பகண்டை கூட்டு ரோடு அருகே ஓடையில் தவறி விழுந்து தொழிலாளி பலி

பகண்டை கூட்டு ரோடு அருகே ஓடையில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.கரும்பு சோலை கட்டை தலையில் வைத்துக்கொண்டு திருவேங்கடம் நடந்து சென்றார்.
பகண்டை கூட்டு ரோடு அருகே ஓடையில் தவறி விழுந்து தொழிலாளி பலி
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டுரோடு அடுத்த அவிரியூர் கிராமத்தை சேர்ந்தவர் திருவேங்கடம் (வயது 42). இவர் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி. சம்பவத்தன்று அதே ஊரில் உள்ள பெரியாயி ஓடை கரையில் கரும்பு சோலை கட்டை தலையில் வைத்துக்கொண்டு திருவேங்கடம் நடந்து சென்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த ஓடைக்குள் தவறி விழுந்து விட்டார்.

இதில் பின் கழுத்தில் பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி திருவேங்கடம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com