சங்கராபுரம் அருகே இருசக்கர வாகனம் மோதி இறைச்சிக்கடைக்காரர் பலி

பாஷா மூங்கில்துறைப்பட்டில் இறைச்சிக்கடை நடத்தி வந்தார். சிகிச்சை பலனின்றி பாஷா பரிதாபமாக இறந்தார்.
சங்கராபுரம் அருகே இருசக்கர வாகனம் மோதி இறைச்சிக்கடைக்காரர் பலி
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டு தேவ நகரை சேர்ந்தவர் பாஷா(50). மூங்கில்துறைப்பட்டில் இறைச்சிக்கடை நடத்தி வந்தார். இவர் இருசக்கர வாக னத்தில பவுஞ்சிப்பட்டில் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் மூங்கில்துறைப் பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தார். இளையாங்கன்னி கூட்டு சாலை அருகே வந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் பாஷா ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாஷா பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com