என் மலர்
கள்ளக்குறிச்சி
- கள்ளக்குறிச்சி அருகே கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி கவரைத் தெருவை சேர்ந்தவர் கோபி (வயது 45) கூலிதொழி லாளி, இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று சோமண் டார்குடி பகுதியில் உள்ள தடிகார கோவில் அருகே மரத்தில் தூக்கு போட்டு தற்கொலைசெய்தார். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள்.
- வீட்டில் இருந்து வெளியூர் வியாபாரத்திற்கு சென்று வருவதாக ஏழு மலை தனது மனைவி சுகுணாவிடம் கூறி சென்றார்.
- தகவலின் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் அங்கு சென்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா செங்குறிச்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் ஏழுமலை (வயது 43). இவர் இருசக்கர வாகனம் மூலம் புலி, பூண்டு வியா பாரம் செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியூர் வியாபாரத்திற்கு சென்று வருவதாக ஏழு மலை தனது மனைவி சுகுணாவிடம் கூறி சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி தனது உறவினர்களுடன் சேர்ந்த ஏழுமலையை தேடினார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை அதே கிராமத்தை பாலாஜி என்ப வரது கிணற்றில் ஏழமலை பிணமாக மிதந்தார். அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் அங்கு சென்றனர். தீயணைப்பு படைவீரர்கள் கிணற்றில் இறங்கி ஏழுமலை உடலை மீட்டனர். அதன் பின்னர்பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வியாபாரி ஏழுமலை எப்படி இறந்தார், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசார ணை நடத்தி வருகிறார்கள்.
- ரேசன்அரிசி கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- லாரியில் 2½ டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே காட்டுஎடையார் கிராமத்தில் ரேசன்அரிசி கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரிஷிவந்தியம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையில் போலீசார் கோபி, பாலாஜி, இளையபெருமாள் ஆகியோர் காட்டுஎடையார் பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் 2½ டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து மினி லாரி டிரைவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் வடதொரசலூரை சேர்ந்த மணிகண்டன்(31) என்பதும் ரேஷன் அரிசி மூட்டைகளை வெளியூருக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து மணிகண் டனை கைது செய்த போலீசார் , மினி லாரியுடன் ரேசன் அரிசி மூட்டைகளை ைகப்பற்றினர். பின்னர் அவை விழுப்புரம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
- பாஷா மூங்கில்துறைப்பட்டில் இறைச்சிக்கடை நடத்தி வந்தார்.
- சிகிச்சை பலனின்றி பாஷா பரிதாபமாக இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டு தேவ நகரை சேர்ந்தவர் பாஷா(50). மூங்கில்துறைப்பட்டில் இறைச்சிக்கடை நடத்தி வந்தார். இவர் இருசக்கர வாக னத்தில பவுஞ்சிப்பட்டில் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் மூங்கில்துறைப் பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தார். இளையாங்கன்னி கூட்டு சாலை அருகே வந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் பாஷா ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாஷா பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காசிராமன் சென்னை யில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
- யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தியாக ராஜபுரத்தை சேர்ந்தவர் காசிராமன் (வயது 40). சென்னை யில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் தியாகராஜபுரத்தில் உள்ள வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த காசிராமன் வீட்டை திறந்து பார்த்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அறைக்குள் சென்று பார்த்தபோது பீரோவின் கதவுகள் திறந்து கிடந்தன.
அதில் இருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கம், 3 வெள்ளி குத்து விளக்கு உட்பட வெள்ளி பொருட்களை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.75 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து காசிராமன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து வீட்டின் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடை பெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது .
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கி ழமை) நடை பெற உள்ளது. இதன் காரணமாக சங்கரா புரம், பாண்டலம், வடசிறு வள்ளூர், வட செட்டியந்தல், திம்மனந்தல், கிடங்குடை யாம்பட்டு, ஆருர், ராமராஜ புரம், அரசம்பட்டு, அர சராம்பட்டு, மஞ்சப்புத்தூர், பொய்க் குணம், விரியூர், எஸ்.வி.பாளையம், கள்ளிப்பட்டு, கொசப்பாடி, ஜவுளி குப்பம், மல்லாபுரம், தும்பை, பாச்சேரி, கூடலூர், மோட்டாம்பட்டி ஆகிய ஊர்களுக்கு நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என சங்கராபுரம் செயற்பொறியாளர் தெரி வித்துள்ளார்.
- சவுரிமுத்து(வயது60), அமல்தாஸ்(52). இவர்கள் 2பேரும் அரசு மதுபான கடைக்கு சென்று விட்டு மீண்டும் சாலையில் நடந்து வந்தனர்.
- வாகனம் மோதி 2 ேபரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் சவரிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சிமாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் இருந்தை கிரா மத்தைச் சேர்ந்த வர்கள் சவுரிமுத்து(வயது60), அமல்தாஸ்(52). இவர்கள் 2பேரும் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பருகம்பட்டு அரசு மதுபான கடைக்கு சென்று விட்டு மீண்டும் மடப்பட்டு நோக்கி சாலையில் நடந்து வந்தனர். அப்போது திருக்கோவிலூ ரிலிருந்து மடப்பட்டு நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 ேபரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் சவரிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.அமல்தாஸ் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று 4 முனை சந்திப்பில் நிறைவுற்றது.
- பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை ஏற்படுத்திய வாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தின வாரத்தையொட்டி ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று 4 முனை சந்திப்பில் நிறைவுற்றது. பேரணியில் பங்கேற்ற பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை ஏற்படுத்திய வாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த பேரணியில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், உதவி திட்ட அலுவலர்கள் நாராயணசாமி, மாரீஸ்வரன், கார்த்தி கேயன், கண்காணிப்பாளர் ஆறுமுகம் மற்றும் அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
- 300 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பரவில் மக்கா ச்சோளம் பயிர் செய்துள்ள னர்.
- மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் காணப்பட்டது. மருந்து தெளித்தும் பயனில்லை .
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே அகரகோட்டாலம் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 300 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பரவில் மக்கா ச்சோளம் பயிர் செய்துள்ள னர். தொடர்ந்து விவசாயிகள் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டு பராமரித்து வந்தனர். இந்நிலையில் மக்காச்சோள பயிரில் கடந்த சில வாரங்க ளாக படைப்புழுக்கள் தாக்குதல் காணப்பட்டது. இதை யொட்டி விவசாயிகள் பயிர்களுக்கு மருந்து தெளித்த னர். இருப்பினும் மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் குறையவில்லை என கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அகர கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (வயது 44) ஆட்டோ டிரைவர். இவர் தனக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலத்தில் கடந்த 60 நாட்களுக்கு முன்பு மக்காச்சோளம் பயிரிட்டு பராமரித்து வருகிறார். இந்நிலையில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் காணப்பட்டது. மருந்து தெளித்தும் பயனில்லை புழுக்கள் சாகாமல் உயிருடன் இருக்கிறது.
ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் செலவு செய்து பயிர்களை பராமரித்து வந்த நிலையில் படைப்புழுக்கள் தாக்குதலால் பயிர்கள் நாசமாகி போனது. எனவே சம்மந்தப்பட்ட வேளாண்மை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் மேலும் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மருந்து வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- தொட்டியிலிருந்து பங்காரம் வழியாக உலகம் காத்தான் செல்லும் சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
- எச்சரிக்கை பலகை கூட அமைக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி :
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தொட்டியிலிருந்து பங்காரம் வழியாக உலகம் காத்தான் செல்லும் சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் ஓடை குறுக்கே செல்வதால் தண்ணீர் செல்வதற்கு வழி அமைத்து பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து செல்வதற்கு அமைக்கப்பட்டது. இந்தப் பள்ளம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே ஏற்பட்டுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை சரி செய்யாமல் உள்ளனர்.
இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பெரிதும் சிரமப்பட்டுள்ளனர். எச்சரிக்கை பலகை கூட அமைக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. பங்காரம் காட்டுக்கொட்டாய் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். காட்டுக்கொட்டாய் பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் சைக்கிளில் அவ்வளியே பள்ளிக்கு சென்று வருகின்றனர். அப்படி செல்லும் பொழுது பள்ளத்தில் விழுந்தது விபத்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் பயணம் செல்லும் வாகனங்கள் பள்ளத்திலே விழுந்தால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு கூட 108 ஆம்புலன்ஸ் அவழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பள்ளத்தினால் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பது மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
- இமானுவேல்ராஜ் மனைவி மரியமத லேயம்மாள் என்பவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே ஈருடையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவரது மனைவி லூர்துசசிகலா (வயது 35). இவருக்கும், இமானுவேல்ராஜ் மனைவி மரியமத லேயம்மாள் என்பவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று இம்மானுவேல்ராஜ், மரியமதலேயம்மாள் ஆகிய இருவரும் சேர்ந்து லூர்துசசிகலாவை ஆபாசமாக திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் இமானுவேல்ராஜ், மரியமதலேயம்மாள் ஆகியோர் மீது மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் தியாகராஜபுரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்துகொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த மொட்டையம்மாள் (வயது 60) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.






