்க ராபுரம்-பூட்டை சாலையில் உள்ள செல்போன் கடைக்கு சென்றார்.
    • மினிலாரி அண்ணாமலை மீது எதிர்பாராதவிதமாக மோதியது

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 34). மளிகைக்கடை நடத்தி வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சங்க ராபுரம்-பூட்டை சாலையில் உள்ள செல்போன் கடைக்கு சென்றார். பின்னர் அவர் கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தனது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்து விட்டு, மீண்டும் மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த மினிலாரி அண்ணாமலை மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சங்கராபுரம் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அண்ணாமலையை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தியாகு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று மீண்டும் மாட்டுக் கொட்டைகையில் மாடு களை கட்டிவிட்டு இரவு தூங்கச் சென்றார்.
    • சதீஷ் உள்பட 3 பேர் இரவோடு இரவாக திருடி சென்றதை ஒப்புக் கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் அருகே நெடு மானூர் பகுதியைச் சேர்ந்த வர் கோவிந்தராஜ். இவரது மனைவி கமலக்கோடி (வயது 48). விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் வீட்டின் பின்புறம் மாட்டு கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று  வழக்கம்போல் மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று மீண்டும் மாட்டுக் கொட்டைகையில் மாடு களை கட்டிவிட்டு இரவு தூங்கச் சென்றார். இன்று காலை கமல கொடி எழுந்து சென்று பார்த்த போது மாட்டு கொட்டையிலிருந்த மாடுகளில் பசுமாடு ஒன்று காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கமலகொடி பசு மாட்டை பல்வேறு இடங்க ளில் தேடிப் பார்த்தார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து கமலக்கொடி எலவனாசூர் போலீஸ் நிலை யத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் எலவனாசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்கு பதிவு செய்து மாட்டை திருடி சென்ற மர்ம கும்பலை தேடிவந்தார். இந்நிலையில் பரிந்தன் பகுதியில் ஏரிக்கரை தெருவில் உள்ள ஒரு வீட்டில் காணாமல் போன மாடு கட்டி வைக்கப்பட்டிருந்தது. உடனே போலீசார் அந்த வீட்டிற்கு சென்று வீட்டிலிருந்த சதீஷ் (27) என்பவரிடம் விசாரித்த போது கமலக்கொடியின் மாட்டை சதீஷ் உள்பட 3 பேர் இரவோடு இரவாக திருடி சென்றதை ஒப்புக் கொண்டார். உடனே மாட்டை பறிமுதல் செய்த போலீசார் சதீஷை கைது செய்தனர். மேலும் இந்த திருட்டில் ஈடுபட்டு தலைமறைவாக இருக்கும் 2 பேரை போலீ சார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • கோவில் உண்டி யலை உடைத்து பணத்தை யாரோ மர்ம நபர் திருடிச்சென்றதும் தெரியவந்தது.
    • மர்ம நபர் காணிக்கை பணத்தை மீண்டும் கோவிலில் வீசி சென்றார்.


    சங்கராபுரம் அருகே அரச ம்பட்டு கிராமம் மணி முத்தாறு அருகே பால தண்டாயுதபாணி முருகன் கோவில் உள்ளது. கடந்த 12-ந்  தேதி பூஜை செய்வதற் காக கோவில் பூசாரி சம்பத் கோவிலுக்கு சென்றபோது கோவில் கதவு உடைந்து கிடந்தததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் கோவில் உண்டி யலை உடைத்து அதில் இருந்த பணத்தை யாரோ மர்ம நபர் திருடிச்சென்றதும் தெரியவந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் பூசாரி சம்பத் நேற்று வழக்கம்போல் கோவிலுக்கு பூஜை செய்வ தற்காக வந்தார். அப்போது கோவில் வளாகத்தில் 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்ததை கண்டு வியப்படைந்தார். பின்னர் இது குறித்து ஊர் முக்கியஸ்தர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். அதன் பேரில் சங்கராபுரம் போலீசாரும், ஊர் முக்கியஸ்தர்களும் விரைந்து வந்து கோவிலில் கிடந்த ரூபாய் நோட்டுகளை பார்வையிட்டு அவற்றை சேகரித்தனர். மொத்தம் ரூ.17 ஆயிரம் இருந்தது. விசாரணையில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர் ஒருவாரம் கழித்து காணிக்கை பணத்தை மீண்டும் கோவிலில் வீசி சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை வீசி சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அழகான புகைப்ப டங்களை அனுப்புங்கள் இயக்குனரிடம் காட்டுகி றேன் என்று கூறியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பங்காரம் கிராமத்தை சேர்ந்த திருமணமான இளம் பெண்ணுக்கும் தாமோதரன் என்கின்ற ரவிக்குமார் (வயது 25) இன்ஜினியர் பட்டதாரி என்பவருடன் முகநூல் மூலமாக அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும் நண்பர்கள் ஆன பின்னர் செல் நம்பரை பகிர்ந்து கொண்டு நட்பாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக இளம்பெண்ணிடம் தாமோ தரன் கூறியுள்ளார். உன்னு டைய அழகான புகைப்ப டங்களை அனுப்புங்கள் இயக்குனரிடம் காட்டுகி றேன் என்று கூறியுள்ளார்.

    அந்த இளம் பெண் தன்னிடம் போட்டோ எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தாமோதரன் எனக்கு போட்டோகிராபி தெரியும் என்றும் நான் நேரில் வந்து உன்னை அழகாக படம் பிடித்து இயக்குனருக்கு அனுப்பி வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கு சம்மதம் தெரி வித்த அந்தப் பெண்ணிடம் வீட்டின் முகவரியை கேட்ட றிந்தார். கடந்த நவம்பர் மாதம் 14-ந் தேதி அன்று மதியம் 12.30 மணியளவில் அந்தப் பெண்ணுக்கு போன் செய்து உன் வீட்டருகே அருகே தான் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    பின்னர் அந்தப் பெண் தாமோதரனை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பெண்ணிடம் போட்டோ எடுக்க வேண்டும் உன்னிடம் இருக்கும் உடையிலே அழ கான உடையை உடுத்திக் கொண்டுவா என்று கூறியுள்ளார். அந்தப் பெண்ணும் சினிமா ஆசை உச்சத்திற்கு ஏற போட்டி ருந்த நகைகள் எல்லாம் கழட்டி வைத்து விட்டு அறையினுள் சென்றார். இதனை எதிர்பார்த்திருந்த தாமோதரன் நகைகள் மற்றும் செல்போனை எடுத்து க்கொண்டு அங்கி ருந்து மின்னல் வேகத்தில் சென்றுள்ளார்.

    துணி மாற்றிக் கொண்ட இளம்பெண் வெளியில் வந்து பார்த்த பொழுது நகை, செல்போனை காண வில்லை. அங்கிருந்த தாமோ தரனையும் காண வில்லை. அதிர்ச்சி அடைந்த இளம்பெண் சின்ன சேலம் போலீஸ் நிலைய த்தில் இது குறித்து புகாரளி த்தார். வழக்கு பதிவு செய்த போலீ சார் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு தலைமையில் தனிப்படை அமைத்து தாமோதரனை தேடி வந்தனர்.

    இந்நிலையில் செல் போன் நம்பரை வைத்து தாமோதரன் காரைக்கு டியில் இருப்பதை போலீ சார் கண்டுபிடித்தனர். காரைக்குடிக்கு விரைந்த சின்னசேலம் போலீசார் தாமோத ரனை மடக்கிப் பிடித்தனர். சின்னசேலம் போலீஸ் நிலை யத்திற்கு இன்று அழைத்து வந்தனர். கள்ளக்குறிச்சி நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தி சின்ன சேலம் சிறையில் அடைத்த னர்.

    • கண்டாச்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் ஆட்டுப்பட்டியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் இருந்தன.
    • 10 நாய்கள் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து கடித்து குதறியது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 55. இவர் அருகில் உள்ள தும்பரமேடு கிராமத்தில் ஆட்டுப்பட்டி வைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த ஆட்டுப்பட்டியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் இருந்தன. இந்த நிலையில் கண்டாச்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவருக்கு சொந்தமான சுமார் 10 நாய்கள் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து அங்கு அடைக்கப்பட்டு இருந்த 20 குட்டி ஆடுகள் மற்றும் 4 பெரிய ஆடுகளை கடித்துக் குதறியதில் இறந்துவிட்டது. இதுகுறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் விரைந்து சென்று ஆடுகளை நாய்கள் கடித்து குதறி இறந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ததுடன் இது தொடர்பாக நாராயணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே குடும்ப தகறாறு ஏற்பட்டுள்ளது.
    • மாலதியை மீட்டு சிகிச்சைக்காக ரிஷிவந்தியம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர் பாண்டியன். அவரது மனைவி மாலதி(20). இவர்களுக்கு 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே குடும்ப தகறாறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மாலதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் மாலதியை மீட்டு சிகிச்சைக்காக ரிஷிவந்தியம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் மாலதியின் தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா விசாரணை நடத்தி வருகிறார்.

    • சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • நெடுமானூர் கிராமத்தை சேர்ந்த நவீன், ரசிகன் என்பது தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே நெடுமானூர் பகுதியில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தினர். அப்போது அவர்கள், தாங்கள் வைத்திருந்த கஞ்சாவை கீழே போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர். இதையடுத்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய மர்மநபர்கள் குறித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் நெடுமானூர் கிராமத்தை சேர்ந்த நவீன், ரசிகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து தப்பி ஓடிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • எலவனாசூர்கோட்டை பகுதியில் போலீசார்தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • எஸ். மலையனூர் கிராமத்தில் சுபாஷ் என்பவர் தெருவில் கஞ்சா விற்றார்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. மகேஷ் மேற்பார்வையில் தமிழ்வாணன் இன்ஸ்பெக்டர் தலைமையில் உளுந்தூர்பேட்டை, எலவனாசூர்கோட்டை பகுதியில் போலீசார்தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எஸ். மலையனூர் கிராமத்தில் சுபாஷ் என்பவர் தெருவில் கஞ்சா விற்றார். உடேன போலீசார் அவரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

    • சங்கராபுரம் அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே புதுப்பாலப்பட்டு பகுதியில் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்த 3 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில், அவர்கள் வடபாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிங்காரம் மகன் குமார்(வயது42), புதுப்பாலப்பட்டு கிராமம் பாண்டியன் மகன் வல்லரசு(21), ஆனந்தன் மகன் அருண்(21) என்பதும், விற்பனைக்காக கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    • கஞ்சா விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ஒரு சிறுவன் ஆகிய 2 பேர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட் டம் உளுந்தூர்பேட்டை சுற்று வட்டார பகுதியில் கஞ்சா விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. மகேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அன்னை சத்யா தெருவில் மணிகண்டன் (வயது 22), அவருடன் ஒரு சிறுவன் ஆகிய 2 பேர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மணிகண்டனை சிறையில் அடைத்தனர். சிறுவனை அங்குள்ள சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    • பகண்டை கூட்டு ரோடு அருகே ஓடையில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.
    • கரும்பு சோலை கட்டை தலையில் வைத்துக்கொண்டு திருவேங்கடம் நடந்து சென்றார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டுரோடு அடுத்த அவிரியூர் கிராமத்தை சேர்ந்தவர் திருவேங்கடம் (வயது 42). இவர் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி. சம்பவத்தன்று அதே ஊரில் உள்ள பெரியாயி ஓடை கரையில் கரும்பு சோலை கட்டை தலையில் வைத்துக்கொண்டு திருவேங்கடம் நடந்து சென்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த ஓடைக்குள் தவறி விழுந்து விட்டார்.

    இதில் பின் கழுத்தில் பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி திருவேங்கடம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஆனந்தராசு தலைமையில் போலீசார் நேற்று தகரை கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 60 லிட்டர் சாராயத்தையும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தகரை கிராமத்தில் சாராயம் விற்று வருவதாக சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு தலைமையில் போலீசார் நேற்று தகரை கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது தகரை கிராம எல்லையில் உள்ள மூணாங்கண்னி குட்டை அருகே இருசக்கர வாகனத்தில் ஒருவர் சாராயம் கடத்தி வந்தார்.

    அப்பொழுது போலீஸ் காரை கண்டதும் சாராயத்தையும் இரு சக்கர வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்றார். பின்னர் லாரி டியூப்பில் இருந்த 60 லிட்டர் சாராயத்தையும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய நபர் நாககுப்பம் கிராமத்தை சேர்ந்த நேதாஜி என்பது தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து நேதாஜியை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×