search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் ரெயில் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முற்றுகை:  போலீசாருடன் தள்ளுமுள்ளு
    X

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டத்தின் போது போலீசார் உடன் தள்ளு முள்ளில் ஈடுபட்டனர்.

    சின்னசேலம் ரெயில் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முற்றுகை: போலீசாருடன் தள்ளுமுள்ளு

    • 22 சிறிய பாளையம் என திட்டம் போடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
    • காவல் துறை முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை மேற்கொண்டது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் முதல் கள்ளக்குறிச்சி வரை புதிய ரயில் பாதை போடும் பணி 2006 -ல் தொடங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 116 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரயில் பாதை அமைப்பதற்கு ஒரு மேம்பாலம் இரண்டு பெரியபாலம், பத்து தரைப்பாலம், 22 சிறிய பாளையம் என திட்டம் போடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ரயில் பாதை அமைப்பதற்கு நிதி ஒதுக்கி பல ஆண்டுகள் ஆன பிறகும் மிகவும் தாமத மாகவும், மந்தமாகவும் நடைபெ றுகிறது எனவும், ரயில் பாதை பணிகளை துரிதப்படுத்தி விரைவாக முடிக்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சின்னசேலம் ரயில் நிலைய முன்பு மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போரா ட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க தடுப்பு கட்டை அமைத்து காவல் துறை முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை மேற்கொண்டது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்று ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அப்பொழுது போலீசார் அமைத்த தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்ற போது கட்சியினருக்கும் போலீஸ்சாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்து றையை மீறி உள்ளே செல்ல முடியாததால் அதே இடத்தில் அமர்ந்து கோஷம் எழுப்பினார்கள். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தர்கள் சேலம் ரயில்வே டிஎஸ்பி குணசேகரன், உதவி கோட்ட பொறியாளர் வின்சன், கள்ளக்குறிச்சி ஏடிஎஸ்பி விஜயகார்த்திராஜா, டி எஸ் பி ரமேஷ், சின்னசேலம் தாசில்தார் இந்திரா ,உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள் அப்பொழுது வின்சென்ட் கூறுகையில் தற்போதுள்ள பொரு ளாதார சூழ்நிலையில் கூடுதல் நிதி தேவைப்படுவதாகவும், மத்திய அரசிடம் 356 கோடி நிதி பெற உள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டுக்குள் உறுதியாக சின்னசேலத்திற்கும் கள்ளக்குறிச்சிக்கும் இடையிலான ரயில் பாதை அமைக்கும் பணி முடிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதனை அடுத்துமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×